அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நம்புங்கள்!
நான் ஹிந்து மதத்துக்கு எதிரானவன் அல்ல
என் மனைவி கோவில் செல்லும் வழக்கம் உள்ளவர்
'தடாலடி'யாக, 'பல்டி' அடிக்கிறார் ஸ்டாலின்

''நான் ஹிந்து மதத்துக்கு எதிரானவன் அல்ல; நம்புங்கள். என் மனைவி கோவிலுக்கு செல்லும் வழக்கம் உள்ளவர். என்றைக்காவது போகக் கூடாது என, அவரை தடுத்திருக்கிறேனா; அது, அவரது விருப்பம். தி.மு.க., ஹிந்துக்களுக்கு எதிரி அல்ல,'' என, அரக்கோணத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், 'தடாலடி'யாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'பல்டி' அடித்தார்.

ஹிந்து,எதிரானவன் அல்ல,ஸ்டாலின்


சமீபத்தில், தி.க., தலைவர் வீரமணி, ஹிந்து கடவுளான, கிருஷ்ணர் குறித்து பேசியது, ஹிந்துக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு, தி.மு.க., தரப்பில், கண்டனம் தெரிவிக்காததால், ஹிந்துக்கள் ஓட்டு, தி.மு.க.,விற்கு எதிராக திரும்புமோ என்ற அச்சம், தி.மு.க., நிர்வாகிகளிடம் ஏற்பட்டது. 'பிரசாரத்திற்கு வீரமணியை அழைக்க மாட்டோம்' என, தி.மு.க.,வினர், ஸ்டாலினிடம் தெரிவித்தனர். அவர்களை சமாதானப் படுத்திய ஸ்டாலின், வீரமணிக்கு கண்டனம் தெரிவிக்காமல், ஹிந்துக்களை சமாதானப்படுத்தும் விதமாக, 'நான் ஹிந்துக்களுக்கு எதிரி அல்ல' எனக் கூறி உள்ளார்.

தவறான கருத்து:


நேற்று, அரக்கோணத்தில் நடந்த, தி.மு.க., பிரசார பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது: அரக்கோணம் தொகுதி, தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகன், ஆன்மிகவாதி. சிலர் இன்றைக்கும், ஹிந்துக்களுக்கு, தி.மு.க., எதிரி என விமர்சிக்கின்றனர். ஜெகத்ரட்சகனை பார்த்த பிறகுமா, அப்படி சொல்கிறீர்கள்...

தேர்தல் வந்த காரணத்தால், சில பத்திரிகைகள், குறிப்பாக, 'தினமலர்' பத்திரிகையில், தொடர்ந்து திட்டமிட்டு, நாங்கள் ஏதோ ஹிந்துக்களுக்கு எதிரி போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். நாங்கள் என்றைக்கும் ஆண்டவனுக்கு, ஆண்டவனை வணங்கக் கூடியவர்களுக்கு, எதிராக இருந்தது இல்லை.

கருணாநிதி அடிக்கடி, 'நாங்கள் ஆண்டவனை ஏற்றுக் கொண்டு இருக்கிறோமோ, இல்லையா, எங்களை ஆண்டவன் ஏற்றுக் கொண்டு இருக்கின்றார். அதுபோதும் எங்களுக்கு' என, கூறி உள்ளார். 'கோவில்கள் கூடாதென்பதல்ல; கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது' என்பது தான் என் கொள்கை. என் மனைவி என்றைக்கும், கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறார். ஒருநாள் தவறுவதில்லை. நான் தடுக்கிறேனா... என்றைக்காவது போகக் கூடாது என, சொல்லி இருக்கின்றேனா; அது, அவரது விருப்பம்.

'வேண்டுமென்று திட்டமிட்டு, ஏதோ ஹிந்துக்கள் கோவிலுக்கு செல்வதை, தி.மு.க., தடை செய்கிறது. தி.மு.க., ஹிந்துக்களுக்கு விரோதியாக இருக்கிறது' என, பிரசாரம் செய்கின்றனர். அதை நாட்டு மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. நான், தி.மு.க., தலைவராக பொறுப்பேற்றதும், பொதுக்குழுவில் பேசுகிறபோது, 'எல்லா மதத்தினருக்கும், நான் பாதுகாவலனாக இருப்பேன். எங்கள் கட்சி துணை நிற்கும். 'ஜாதி, மத பேதம் பார்க் மாட்டோம். எந்த மதத்தினருக்கும், தி.மு.க., எதிரானது அல்ல' என்றேன்.

ஆனால், தொடர்ந்து சில ஊடகங்கள், பத்திரிகை கள், தவறான கருத்துகளை பரப்புகின்றன. எங்களுக்கு அதைப்பற்றி கவலை இல்லை. எங்களுக்கு மக்கள் இருக்கின்றனர். அவர்களது ஆதரவு இருக்கிறது. எனவே, அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. மோடியை பொருத்தவரை, அவர் ஒரு சர்வாதிகாரி. மாநிலத்தில் உதவாக்கரை ஆட்சி நடக்கிறது.

Advertisement

முதல்வர், இ.பி.எஸ்., உதவாக்கரை. இந்த நிலையில்தான் தேர்தலை சந்திக்கிறோம். இரண்டு ஆட்சிகளையும் மாற்ற வேண்டும். நம் உடலில் இரண்டு கட்டிகள் வந்தால், இரண்டையும் அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதுபோல், இரண்டு ஆட்சிகளையும் அகற்ற வேணடும்.

கோவையில், பெங்களூரில் நடந்த பேரத்தின் அடிப்படையில், பெரிய அய்யாவும், சின்ன அய்யாவும், அ.தி.மு.க.,வோடு கூட்டணி வைத்துள்ளனர். வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் இருந்த, சொத்துகள் அனைத்தை யும், ராமதாஸ், தன் குடும்ப சொத்துகளாக மாற்றிக் கொண்டிருக்கிறார். இது குறித்த விபரங்கள் அனைத்தும், முதல்வரிடம் உள்ளது.

கூட்டணி:


திருச்செந்துார், தென்காசி, குற்றாலம், விருத்தாசலம், சிதம்பரம், சென்னை ஆகிய இடங்களில் இருந்த, வன்னியர்களுக்குரிய சொத்துகள் அனைத்தையும், அவரது துணைவியார் பெயருக்கும் மாற்றியுள்ளார். தமிழக அரசு நினைத்தால், அவை அனைத்தை யும் கைப்பற்றி விட முடியும். இதிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான், அந்த கூட்டணியில், ராமதாஸ் இடம் பெற்று உள்ளார். இவ்வாறு, அவர் பேசினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (162)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
08-ஏப்-201915:24:30 IST Report Abuse

oceஎன் சின்ன வயதில் என் ஊரில் இருந்த ஓட்டலில் அதன் முதலாளி ஒரு திக பேர்வழி. ஓட்டல் வெளியே பிராமணர்களும் சாப்பிடும் இடம் என்று எழுதி வைக்கவேண்டிய பலகையில் பிராமணர் கள் சாப்பிடும் இடம் என்று எழுதி வைத்திருந்தார்.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
08-ஏப்-201915:12:35 IST Report Abuse

oceஹலோ சார் ! உம் தந்தை அவருக்கு தந்தை அவரது முன்னோர்கள் எல்லாம் இந்துக்கள் இல்லையா. அவர்கள் எல்லாம் முட்டாள்களா. நீயும் உன் தந்தை கருணாநிதியும் மட்டும் தான் பகுத்தறிவு வாதிகளா.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
08-ஏப்-201913:47:36 IST Report Abuse

oceகோவில் கூடாது என்பதற்காக அல்ல. அது கொலைகாரரக்ளின் கூடாராமாக இருக்கக்கூடாது என்று வசன அடுக்கில் சொன்னார். திமுக தோன்றுவதற்கு முன்னும் தோன்றிய பின்னும் அவர் சொன்னது போல் எந்தவொரு இந்து கோவிலிலும் அப்படி யொரு அசம்பாவித நிகழ்ச்சி இந்தியாவில் நடை பெற்றதில்லை. இந்து கோயில் புனிதத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கில் பராசக்தியில் ஒரு காட்சியை உறுவாக்கியவர் இவர் தந்தை.

Rate this:
மேலும் 159 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X