திருச்சி: தி.க., கட்சியினர் மீது தாக்குதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சி: தி.க., கட்சியினர் மீது தாக்குதல்

Added : ஏப் 04, 2019 | கருத்துகள் (9)
திருச்சி, தி.க., கூட்டம், இந்து முன்னணியினர், தாக்குதல்

திருச்சி: இந்து கடவுள்கள் மற்றும் வழக்கங்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்யும் கி.வீரமணி, சமீபத்தில் கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும் எனவும், கடவுள் குற்றவாளி எனவும் பேசியிருந்தார். இது இந்துக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திருச்சி கீரைக்கொல்லையில் நடந்த தி.க., தேர்தல் பிரச்சார கூட்டத்தில், கிருஷ்ணர் குறித்து தவறாக பேசியதை கண்டித்து, இந்து முன்னணி கட்சியினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X