48 ஆண்டுக்கு பிறகு கடற்படைக்கு ஹெலிகாப்டர் வாங்கும் இந்தியா

Updated : ஏப் 04, 2019 | Added : ஏப் 04, 2019 | கருத்துகள் (51)
Share
Advertisement
அதிநவீன ஹெலிகாப்டர்கள், இந்தியா,  அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன்: 48 ஆண்டுகளுக்குப் பிறகு கடற்படைக்கு இந்தியா ஹெலிகாப்டர்கள் வாங்குகிறது.இந்த நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் அதிநவீன எம்எச் - 60ஆர் ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவிற்கு வழங்க உள்ள 24 ஹெலிகாப்டர்களின் விலை ரூ.17,861 கோடி.
இந்த ஹெலிகாப்டரில் கண்காணிப்பு சென்சார்கள், தொலைதொடர்பு சாதனங்கள் ஆயுதங்கள் உள்ளிட்டவை இருக்கும்.

இது குறித்து அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில், 24 எம்எச் 60 ஆர் ரக ஹெலிகாப்டர்கள இந்தியாவிற்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர்களை இணைப்பதன் மூலம், இந்திய பாதுகாப்பு படையின் வான் தாக்குதல், நீர்மூழ்கிகளுக்கு எதிரான தாக்குதல் திறன் அதிகரிக்கும்.
அமெரிக்கா- இந்திய உறவை வலுப்படுத்த உதவும் வகையில், அமெரிக்க அரசின் வெளியுறவு மற்றும் தேச பாதுகாப்பு கொள்கை அடிப்படையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
இந்த ஹெலிகாப்டரால், வானில் உள்ள இலக்கை தாக்கவும், கடலுக்கடியில் செல்லும் நீர்மூழ்கியை கண்டுபிடித்து தாக்கி அழிக்கவும் முடியும். கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு பணி போன்றவற்றில் ஈடுபடவும் முடியும்.


latest tamil news




தற்போது, இந்திய கடற்படையில் பிரிட்டன் தயாரிப்பான ஷீகிங் ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய பெருங்கடல் பகுதியில் சமீப காலமாக சீன கடற்படை ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவிடம் வாங்க உள்ள எம்எச் - 60 ஆர் ஹெலிகாப்டர்கள் மூலம் இந்திய கடற்படையின் பலம் அதிகரிக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-ஏப்-201907:16:01 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //இந்தியாவிற்கு வழங்க உள்ள // என்ன ஒரு பகுமானம்.. காசு வாங்கிக்கொண்டு தருவதற்கு "வழங்குவது"ன்னு பேரா? இல்லை விற்பதுன்னு பேரா? இதை வாங்குன பிறகு செர்வீஸ் செய்யிறது யாரு டாடாவா, அம்பானியா? எத்தனை கோடி தேர்தல் பத்திரமா கொடுத்தாங்க ?
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
04-ஏப்-201921:24:26 IST Report Abuse
blocked user எடுத்ததற்க்கெல்லாம் உலக வங்கியிடம் கடன் வாங்காமல், எண்ணெய் இறக்குமதியில் வந்த வருவாயை வைத்து பாண்டுகளுக்கான கடனை அடைத்து, இராணுவத்துக்கும் ஆயுதங்கள் வாங்க ஆவண செய்ய 60 ஆண்டுகளாக காங்கிரசால் முடியவில்லை... எங்கள் டீக்கடைக்காரரால் சாத்தியம்... பொருளாதாரம் தெரியவேண்டியது இல்லை, அரசியல் தெரியவேண்டியது இல்லை - இந்த தேசத்தை நேசித்து அர்ப்பணிப்புடன் உழைத்தால் சாத்தியம் என்பதை நரேந்திர மோதி நிரூபித்து இருக்கிறார்... வாருங்கள் அவரது கரத்தை வலுப்படுத்துவோம்...
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
04-ஏப்-201921:12:21 IST Report Abuse
jagan மேக் இன் இந்தியா
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-ஏப்-201907:16:45 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்... அம்பானிக்கு.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X