பொய் இல்லாத தேர்தல் அறிக்கை; ராகுல்

Updated : ஏப் 02, 2019 | Added : ஏப் 02, 2019 | கருத்துகள் (130)
Advertisement

புதுடில்லி: காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் எந்த பொய்யும் இல்லை என்றும், மக்களின் எண்ணமே இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது என்றும் வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் காங்., தலைவர் ராகுல் பேசுகையில் குறிப்பிட்டார்.






டில்லியில் நடந்த விழாவில் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் பேசுகையில்: இது இந்திய மக்களின் கருத்தை கொண்டு தேர்தல் அறிக்கை இயற்றப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்களின் குரலாக இருக்கும் என்றார்.


புதிய முன்னேற்றம்: மன்மோகன்சிங்


விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது: மாணவர்கள், விவசாயிகள், ஏழைகள், பெண்கள் தலித்துகள், சிறுபான்மை, சிறு, குறு தொழில், சுகாதாரம், தொழிலாளர்கள்,. நலம் மற்றும் வளம் தொடர்பானது. வறுமையை ஒழிக்க காங்., கடும் பாடுபடும். 2020 ல் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும். இந்தியா புதிய முன்னேற்றத்தை நோக்கி செல்லும். புதிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களின் உணர்வுகள் இந்த அறிக்கையில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மன்மோகன்சிங் பேசினார்.





காங்., தலைவர் ராகுல் பேசுகையில்: இந்த அறிக்கை தயாரிக்கப்படும் முன்பு நான் தயாரித்தவர்களிடம் மக்களின் எண்ணங்களாக இருக்க வேண்டும். உண்மையானதாக இருக்க வேண்டும். பொய் எதுவும் இருக்கக்கூடாது என்றேன். ஏனெனில் தற்போதைய ஆட்சியாளர்கள் பல பொய்களை சொல்லி வருகின்றனர். பிரதமர் மோடி 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என பொய் வாக்குறுதி அளித்தார்.


5 முக்கிய கொள்கைகள்


இந்த தேர்தல் அறிக்கையில் 5 முக்கிய கொள்கை விஷயங்களை முன் வைத்துள்ளோம். நாங்கள் முதலில் ஏழைமக்களுக்கு மாதம்தோறும் ரூ.6 ஆயிரம் வழங்குவோம். வறுமையை ஒழிப்பதே காங்கிரசின் நோக்கம். விவசாயிகள் நலன் காக்கப்படும், 22 லட்சம் பேருக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியில் முக்கிய கவனம் செலுத்தப்படும். சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இது போன்ற விஷயங்களே இன்றைய தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


வயநாட்டில் போட்டி ஏன் ?


தென் மாநிலத்தில் போட்டியிடுவது ஏன் என ஒரு நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு ராகுல் அளித்த பதில்:
தென் மாநிலங்கள் பா.ஜ., அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தென் இந்திய மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தவே நான் கேரளாவின் வயநாட்டில் போட்டியிடுகிறேன் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (130)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
03-ஏப்-201905:28:26 IST Report Abuse
meenakshisundaram ஆமா indha அறிக்கையின் வெளியே பொய்யே இல்லை ,எல்லாம் உள்ளுக்குளேயே இருக்கு,- அண்ணாதுரையின் மூணு படி அரிசி திட்டம் போல
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
02-ஏப்-201921:11:01 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN யாரை ஏமாற்றும் பொய்யான பதவிபேராசை அறிக்கையை . ஊழலுக்கு எதிரான மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள். தற்போது மக்கள் ஞாயத்தின் பக்கம் உள்ளனர் .ஊழல் கட்சிகளை அழிக்க ஒழிக்க என்பதை மனதில் கொள் .பொய்பிரசாரம் வீண்தான்.
Rate this:
Share this comment
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
02-ஏப்-201921:09:33 IST Report Abuse
Suman நான்கு தலைமுறையாக கோபால் பல்பொடிக்கு பிறகு தொடர்ந்து இந்தியாவில் மட்டும் இருப்பது இந்த குடும்பம். இளவரசர் சொன்னால் எல்லோரும் ஓட்டு போட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கை..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X