'போட்டு தாக்குகிறார் லாலுவின் மகன்

Added : ஏப் 05, 2019
Share
Advertisement
எதிர்க்கட்சிகள் இணைந்து, 'மகாகட்பந்தன்' எனப்படும் மெகா கூட்டணி குறித்து பேசின. ஆனால், பீஹாரில் மட்டுமே, இது அமைந்துஉள்ளது. இது எப்படி சாத்தியமானது?பா.ஜ.,வுக்கு எதிராக, மிகப் பெரிய கூட்டணியை அமைத்துள்ளோம். கடந்த தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், மொத்தமுள்ள, 40 தொகுதிகளில், 27ல் போட்டி யிட்டது; தற்போது, 20ல் போட்டியிடுகிறோம்.அதேபோல், கடந்த தேர்தலில், 13ல் போட்டியிட்ட, காங்.,
 'போட்டு தாக்குகிறார் லாலுவின் மகன்

எதிர்க்கட்சிகள் இணைந்து, 'மகாகட்பந்தன்' எனப்படும் மெகா கூட்டணி குறித்து பேசின. ஆனால், பீஹாரில் மட்டுமே, இது அமைந்துஉள்ளது. இது எப்படி சாத்தியமானது?

பா.ஜ.,வுக்கு எதிராக, மிகப் பெரிய கூட்டணியை அமைத்துள்ளோம். கடந்த தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், மொத்தமுள்ள, 40 தொகுதிகளில், 27ல் போட்டி யிட்டது; தற்போது, 20ல் போட்டியிடுகிறோம்.அதேபோல், கடந்த தேர்தலில், 13ல் போட்டியிட்ட, காங்., ஒன்பதில் போட்டியிடுகிறது. நாங்கள், 11 தொகுதிகளை, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்தோம். அதனால், மெகா கூட்டணி சாத்தியமானது.


தொகுதி பங்கீட்டில், காங்., அதிருப்தி அடைந்து உள்ளதாக கூறப்படுகிறதே?


கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியும் அதிருப்தியில் இல்லை. அனைவரும் சேர்ந்து பேசி, முழுமனதோடு, தொகுதி பங்கீடு செய்துள்ளோம். ஆனால், கூட்டணியில் பிளவு என, ஊடகங்கள் தான் கூறுகின்றன.


இந்த முறையும், உங்கள் சகோதரி மிசா பாரதிக்கு சீட் வழங்கப்பட்டு உள்ளது. உங்களுடைய கட்சி, வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறதா?


அது ஏன், காங்கிரஸ் மற்றும் எங்களை பார்த்து மட்டும் இப்படி கேட்கின்றனர்... ராம் விலாஸ் பஸ்வான் கட்சியில் வாரிசு அரசியல் இல்லையா... மஹாராஷ்டிராவில், தாக்கரே குடும்பம்; பஞ்சாபில், சிரோன்மணி அகாலி தளம் பாதலின் குடும்பத்தில் இந்தப் பிரச்னை இல்லையா? எந்தக் கட்சியில் தான் வாரிசு அரசியல் இல்லை என்று கூறுங்கள். மிசா பாரதி, வெற்றி வேட்பாளர். நல்ல அனுபவம் உள்ளவர். கட்சிக்காக நீண்ட காலமாக பாடுபட்டவர். அந்த அடிப்படையில் தான், அவர் மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்தத் தேர்தலில், முக்கியமான பிரச்னையாக எது இருக்கும்?

வேலைவாய்ப்பு இல்லாதது தான், நாட்டின் முக்கியமான பிரச்னை. உங்களுக்கு கோவில் வேண்டுமா, வேலை வேண்டுமா என்று மக்களிடம் கேட்டால், உங்களுக்கு இதற்கான பதில் கிடைக்கும்.


அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?


ராமர் கோவில் கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. எங்கள் குடும்பத்தில் அனைவரும், ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள். அதே நேரத்தில், கோவில் விவகாரத்தை, அரசியலாக்கக் கூடாது என்று தான் கூறுகிறோம். அயோத்தியில் ராமர் கோவிலை கட்டமாட்டார்கள். அப்படி கட்டிவிட்டால், தேர்தல்களில், பா.ஜ., எந்தப் பிரச்னையை கூறி ஓட்டு கேட்கும்...

உங்களுடைய தந்தை, தாய், சகோதரன், சகோதரி என அனைவர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளதே?

இது திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள, பழிவாங்கும் நடவடிக்கை. மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு அமைப்புகளை ஏவிவிட்டு, பழிவாங்கும் அரசியல் செய்கிறது. இது தான், உ.பி.,யில், பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதி, சமாஜ்வாதி தலைவர், அகிலேஷுக்கும் நடக்கிறது.

உங்கள் தந்தை சிறையில் உள்ளார். பிரசாரத்தில் அவர் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்துமா?

கட்சியின் தொண்டர்கள், மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு மற்றும் பீஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். அதனால், இன்னும் அதிக வேகத்தில், கட்சியின் வெற்றிக்காக பாடுபடுவர்.

மெகா கூட்டணி தேர்தலில் வென்றால், யார் பிரதமர்?

பிரதமராகும் அனைத்து தகுதியும், காங்., தலைவர் ராகுலுக்கு உள்ளது. இருந்தாலும், தேர்தலுக்கு பின், மெகா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் கலந்து பேசி, யார் பிரதமர் என்பதை முடிவு செய்வோம்.

பீஹாரில், உங்கள் கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?

மொத்தமுள்ள, 40ல், 35க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

பீஹாரின் முன்னாள் துணை முதல்வரான, தேஜஸ்வி பிரசாத் யாதவ், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். கடந்த, 2015ல் முதல் முறையாக சட்டசபை தேர்தலில் வென்றப் பிறகு, இந்த பதவிகளை பிடித்துள்ளார்.நாட்டின் மிகவும் இளம்வயது எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பீஹார் முன்னாள் முதல்வர்களான லாலு பிரசாத் யாதவ், ரப்ரி தேவியின் இரண்டாவது மகன்.ஒன்பதாவது வரை மட்டுமே படித்துள்ள இவர், கிரிக்கெட் வீரராகவும் இருந்துள்ளார். ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடியுள்ளார். ஐ.பி.எல்., எனப்படும், இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியில், நான்கு சீசன்களில் இடம் பெற்றவர்.தந்தையும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத், ஊழல் வழக்கில் சிறையில் உள்ள நிலையில், கட்சியை நிர்வகித்து, அரசியல் களத்தில் கலக்கி வருகிறார்.

- கன்ஹையா பெல்லாரி -

சிறப்பு செய்தியாளர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X