தமிழ்நாடு

இழுத்தடிப்பு!  அவிநாசி ஒன்றியத்தை , இரண்டாக பிரிப்பது... தொடர் நடவடிக்கை இல்லாததால் தொய்வு

Updated : ஏப் 04, 2019 | Added : ஏப் 03, 2019
Share
Advertisement
அவிநாசி : அவிநாசி ஒன்றியத்தில், 31 ஊராட்சிகளையும் ஒரு சேர நிர்வகிப்பதில், ஒன்றிய அதிகாரிகள் திணறினர். ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொடுப்பதிலும், தொய்வு தென்பட்டது. மக்களின் தேவைகள் தன்னிறைவு பெறுவதில், சிக்கல் ஏற்பட்டது. எனவே, அவிநாசி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து, சேவூரை தலைமையிடமாக கொண்ட, புதிய ஒன்றியம் உருவாக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது.
அவிநாசி  , ஊராட்சி ,  தன்னிறைவு , சேவூர்

அவிநாசி : அவிநாசி ஒன்றியத்தில், 31 ஊராட்சிகளையும் ஒரு சேர நிர்வகிப்பதில், ஒன்றிய அதிகாரிகள் திணறினர். ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொடுப்பதிலும், தொய்வு தென்பட்டது. மக்களின் தேவைகள் தன்னிறைவு பெறுவதில், சிக்கல் ஏற்பட்டது. எனவே, அவிநாசி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து, சேவூரை தலைமையிடமாக கொண்ட, புதிய ஒன்றியம் உருவாக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது. கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், இப்பிரச்னை எதிரொலித்தது. 'அவிநாசி ஒன்றியம் இரண்டாக பிரிக்கப்படும்' என, அ.தி.மு.க., வினர் பிரசாரம் செய்தனர்.தொடர்ச்சியாக, கடந்த, 2013, செப்., மாதம் நடந்த, ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில், ஒன்றியத்தை இரண்டாக பிரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சில நாட்களில், இதுதொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும், அவிநாசி ஒன்றியம் இரண்டாக பிரிவதை வரவேற்றனர்.மொத்தமுள்ள, 31 ஊராட்சிகளில், வடக்கு பகுதியிலுள்ள, 15 ஊராட்சிகள் சேவூர் ஒன்றியமாகவும், தெற்கில் உள்ள, 16 ஊராட்சிகள் அவிநாசி ஒன்றியமாகவும் செயல்படுத்துவது என, அதிகாரிகள் மட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.கருத்துரு தயார்இதுதொடர்பாக கருத்துரு தயாரித்து, அரசுக்கு அனுப்பப்பட்டது. கலெக்டரின் குறிப்பாணை ந.க., எண்: 7741/2013/வி7, நாள்: 30.07.2013ன் படி, தீர்மானம் (எண்:14) நிறைவேற்றப்பட்டது.இத்தீர்மானம் தொடர்பாக, மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சி முகமை இயக்குனருக்கு கடிதம் அனுப்பி, அரசின் ஒப்புதலுக்கு பரிந்துரை செய்யும்.
அதன் அடிப்படையில், சேவூர் ஒன்றியம் உருவாகுவது அரசு முடிவெடுத்து, அறிவிப்பு வெளியிட வேண்டும்.ஆனால், அதன்பின், நான்க ஆண்டுகள் உருண்டோடியும், சேவூர் ஒன்றியம் உருவாவது குறித்து, தொடர் நடவடிக்கை இல்லை; திட்டம், கிடப்பில் போடப்பட்டது. எனவே, அரசின் அனுமதி பெற்று, சேவூர் ஒன்றியம் உருவாக்கும் திட்டத்துக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்பதே, பொதுமக்களின் எதிர்பார்ப்பு.எந்தெந்த கிராமங்கள்...ஒன்றியம் இரண்டாக பிரிக்கப்பட்டால், சின்னேரிபாளையம், கணியாம்பூண்டி, கருமாபாளையம், கருவலூர், குப்பாண்டம்பாளையம், நம்பியாம்பாளையம், பழங்கரை, புதுப்பாளையம், செம்பியநல்லுார், உப்பிலிபாளையம், வேலாயுதம்பாளையம், தெக்கலுார், துலுக்கமுத்துார், ராமநாதபுரம், அய்யம்பாளையம், நடுவச்சேரி மற்றும் வேட்டுவபாளையம் ஊராட்சிகள் அவிநாசி ஒன்றியத்தில் செயல்படும்.
தத்தனுார், புஞ்சை தாமரைக்குளம், பாப்பாங்குளம், சேவூர், வடுகபாளையம், பொங்கலூர், ஆலத்தூர், மங்கரசவலைய பாளையம், குட்டகம், புலிப்பார், போத்தம்பாளையம், முறியாண்டம்பாளையம், தண்டுக்காரன்பாளையம் மற்றும் கானுார் ஆகிய ஊராட்சிகள், புதிதாக அமைக்கப்படும் சேவூர் ஒன்றியத்துடன் இணைக்கப்படும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X