கடன் மனதை முடக்கும்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கடன் மனதை முடக்கும்!

Added : ஏப் 04, 2019
 கடன் மனதை முடக்கும்!

சிங்கப்பூரைச் சேர்ந்த மூன்று ஆராய்ச்சியாளர்கள், கடன் வாங்கியவர்களுக்கு, சிந்தனைத் திறன் குறைவதாக கண்டறிந்துள்ளனர்.வறுமையில் இருப்போருக்கு, பலரிடம் கடன் வாங்குவதால் ஏற்படும் மனச்சுமை மற்றும் அந்தக் கடன்களிலிருந்து விடுபடும்போது ஏற்படும் மன விடுதலை போன்றவற்றை, சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர்.ஒரு தொண்டு அமைப்பு, பரிசோதனைக்காக, சிலரது கடன்களை அடைக்க நிதி உதவி செய்தது.

அப்படி உடனே கடன்களை அடைத்தவர்களுக்கு, ஆராய்ச்சியாளர்கள் சில சோதனைகளைத் தந்தனர். அதிலிருந்து, கடன் அடைத்தவர்களுக்கு சுறுசுறுப்பு அதிகரித்திருப்பதும், சுயகட்டுப்பாடு கூடியிருப்பதும், எதிர்காலத்திற்காக திட்டமிடும் உந்துதல் கூடியிருப்பதும் தெரிய வந்தது. கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கியிருப்பவர்கள், கடனிலிருந்து விடுபட்டு விடுதலையாகி நிற்கும்போது சுதந்திரமாக உணர்ந்தனர். இந்த ஆய்வின் முடிவு, 'பினாஸ்.ஆர்க்' இணைய இதழில் வெளியாகியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X