'கண்ணாமூச்சி ஆடும் போலீசார்...!'

Added : ஏப் 01, 2019
Advertisement
இப்பத்தான் 'குஷி'யாகியிருக்காங்க,' என்று மொபைல்போனில் பேசியவாறே, மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.''அப்டி என்னக்கா குஷி,'' என்றவாறே மித்ரா, ஒரு பெரிய டம்ளரில் மோர் கொடுத்தாள்.''பரவாயில்லையே, என் தேவையை தெரிஞ்சுகிட்டு கொடுத்தாய். அதே மாதிரி, வைட்டமின் 'ப' இல்லாம, சோர்வா இருந்த கட்சிக்காரங்களுக்கு, 'செம' கவனிப்பாம்,''''அக்கா... எந்த
 'கண்ணாமூச்சி ஆடும் போலீசார்...!'

இப்பத்தான் 'குஷி'யாகியிருக்காங்க,' என்று மொபைல்போனில் பேசியவாறே, மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.''அப்டி என்னக்கா குஷி,'' என்றவாறே மித்ரா, ஒரு பெரிய டம்ளரில் மோர் கொடுத்தாள்.''பரவாயில்லையே, என் தேவையை தெரிஞ்சுகிட்டு கொடுத்தாய். அதே மாதிரி, வைட்டமின் 'ப' இல்லாம, சோர்வா இருந்த கட்சிக்காரங்களுக்கு, 'செம' கவனிப்பாம்,''''அக்கா... எந்த கட்சியில்?''''அ.தி.மு.க.,வுல தான் சொல்றேன். திருப்பூர் தொகுதியில இருக்கற, 'பூத்' கமிட்டிக்கு, தலா, 5 ஆயிரம் ரூபா பட்டுவாடா பண்ணிட்டாங்களாம். வார்டு பொறுப்பாளர்களுக்கு, 10 ஆயிரமாம். இதை தெரிஞ்சுகிட்ட தோழர்களும், கொடுத்திட்டாங்களாம். ஆனா, அது போதாதுன்னு, தி.மு.க., காரங்க, காதுபடவே பேசறாங்களாம்,''''வேட்புமனு தாக்கல் நேரத்தில், ஏதோ ஒரு வேட்பாளர் இந்தியில் பேசுனாராமா?''''ஆமாண்டி உண்மைதான். முன்னாள் ராணுவ வீரரின் வேட்புமனு தள்ளுபடியானது. அதனால, கலெக்டர் கிட்ட அவர் எவ்வளவு சொல்லியும் கேட்கல. 'அப்சர்வர்'க்கு தமிழ் தெரியாதுனு, 'இந்தி'யில பேசி, பிரச்னையை சொன்னாராம். கவனமா கேட்ட அவரும், பதில் சொல்லாம போயிட்டாரு,''''தேர்தலில் பரபரப்புக்கு பஞ்சமேயில்லை போங்க. எம்.ஜி.ஆர்., சிலை ஏன் மறைக்காம விட்டாங்கன்னு தெரியுங்களா?''''ஏன்... என்ன காரணமாம்?''''அ.தி.மு.க., வேட்பாளர் சென்னையில் இருந்து வந்து,எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை போட்டுட்டு, ரெண்டு நாள் கழிச்சு சாவகாசமா மறைச்சாங்க. இதை கவனிச்ச தி.மு.க., நிர்வாகி ஒருவர், இது விஷயத்தில், ஏதோ திட்டமிட்டு, காத்திருந்த மாதிரியே, தேர்தல் அலுவலர் நடந்துட்டாருன்னு, கட்சி தலைமைக்கு சொன்னாராம். ஆனாலும், 'நோ யூஸ்'னு புலம்பறாராம்க்கா,''''அத்திக்கடவு - அவிநாசி திட்ட அடிக்கல் நாட்டு விழாவில், பட்டாவை அள்ளி வீசுனாங்க தெரியுமா?''''ஆமாங்க்கா.. அதிலென்ன?''''ஏற்கனவே, வீடு, நிலம், அப்புறம் பட்டா வாங்கியிருக்கும் பயனாளிகளுக்கும் மறுபடியும் பட்டா கொடுத்திருக்காங்க. இதுக்காக, ஒரு பட்டாவுக்கு, 10 ஆயிரம் ரூபாய் தனியா வாங்கிட்டாங் களாம். இதைப்பத்தி, சி.எம்., செல்லுக்கு, அப்பகுதி மக்கள் பெட்டிஷன் அனுப்பிட்டாங்களாம். தேர்தலுக்கு அப்புறமா, 'கச்சேரி' காத்திருக்குதாம்,'' என்று சிரித்தாள் சித்ரா.மீண்டும் ஒரு டம்ளர் மோரை சித்ராவுக்கு கொடுத்த மித்ரா, ''எப்படா... போலாமுன்னு, காத்திருக்காங்களாம்,'' என்றாள்.''யாருடி அது?''''திருப்பூர் 'சிட்டி' போலீசில், புதுசா வந்துருக்கிற அதிகாரிகள், தங்களுக்கு கீழ் உள்ளவர்கள் என்ன வேலை செய்யிறாங்க, ஓ.பி., யாராவது அடுச்சுட்டு இருக்காங்களா என, எதை பத்தியும் கண்டுக்கறதில்லை,''''இப்படி இருந்தா.. எப்படி மித்து?''''இல்லக்கா.. எலக்ஷன் முடிஞ்ச கையோடு, பழைய இடத்துக்கே போயிடலாமுன்னு, முடிவோட இருக்காங்களாம். அதனால, கண்டுக்கறதில்லையாம்,'' என்று மித்ரா, சொன்னதும், அவளின் மொபைல் போன், சேவல் போல கூவியது.அதைக்கேட்ட சித்ரா, ''ஏன்... மித்து. அலாரம் டைம் மாத்தி வச்சிட்டியா? சேவல் சத்தத்தை கேட்டதும், பூண்டி ஸ்டேஷனில், அதிகாரி ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் நினைவுக்கு வந்திடுச்சு''''அது... என்ன கண்ணாமூச்சி ஆட்டம்க்கா?''''அந்த ஸ்டேஷன் லிமிட்டில், சேவல் கட்டு நடத்தினதாக 'கேஸ்' போட்டு சிலரை அரெஸ்ட் செஞ்சாங்க. ஆனா, நின்னபாடு இல்ல. நடத்துற ஆளை மட்டும் விட்டுடறாங்க. மொத்தத்தில், அவங்க விளையாட, இவங்க பிடிக்க என, போலீசார் கண்ணாமூச்சி ஆட்டம் நல்லாவே விளையாடறாங்க,''''இது எலக்ஷன் டைம்ங்கறதால, எல்ேலாரும் இஷ்டத்துக்கு பூந்து வெளையாடறாங்க. அதில, இதுவும் ஒண்ணுங்க''''இந்த மங்கலம் ஸ்டேஷன் விவகாரம் தெரியுமா?''''ம்..ஹூம்,'' என, உதட்டை பிதுக்கினாள் மித்ரா.''வஞ்சிபாளையம் ரோட்டில், ஸ்டேஷனுக்கு புதுசா கட்டடம் கட்டி, மாத்திட்டு போயிட்டாங்க. பழைய ஸ்டேஷன் இருந்த இடத்தில, ஆளாளுக்கு அந்த இடத்தை ஆக்கிரமிச்சுட்டாங்க. ஆனா, போலீசார் எதையும் கண்டுக்கவேயில்லையாம்,''''அவங்க.. எதுக்கு கண்டுக்கறாங்க. ைஹவேஸ்காரங்க என்ன பண்றாங்க. வந்து பார்த்துட்டு,ஆக்ஷன் எடுக்க வேண்டியதுதானே. அந்த இடத்திலேயே ஏகப்பட்ட டிராபிக் ஜாம், ஆக்ஸிடென்ட் ஆயிட்டே இருக்குது,''''நீ.. சொல்றதும் கரெக்ட்தாண்டி மித்து. நடவடிக்கை எடுக்க வேண்டியவங்க, கண்டுக்கவே மாட்டேங்குறாங்க. என்னத்தை சொல்ல...,'' சித்ரா சொல்லி முடிக்கவும், 'உங்கள் பொன்னான வாக்குகளை...' என, ஏதோ ஒரு கட்சியின் பிரசாரம் ஒலித்தது.''ஏக்கா.. தோழர்களுக்கு, சரியாக 'தோள்' கொடுப்பதில்லை, என, கூட்டணி தலைமை கட்சி மேல குற்றச்சாட்டு வருதாம்,''''அப்படியா.. எனக்கு தெரியாதே?''''நல்லுாரில், தேர்தல் பணிமனைக்கு, 'கேண்டிடேட்' சென்ற போது, அப்பகுதி நிர்வாகிகள் யாரும் வரலையாம். இத்தனைக்கும் முன்கூட்டியே தகவல் சொல்லியும் கண்டுக்கலையாம். என்ன, ஏதுன்னு விசாரிச்சா, பகுதி செயலாளர் மாஜி மினிஸ்டரோட கோஷ்டியாம். அதனால, வேட்பாளரை பார்க்க போகக்கூடாதுன்னு, மா.செ., கோஷ்டி கட்டளை போட்டாங்களாம்,''''இதை தெரிஞ்சுகிட்ட, வேட்பாளர், 'இப்பவே இப்டி கண்ணை கட்டுதே. எலக்ஷன் முடியறக்குள்ளே எதுக்கெல்லாம், வளைஞ்சு, நெளியணுமோன்னு,' புலம்பினாராம்,'' மித்ராசொல்லி முடித்ததும், ''டைம் ஆச்சுப்பா.. கெளம்பறேன்,''என்று எழுந்தாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X