நம் ராணுவத்திற்கு பலம் சேர்க்கும் எமிசாட்

Updated : ஏப் 01, 2019 | Added : ஏப் 01, 2019
Advertisement






ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை 9.27 மணிக்கு பி.எஸ்.எல்.வி., சி-45 ராக்கெட், மின்னணு நுண்ணறிவு செயற்கைகோளான 'எமிசாட்' மற்றும் 28 வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களை சுமந்து விண்ணில் பாய்ந்தது. ராக்கெட் சுமந்து சென்ற செயற்கைகோள்கள் உலகிலேயே முதன்முறையாக 3 வெவ்வேறு புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதன் எடை 436 கிலோ ஆகும். எமிசாட் நமது ராணுவ உளவு செயல்பாட்டுக்கு பெரும் உதவியாக இருக்கும்.





எமிசாட் மூலம் எதிரி நாடுகள் நம்மை வேவு பார்க்க நிறுவிய ரேடார் மற்றும் சென்சார்களின் செயல்களை இந்திய ராணுவத்தினரால் கண்காணிக்க முடியும், மேலும் எதிரிப் பிரதேசங்களின் சரியான நிலப்பகுதியை அறியவும், அங்கு எத்தனை தொடர்பு சாதனங்கள் செயல்படுகின்றன என்பதைக் கண்டறியவும் இந்த செயற்கைகோள் உதவும்.




Advertisement

இரவு நேரங்களிலும் , மேகத்தை ஊடுருவியும் படம் பிடிக்கும் உயர்தர பனோரமாடிக் கேமரா பொருந்தியது. எந்த ஒரு பொருளையும் துல்லியமாக படமெடுத்து அனுப்பவும், எந்த ஒரு தனிமனிதனின் அல்லது குழுவின் அசைவையும், ராணுவத்தின் தடகளங்களை படமெடுத்து கொடுக்கும். இது இந்திய ராணுவத்திற்கு மேலும் பலம் சேர்க்கும்.





நமது இஸ்ரோ அதிகாரிகளின் இந்த சாதனையை ஏன் பொதுமக்கள் நேரில் பார்த்து பராட்ட வைப்பு தரக்கூடாது என்ற நீண்ட கால கோரிக்கை காரணமாக முதன் முதலாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.




இந்த மகத்தான நிகழ்வு நிகழ்ந்த போது அங்கு இருந்த பொதுமக்கள் மகிழ்ந்தது போல நம் மனமும் மகிழ்ந்தது இந்தியனாக இருப்பதை எண்ணி உள்ளம் பெருமிதம் கொண்டது.




-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X