காங்.,கிற்கு தூக்கம் போச்சு: மோடி பேச்சு

Updated : ஏப் 01, 2019 | Added : ஏப் 01, 2019 | கருத்துகள் (21)
Advertisement

வர்தா : பா.ஜ., அலையால் காங் - தேசியவாத காங்.,க்கு தூக்கம் போய் விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் வர்தா பகுதியில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், இஸ்ரோ பிஎஸ்எல்வி சி 45 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது. நமது விண்வெளி விஞ்ஞானிகளுக்கும் இஸ்ரோவிற்கும் எனது வாழ்த்துக்கள். 5 நாடுகளின் 24 க்கும் அதிகமான செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி உள்ளது. இதற்கு முன் செயற்கோள்களை விண்ணில் ஏவப்படுவதை சிலர் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் தற்போது நமது விஞ்ஞானிகளின் சீரிய முயற்சியால் சாமானிய மக்களும் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு இருக்கை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இன்று சாமானிய மக்கள் பலரும் இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டதை பார்த்துள்ளனர்.
காங்., தற்போது துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவலாளிகளை அவமதித்து வருகிறது. 2 நாட்களுக்கு முன் காங்., தலைவர் ஒருவர் கூறுகிறார், மோடி கழிவறைகளுக்கு தான் காவலாளியாக இருந்துள்ளார் என்று. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் தான் உள்ளது. இந்த வெயிலிலும் இங்கு மக்கள் திரண்டுள்ளனர். அதிகரித்து வரும் பா.ஜ., அலையை கண்டு இன்று இரவு காங், தேசியவாத காங்., கட்சிகளுக்கு தூக்கம் போய் விடும். காங்.,ம் தேசியவாத காங்.,ம் கும்பகர்ணனை போல் ஆட்சியில் இருந்த போது எல்லாம் தூங்கி விட்டு, இப்போது எழுந்து பணத்தின் மூலம் அனைத்தையும் மாற்றி விடலாம் என நினைக்கிறார்கள் .
உங்களின் அவதூறுகள் தான் எனக்கு கவுரவம். என்னை கழிவறைகளின் காவலன் எனக் கூறி நீங்கள் அவமதிக்க நினைக்கலாம். இதன் மூலம் நாட்டிலுள்ள ஏராளமான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு நான் காவலாளியாக உள்ளேன் என்பது எனக்கு கிடைத்த பெருமையாக நினைக்கிறேன். மகாராஷ்டிர விவசாயிகளை மறந்தவர் சரத்பவார். இது தேசியவாத காங்.,க்கு சோதனை காலம். எங்கு போட்டியிடுவது என்பது கூட தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். விதர்பாவில் வறட்சி வருவதற்கு அவர்கள் தான் காரணம் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
01-ஏப்-201922:52:19 IST Report Abuse
Mani . V பின்ன, இருக்காதா ஜி? நம்மள் செய்யும் பிராடு, பித்தலாட்டத்தைக் கண்டால் காங்கிரஸுக்கு தூக்கம் போகத்தான் செய்யும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உபயோகப்படுத்தினால் தேர்தல் முடிந்த ஒரு மணி நேரத்துக்குள் தேர்தல் முடிவை அறிவித்து விடலாம். இருந்தாலும் நாம் கோல், மால் செய்ய 18 நாட்கள் எடுத்துக் கொள்கிறோமே
Rate this:
Share this comment
Cancel
01-ஏப்-201921:20:15 IST Report Abuse
ஆப்பு நூறு நாள்ளே கருப்புபணம் 150 லட்சம் கோடி வெளீல கொண்டாருவோம், வருஷம் 2 கோடி பேருக்கு வேலை குடுப்போம்னு முழிச்சிட்டிருக்குற மக்கள் தொடையிலேயே கயிறு திரிச்சு வெற்றிபெற்ற உங்க சாமர்த்தியம் யாருக்கு வரும் ஐயா...
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
01-ஏப்-201919:49:02 IST Report Abuse
RM Modiji ,we all students in April1981 witnessed Rocket launching at Trivandram space centre.(Vikram sarabai), during our college tour.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X