வயநாட்டில் ராகுலை எதிர்த்து போட்டி 'சோலார்' ஊழல் சரிதா நாயர் அறிவிப்பு

Added : ஏப் 03, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருவனந்தபுரம்:கேரளாவின் வயநாடு தொகுதியில், காங்., தலைவர் ராகுலை எதிர்த்து போட்டியிடப் போவதாக, 'சோலார் ஊழல்' புகாரில் சிக்கிய, சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.கேரளாவில், 2011 - 16ம் ஆண்டில், உம்மன் சாண்டி தலைமையிலான, காங், ஆட்சி நடந்தது. அப்போது, சோலார் பேனல் எனப்படும், சூரிய மின்தகடுகள் அமைக்கப்பட்டதில், பெரும் மோசடி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.இந்த வழக்கில் கைதான, நடிகை
 வயநாட்டில் ராகுலை எதிர்த்து போட்டி 'சோலார்' ஊழல் சரிதா நாயர் அறிவிப்பு

திருவனந்தபுரம்:கேரளாவின் வயநாடு தொகுதியில், காங்., தலைவர் ராகுலை எதிர்த்து போட்டியிடப் போவதாக, 'சோலார் ஊழல்' புகாரில் சிக்கிய, சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில், 2011 - 16ம் ஆண்டில், உம்மன் சாண்டி தலைமையிலான, காங், ஆட்சி நடந்தது. அப்போது, சோலார் பேனல் எனப்படும், சூரிய மின்தகடுகள் அமைக்கப்பட்டதில், பெரும் மோசடி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.இந்த வழக்கில் கைதான, நடிகை சரிதா நாயர், 40, பல மாதங்களுக்கு பின், 'ஜாமினில்' வெளியே வந்தார்.

பாலியல் தொல்லை

அப்போது, நிருபர்களுக்கு பேட்டியளித்த சரிதா நாயர், 'சோலார் மோசடியில், மாநில அமைச்சர்கள் பலருக்கும், தொடர்புள்ளது. 'முதல்வர் உம்மன் சாண்டி, காங்., - எம்.எல்.ஏ., ஹிபி ஈடன் ஆகியோர், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்' என்றார்.கேரளாவில், 2016ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி அமைந்தது. இந்நிலையில், லோக்சபா தேர்தலில், எர்ணாகுளம் தொகுதியின், காங்., வேட்பாளராக, ஹிபி ஈடன் மனு தாக்கல் செய்துள்ளார்.

எதிர்ப்பு

இதற்கு, சரிதா நாயர், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கிடையே, காங்., தலைவர் ராகுல், லோக்சபா தேர்தலில், கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக, சமீபத்தில் அறிவித்தார்.இதையடுத்து, வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடப் போவதாக, சரிதா நாயர் அறிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் அவர் கூறியதாவது:பாலியல் புகாரில் சிக்கியுள்ளவர்களுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டாம் என, காங்., தலைவர் ராகுலுக்கு கடிதம் எழுதினேன். என் கடிதத்துக்கு, அவர் பதில் அளிக்கவில்லை; மதிப்பும் கொடுக்கவில்லை. இதனால், ராகுலை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

இந்நிலையில், வயநாடு தொகுதியில், ராகுலை எதிர்த்து, தேர்தல் மன்னன் என அழைக்கப்படும், தமிழகத்தை சேர்ந்த பத்மராஜன் மனு தாக்கல் செய்துள்ளார்.


ராகுல் இன்று மனு தாக்கல்


காங்., கட்சியின் மூத்த தலைவர், ரமேஷ் சென்னிதாலா கூறியதாவது:வயநாடு தொகுதியில், இன்று காலை, ராகுல் மனு தாக்கல் செய்கிறார். அவருடன், அவரது சகோதரி பிரியங்காவும் வருகிறார். கோழிக்கோட்டிலிருந்து, ஹெலிகாப்டர் மூலம், வயநாடுக்கு ராகுல் வருகிறார். அங்கிருந்து ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
08-ஏப்-201912:19:36 IST Report Abuse
Malick Raja This women is worst characters which those are couldn't mention in suggestions .. but she can not get any votes ratherthan her kit and kith .. Hence better quit from this circle ...
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
07-ஏப்-201921:23:20 IST Report Abuse
S.Ganesan ராகுல் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X