அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வாய்ச்சவடால்,தி.மு.க., துரைமுருகன்,சிக்கினார்,வீட்டில்,ரூ.33 கோடி,பணம்

வேலுார்: வாய்ச் சவடால் அடித்த தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நேற்று வசமாக சிக்கினார். அவருக்கு நெருக்கமானவர், உதவியாளர் வீடுகளில் நடந்த அதிரடி சோதனையில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 33 கோடி ரூபாய் மதிப்புள்ள கத்தை கத்தையாக பணம், தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வேலுார் லோக்சபா தொகுதியில் வார்டு வாரியாக வாக்காளர்களுக்கு வினியோகிக்க ஏற்பாடு செய்திருந்த இப்பண மூடைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து பறிமுதல் செய்தனர். இதனால் வேலுார் தொகுதியில் தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

'இரண்டு நாட்களுக்கு முன் தன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பெரிதாக எதுவும் சிக்கவில்லை; நாங்கள் செலவுக்கு வைத்திருந்த 10 லட்சம் ரூபாயை எடுத்து சென்றனர். இவ்வளவு பணம் வைத்து கொள்ள சட்டத்தில் இடமுள்ளது' என துரைமுருகன் கிண்டலடித்து இருந்தார். அதையடுத்து நேற்று மீண்டும் அவரது வீடு, கல்லுாரி, நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரிச் சோதனை நடந்தது. அதில் தான் இவ்வளவு பணமும் தங்கமும் சிக்கியுள்ளன. இதன் வாயிலாக துரைமுருகன் வருமான வரித் துறை வலையில் சிக்கியுள்ளார்.

கடந்த வாரம் சென்னையில் ஒப்பந்ததாரர் சபேசன் என்பவர் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் 15 கோடி ரூபாய் சிக்கியது. அதன் தொடர்ச்சியாக தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான துரைமுருகன் வீட்டில் தேர்தலுக்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

வேலுார் லோக்சபா தொகுதியில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். போலீசார் கொடுத்த தகவல் அடிப்படையில் மார்ச் 30ம் தேதி அவர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் 10 லட்சம் ரூபாய் சிக்கியது. இது தி.மு.க.வை அதிர்ச்சி அடைய செய்தது. வருமான வரித்துறை சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பெரிதாக பணம் சிக்காததால் வருமான வரித் துறையை கிண்டலடித்தனர்.

துரைமுருகன் வாய்ச்சவடால்:


இதையடுத்து, 'கதிர்ஆனந்த் வெற்றி பிரகாசமாக உள்ளதை பொறுத்து கொள்ள முடியாதவர்கள் வருமான வரித் துறையினரை ஏவி விட்டு சோதனை நடத்தி முதுகில் குத்தியுள்ளனர். எங்கள் செலவுக்கு வைத்திருந்த 10 லட்சம் ரூபாயை எடுத்து சென்றனர்' என துரைமுருகன் கூறியிருந்தார்.

இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக வார்டு வாரியாக வாக்காளர்களுக்கு பணம், தங்க காசுகளை பட்டுவாடா செய்ய துரைமுருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்து வருவதாக வேலுார் லோக்சபா தொகுதி தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான ராமனுக்கு தகவல் கிடைத்தது.

புகார்களின் மீது விசாரணை நடத்துமாறு கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 10:00 மணி முதல் வேலுாரில் பல இடங்களில் பறக்கும் படையினரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

காட்டி கொடுத்த காலி கவர்:


அப்போது வேலுார் கிரீன் சர்க்கிள் வழியாக வந்த வேனை பறக்கும் படையினர் மடக்கி சோதனையிட்டனர். அதில் கட்டுக்கட்டாக காலி பேப்பர் கவர்கள் இருந்தன. விசாரணையில் மொத்தமாக 'ஆர்டர்' பெற்று கடைகளில் விற்பனைக்கு எடுத்துச் செல்வதாக கூறியுள்ளனர். சந்தேகமடைந்த பறக்கும் படையினர் கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர் அவரது அறிவுரைப்படி வேனை செல்ல அனுமதித்து பின்தொடர்ந்தனர்.

அந்த வேன் காட்பாடி அருகே பள்ளிகுப்பத்திற்கு சென்றது. வழியில் சில இடங்களில் நின்று சென்றது. பள்ளிகுப்பத்தில் உள்ள ஒரு இடத்தில் காலி கவர் மூடைகளை இறக்கினர். இது குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காலி கவர் இறக்கப்பட்ட இடம் தி.மு.க. பிரமுகருக்கு சொந்தமானது என தெரிய வந்ததும் வருமான வரித்துறையினர் தேர்தல் செலவின பார்வையாளர்கள் மற்றும் பறக்கும் படையினர் அவர்களை பிடிக்க வியூகம் வகுத்தனர்.

துப்பாக்கி ஏந்திய 50 துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு முதலில் பள்ளிகுப்பத்தில் உள்ள தி.மு.க. கிளை செயலர் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான சிமென்ட், இரும்பு குடோனுக்கு சென்றனர். அதிகாரிகளை பார்த்ததும் குடோனுக்கு பக்கத்து வீட்டில் இருந்த சீனிவாசனின் சகோதரி விஜயா, அவரது கணவர் தாமோதரன் ஆகியோர் குடோனையும், வீட்டையும் பூட்டி உள்ளே இருந்தனர். 'கதவை திறக்கா விட்டால் உடைத்து உள்ளே வருவோம்' என அதிகாரிகள் எச்சரித்தனர்; கதவு திறக்கப்பட்டது. வீட்டின் உள்ளே சென்றபோது அங்கு கத்தை கத்தையாக பண மூட்டைகள் இருந்தன. மேலும் அங்கிருந்து சிமென்ட், இரும்பு குடோனுக்கு செல்ல சின்னதாக சுவர் தடுப்பு இருந்தது.

அதிகாரிகள் சுவரை தாண்டி குதித்து உள்ளே சென்ற போது மலை போல் பணம் கட்டுக்கட்டாக குவிக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அருகில் உள்ள வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் இயந்திரங்கள் எடுத்து வரப்பட்டு ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டன. மதியம் 2:00 மணி நிலவரப்படி 18 கோடி ரூபாய் இருந்தது. இந்த பணம் வேலுார் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு தலா 2,000 ரூபாய் வீதம் பட்டுவாடா செய்ய தனித்தனி கட்டு போடப்பட்டு வாக்காளர் பெயர் ஒட்டிய கவர்களில் வைக்கப்பட்டு வார்டு வாரியாக தெரு வாரியாக பிரிக்கப்பட்டு தனித்தனி பண்டலாக கட்டி தயாராக வைத்திருந்தனர்.

வேலுார் தொகுதிக்குப்பட்ட சி.என்.பாளையம், முல்லை நகர், சி.எம்.சி.காலனி, சத்துவாச்சாரி ஆகிய இடங்களின் வார்டு எண் குறிக்கப்பட்டு 200 ரூபாய் நோட்டுகள் கொண்ட கட்டு ஒவ்வொரு கவரிலும் போடப்பட்டிருந்தது. இதையடுத்து பள்ளிகுப்பத்தில் உள்ள சீனிவாசன் வீட்டிலும் சோதனை நடந்தது. அங்கும் கோடிக்கணக்கான ரூபாயை அதிகாரிகள் பறி முதல் செய்தனர்.

உதவியாளர் வீட்டில் 'ரெய்டு':


இதற்கிடையே அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்படி காட்பாடி செங்குட்டையில் உள்ள துரைமுருகன் உதவியாளர் அஸ்கர் அலி வீட்டுக்கு சோதனையிட வருமான வரித்துறையினர் சென்றனர். அதிகாரிகளை பார்த்ததும் அஸ்கர் அலி 5 கோடி ரூபாயை அவர்களிடம் எடுத்து வந்து கொடுத்து விட்டார்.

வாக்காளர்களுக்கு கொடுக்க தனக்கு இந்த பணம் வழங்கப்பட்டதாகவும் பணத்தை தனித்தனியாக பிரித்து போட காலி கவரை எதிர்பார்த்து காத்திருந்ததாகவும் தெரிவித்தார். அதே சமயம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு ரசீது கொடுக்குமாறு அஸ்கர் அலி கேட்டார்

* வஞ்சூரில் உள்ள தி.மு.க. கிளை செயலர் பெருமாள் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 10.40 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது
* காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள கதிர்ஆனந்த்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லுாரியிலும் இரண்டாவது முறையாக நேற்று சோதனை நடத்தப்பட்டது
* தொடர்ந்து காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன் வீட்டுக்கு சோதனை நடத்த அதிகாரிகள் சென்றனர். துரைமுருகன் சோளிங்கரில் நடக்கும் பிரசார கூட்டத்திற்கு சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வரும் வரை அதிகாரிகள் காத்திருந்தனர். அவர் வந்த பின் அங்கும் சோதனை நடத்தினர். சோதனை நடந்த பகுதிக்குள் அவரை அனுமதிக்கவில்லை. துரைமுருகன் வீட்டின் வெளியே உட்கார்ந்திருந்தார்

* தி.மு.க. பிரமுகர் பள்ளிகுப்பம் சீனிவாசன் வீட்டில் இருந்து ஏராளமான தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது
* தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்தை கிங்ஸ்டன் பொறியியல் கல்லுாரியில் வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தை வருமான வரித்துறை உயர் அதிகாரிகளுக்கும், தேர்தல் ஆணைத்திற்கும் அனுப்ப உள்ளதாக தெரிகிறது.

அரவக்குறிச்சி பாணி:

கடந்த 2016 சட்டசபை தேர்தலின்போது 4 கோடி ரூபாய் அ.தி.மு.க. பிரமுகரான அன்புநாதன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. அரவக்குறிச்சி தொகுதி வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைத்திருந்ததாக கூறி தேர்தல் ஆணையம் அரவக்குறிச்சி தேர்தலை ரத்து செய்தது. ஆனால் நேற்று வேலுார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. பிரமுகர்களின் வீடு, குடோனில் இருந்து 33.40 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் வேலுார் தொகுதி தேர்தல் உறுதியாக ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தேர்தல் ரத்தாகுமா:

தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது: வேலுாரில் இரு தினங்களுக்கு முன் நடந்த சோதனையின் தொடர்ச்சியாக நேற்றும் சில இடங்களில் சோதனை நடந்துள்ளது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் விபரம் தெரியவில்லை. சோதனை முழுமை அடைந்த பின் வருமான வரித்துறை அறிக்கை அளிக்கும். வாகனங்களில், வீடுகளில் சோதனை நடத்தும்போது அங்கு பறிமுதல் செய்யப்படும் பணம் தேர்தல் தொடர்புடையதா என்பதை கண்டறிய சில வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. அந்த அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் தேர்தலுக்கும் தொடர்புள்ளதா என்பதை அறிய முடியும். தேர்தல் செலவின பார்வையாளர்கள், பொதுப் பார்வையாளர் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரடியாக அறிக்கை அளிப்பர். வருமான வரித் துறை, போலீசார், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோரும் தனி தனி அறிக்கை அளிப்பர். அவற்றை டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைப்போம். தேர்தல் ஆணையம் மேல் நடவடிக்கை குறித்து முடிவு செய்யும், என்றார்.Advertisement

வாசகர் கருத்து (104)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
03-ஏப்-201916:06:44 IST Report Abuse

ganapati sbஉதயநிதிக்கு கனிமொழிக்கு போட்டியாக கதிர் ஆனந்த் உருவாக கூடாது என கூட இருந்தே குழி பறிக்க பட்டாரமே கோடவுன் முருகன்

Rate this:
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
04-ஏப்-201913:47:10 IST Report Abuse

Ramalingam Shanmugamசுடாலின் சூழ்ச்சியில் துரை சிக்கிவிட்டார் ...

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
03-ஏப்-201911:45:27 IST Report Abuse

Malick Rajaஇவரின் மறைமுகமான, கமுக்கமாக, ரகசியமான சில சூழ்ச்சிகள் இவருக்கு உலை வைத்துவிட்டது.. காழ்புணர்ச்சி, சூழ்ச்சி, கபடவேலைகள் நிலைப்பதில்லை .. இவருக்கு என்ன கேடு வந்தது ஏன் மகனை கொண்டுவரவேண்டும் ..பலரையும் தாழ்த்தி தனது மகனை முற்படுத்தியதின் விளைவு பெரிய இழப்புக்கு ஆளாக்கிவிட்டது

Rate this:
jagan - Chennai,இலங்கை
02-ஏப்-201923:04:51 IST Report Abuse

jaganஇவர் பொதுபணி" துறை அல்லக்கையாய் இருந்த போது வாரம் 50 கோடி வரை வருமானம் , இதெல்லாம் ஜுஜுபி

Rate this:
மேலும் 100 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X