பொது செய்தி

தமிழ்நாடு

அதிகார துஷ்பிரயோகம்: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

Updated : ஏப் 04, 2019 | Added : ஏப் 04, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை: தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கூறியுள்ளார்.



latest tamil news




சென்னையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக்கு பின்னர் நிருபர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கூறியதாவது: அரசியல் கட்சி பிரதிநிதிகள், கலெக்டர்கள், போலீஸ் கமிஷனர்கள், வருமானவரித்துறை, கலால்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும். பறக்கும் படையினரின் சோதனை வியாபாரிகள், சாதாரண மக்களுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது. சின்னங்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக உள்ளன. பதற்றமான பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டன. 4 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டதுடன், அரசு திட்டங்கள் குறித்தும் ஆட்சேபனை தெரிவித்தன.சிவிஜில் செயலிக்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் தேர்தல் விதிமீறல் குறித்த புார்களை தெரிவிக்கலாம்.


latest tamil news




தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகள் அலட்சியம்,உள்நோக்கத்துடன் செயல்படுவதை தேர்தல் ஆணையம் பொறுத்து கொள்ளாது. அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பறக்கும் படையினரின் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொகுதிக்குள் 2 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு சிறப்பு செலவின பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவையான இடங்களில், தேவையான அளவுக்கு மத்திய பாதுகாப்பு படையினர் இருப்பார்கள். பதற்றமான பகுதிகளில் சிசிடிவி கேமரா மற்றும் வெப் கேமரா பொருத்தப்படும்.

தமிழகத்தில் 67,720 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. புகைப்படத்துடன் கூடிய பூத் சிலீப் ஓட்டுப்போட செல்லாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், வேறு ஆவுணங்களை காட்டி ஓட்டுப்போடலாம். 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது. விரைவில் அது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-ஏப்-201907:27:35 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நல்ல சமூக விழிப்பு தான்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-ஏப்-201907:26:12 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மியாவ்.. மியாவ்..
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
05-ஏப்-201904:54:46 IST Report Abuse
 nicolethomson அட போங்க சார் வெளிப்படையா கொடுக்குறாங்க பகுத்தறிவற்ற திருடர்கள் முன்னேற்ற கட்சியினர் , ஆனா எங்க போச்சு உங்க ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X