அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெற்றி பெற முடியாதவர்கள் போடும் தப்புக்கணக்கு: துரைமுருகன்

Updated : ஏப் 01, 2019 | Added : ஏப் 01, 2019 | கருத்துகள் (72)
Advertisement

சென்னை: 'எனது வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரிச்சோதனை, வெற்றி பெற முடியாதவர்கள் போடும் தப்புக்கணக்கு' என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.






திமுக பொருளாளர் துரைமுருகனின், வேலூர் காட்பாடி வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனைக்குப்பின் அவர் அளித்த பேட்டி: வருமான வரித்துறை சோதனை முழுக்க முழுக்க அரசியல் காரணமாக, அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்களால் நடத்தப்பட்டுள்ளது. வருமான வரித்துறையினர் வந்தார்கள்; ஒன்றும் இல்லை என்றதும் சென்றார்கள்.

இச்சம்பவத்தால், மக்கள் மனதில் என்ன மாற்றம் ஏற்படும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. என்னை அடக்க நினைத்தாலும் தொண்டர்களின் அன்பு போதும். தலைவர் இல்லை என்றாலும் அந்த இடத்தில் நின்று தளபதி எங்களை வழிநடத்துகிறார்.





வேலூரில் லோக்சபா தேர்தலையும், இடைத்தேர்தலையும் தடுக்கும் முயற்சியில் இச்சோதனை நடைபெற்றுள்ளது. இது வெற்றி பெற முடியாதவர்களின் போடும் தப்புக்கணக்கு. சோதனையால், 3 நாட்கள் பிரசாரத்திற்கு செல்லவிடாமல் என்னை தடுத்துவிட்டார்கள். வருமானவரி சோதனையை நடத்தியது மத்திய, மாநில அரசுகள் தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
03-ஏப்-201905:46:09 IST Report Abuse
meenakshisundaram 'வெற்றி 'என்பது இவனுங்களைப் பொறுத்தவரை 'பணம் கொடுத்து வாங்குவதே"
Rate this:
Share this comment
Cancel
Durai - Kozhikode,இந்தியா
02-ஏப்-201914:11:09 IST Report Abuse
Durai நண்பர்களே....வெறும் கருத்து எழுதுவதால் மட்டும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. திமுக ஆட்கள் எவ்வளவு கொள்ளைக்காரர்கள் என்பதை உங்களால் முடிந்த அளவு மக்களிடம் கொண்டு சென்று அந்தந்த தொகுதியில் உள்ள மற்ற நல்ல வேட்பாளர்களுக்கு ஒட்டுப் போடச் செய்யுங்கள்
Rate this:
Share this comment
Cancel
RAMESH - CHENNAI,இந்தியா
02-ஏப்-201912:42:59 IST Report Abuse
RAMESH really wondering and shocking how he have this much money, even They are not ruling the party last 8 years....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X