மம்தாவை பதற வைக்கும் மோடியின் மேற்குவங்க வருகை

Updated : ஏப் 03, 2019 | Added : ஏப் 03, 2019 | கருத்துகள் (20)
Advertisement

கோல்கட்டா : பிரதமர் மோடி, மேற்குவங்கத்தில் இன்று (ஏப்.,03) தனது பிரசாரத்தை துவக்க உள்ளார். இந்நிலையில், நாளை (ஏப்.,04) துவங்க இருந்த பிரசாரத்தை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்றைக்கு மாற்றி அமைத்துள்ளார்.







மோடி, இன்று அருணாச்சல பிரதேசத்தில் பிரசாரத்தை முடித்த பிறகு பிற்பகலில் மேற்குவங்கம் செல்ல உள்ளார். அங்கு முதலில் சிலிகுரி பகுதியிலும், பிறகு கோல்கட்டாவின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார். இந்த பிரிகேட் பரேட் மைதானத்தில் தான் கடந்த ஜனவரி மாதம், மம்தா ஏற்பாடு செய்திருந்த எதிர்கட்சிகளின் மெகா மாநாடு நடத்தப்பட்டு, மெகா கூட்டணி உருவாக்கப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த மைதானத்தில் இன்று மோடியின் பொதுக்கூட்டத்தில் 8 லட்சம் பேர் கூடுவார்கள் என பா.ஜ., எதிர்பார்க்கிறது.

மேற்குவங்கத்தில் உள்ள 42 லோக்சபா தொகுதிகளில் 20 க்கும் அதிகமான இடங்களை கைப்பற்ற பா.ஜ., திட்டமிட்டுள்ளது. மேற்குவங்கத்தை பொறுத்தவரை பா.ஜ.,வுக்கு போதிய அடித்தளம் இல்லை. இருப்பினும் காங்., மற்றும் ஆளும் திரிணாமுல் காங்., கட்சிகள் ஆதரவாளர்களின் செல்வாக்கை இழந்து வருவதால் அது பா.ஜ.,விற்கு பலமாக மாறி வருகிறது. இதனால் பிரதமர் மோடியின் இன்றைய உரை மேற்குவங்க மக்களின் மனதை மாற்றி விடும் என்ற பதற்றத்தில் மம்தா இருந்து வருகிறார்.






ஏப்.,4 ம் தேதி தான் தனது பிரசாரத்தை துவக்க மம்தா திட்டமிட்டிருந்தார். ஆனால் மோடி வருவதால், கடைசி நிமிடத்தில் தனது பிரசார அட்டவணையை மாற்றி, இன்றே பிரசாரத்தை துவக்க உள்ளதாக அறிவித்துள்ளார். முதலில் மோடி பேசி விட்டு சென்றுவிட்டால், அதற்கு பிறகு தான் பிரசாரத்தை துவங்குவது சிக்கலாகி விடும் என மம்தா நினைப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இது குறித்து திரிணாமுல் காங்., நிர்வாகி கூறுகையில், எந்த நிகழ்ச்சியும் மாற்றப்படவில்லை. இது தேர்தல் நேரம் என்பதால், மம்தா, எங்கள் கட்சியின் நட்சத்திர பேச்சாளர். அவருக்கு வரவேற்பு அதிகம் உள்ளதால் முன்பே பிரசாரத்தை துவக்குகிறார் என்றார்.






பா.ஜ, மூத்த தலைவர் ராகுல் சின்கா கூறுகையில், மோடிக்கு முன்போ அல்லது பின்போ எப்போது மம்தா பேசினாலும் ஒன்றும் எடுபடாது. மோடி பேசினால் மக்கள் அனைவரும் அவரது ரசிகர்கள் ஆகி விடுவார்கள் என்ற கவலை மம்தாவிற்கு. மேற்குவங்கத்தில் காங்.,ம், திரிணாமுல் காங்.,ம் ஐசியு.,வில் இருக்கின்றன. அதனால் தனது கட்சி சஞ்சீவி மூலிகை கொடுத்து உயிர்பிழைக்க வைக்க மம்தா நினைக்கிறார் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.... - ,
03-ஏப்-201920:50:36 IST Report Abuse
.... தேர்தலுக்கு பிறகு மம்தா தீதி.... சாரதா தீதி அழைக்க படுவார்
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
03-ஏப்-201917:51:02 IST Report Abuse
blocked user மம்தா இனி ஓவியம் என்று கிறுக்குவதில் அதிக காலத்தை செலவிடவேண்டும்... முன்னர் சீட்டுக்கம்பெனி ஆட்கள் பணத்தை காட்டிக்கொடுத்து வாங்கினார்கள்... இனி அது போல ஆள் இருக்காது...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
03-ஏப்-201916:54:11 IST Report Abuse
Endrum Indian அவர் வந்த விமானத்தை இறக்கமுடியாமல் திருப்பி அனுப்பவில்லையே இப்போது ஏன், அமித் ஷா , யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு அனுமதி தராமல் திருப்பி அனுப்பினாரே????paa.ja.க இந்த தடவை 10/42 சீட் மேற்கு வங்காளத்தில் வருமானால் பேகம் மும்தாஜ் ஒழிந்தார் என்று அர்த்தம். 5 மணிநேரத்திற்கு முன்பு மெட்ரோவிலிருந்து இறங்கி பார்க்ஸ்ட்ரீட் நடைபாதையில் வரும்போது கேட்டது "பாரத் மாதா கி ஜெ" சொல்ல வேண்டும் வருகின்றாயா என்று???ஐயோ பேகம் மும்தாஜ் தேசத்திலா என்று நினைத்தேன் ????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X