காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பேன்: அடிச்சு விடுகிறார் மம்தா

Added : ஏப் 04, 2019
Share
Advertisement
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜி, பிரதமர் பதவிக்கு குறி வைத்துள்ளார். மாநிலத்தில் சரிந்து வரும் செல்வாக்கை துாக்கி நிறுத்த, தடாலடி அரசியல் தான் கைகொடுக்கும் என, நம்புகிறார்.அதனால், பலர் முயன்றும் தீர்க்க முடியாத காஷ்மீர் பிரச்னையை தீர்க்கப் போவதாக கூறி, எதிர்க்கட்சிகளின் கேலிக்கு ஆளாகி உள்ளார்.அரசியல் அதிரடிகளுக்கு பெயர்
 காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பேன்: அடிச்சு விடுகிறார் மம்தா

மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜி, பிரதமர் பதவிக்கு குறி வைத்துள்ளார். மாநிலத்தில் சரிந்து வரும் செல்வாக்கை துாக்கி நிறுத்த, தடாலடி அரசியல் தான் கைகொடுக்கும் என, நம்புகிறார்.அதனால், பலர் முயன்றும் தீர்க்க முடியாத காஷ்மீர் பிரச்னையை தீர்க்கப் போவதாக கூறி, எதிர்க்கட்சிகளின் கேலிக்கு ஆளாகி உள்ளார்.

அரசியல் அதிரடிகளுக்கு பெயர் பெற்றவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. காங்கிரசில் அவர் இருந்த போதும், இப்போது, முதல்வராக இருக்கும் போதும் இப்படித் தான்.அவரிடம் காஷ்மீர் பிரச்னையை ஒப்படைத்தால், தீர்த்து விடுவார் என, நம்பும் படி, அவர் பேட்டியளித்து உள்ளார்.

அவருடன், 'எக்ஸ்பிரஸ்' பேட்டி...

காஷ்மீர் பிரச்னைக்கு என்ன தீர்வு?


மக்கள் என்னை நம்பி வாக்களித்தால் தீர்வு திட்டத்தை தெரிவிப்பேன். மோடி அரசு, காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண தவறி விட்டது.

பல ஆண்டுகளாக, பலர் முயற்சித்தும் தீராத பிரச்னையை எப்படி தீர்ப்பீர்கள்?

மேற்கு வங்கத்தில், மாவோயிஸ்டுகள் பிரச்னைக்கு தீர்வு கண்டு, அமைதியை ஏற்படுத்தியது போல, காஷ்மீரிலும் செய்வேன்.

பிரிவினைவாதிகளை எப்படி சமாளிப்பீர்கள்?

மத்தியில் என் தலைமையில், கூட்டணி அரசு அமைந்தால், நானே காஷ்மீர் செல்வேன். அங்கேயே தங்கி, பேச்சு நடத்தி சுமுக தீர்வு காண்பேன்.


ஷியாம பிரசாத் போன்றவர்கள் கூட, காஷ்மீர் செல்ல, நேரு, ஷேக் அப்துல்லா அனுமதிக்கவில்லையே?


அந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான், என் தலைமையில் மத்திய அரசு அமைய வேண்டும் என்கிறேன். நான், 1999ல், காந்தஹார் சென்று, விமான கடத்தல்காரர்களிடம் இருந்து, முப்தி மகளை மீட்க முயன்றேன். ஆனால், வாஜ்பாய் அரசு அனுமதிக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X