அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ராகுலுக்கு தெரியுமா
'வீரமணி ஜி'யின் வீம்பு?

எந்த தேர்தலிலும், இல்லாதவாறு இந்த முறை, தி.மு.க.,வை வேட்டையாடுவது, அதன் ஓட்டுகளை, 'காவு வாங்குவது' காலங்காலமாய் அது கடைப்பிடித்து வரும், ஹிந்து எதிர்ப்பு தான்.

ராகுல்,வீரமணி,வீம்பு


இது குறித்து, ஒரு வாசகர் எழுதியுள்ள கடிதம்: தி.மு.க., துவங்கியதில் இருந்து, ஹிந்து மதத்தினரை அவமதிப்பதும், பிற மதத்தினரை கொண்டாடுவதுமே, அவர்களின் பழக்கம். 'தி.மு.க., தலைவர் கருணாநிதியும், பின் தலைவரான அவரது மகன் ஸ்டாலினும், ஹிந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது இல்லை. மாறாக விநாயகர் சதுர்த்தியை கிண்டல் செய்வது வாடிக்கை. 'பிற மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்கின்றனர்' என்பது, ஆண்டாண்டு காலமாக, ஹிந்துக்கள் மனதில் இருக்கும் வருத்தம்.

திருடன்:


'ஹிந்து என்றால் திருடன்' என அர்த்தம் உள்ளதாக, புண்படுத்தும் வகையில், ஒரு கூட்டத்தில் கருணாநிதி பேசினார். பர்கூர் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., சுகவனம், நெற்றியில் குங்குமம் அணிந்திருந்த போது, 'நெற்றியில் ரத்தம் வருகிறதா...' என, கேட்டவர் கருணாநிதி. பண்ணாரி மாரியம்மன் கோவிலில் தீ மிதித்த, அப்போதய அமைச்சர், அந்தியூர் செல்வராஜை கண்டித்தார். தமிழக முதல்வராக இருந்தபோது, 'சேது சமுத்திரத்தில், ராமர் பாலத்தை கட்ட, ராமர் என்ன இன்ஜினியரா...' எனக்கேட்டு, கடவுள் ராமரை கேவலப்படுத்தினார்.

அவமதிப்பு:


கடந்த, 2018ல், ஸ்ரீரங்கம் கோவில் வாசலில், அர்ச்சகர்கள், எதேச்சையாக ஸ்டாலின் நெற்றியில் வைத்த திருநீறை, அவர் உடனடியாக அங்கேயே அழித்து, ஹிந்து நம்பிக்கையை அவமதித்தார். கடந்தாண்டு ஜனவரியில், திருச்சியில் பேசிய கனிமொழி, 'திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தி இருந்தால், எதற்கு காவல்?' என, ஏளனம் செய்தார். தி.மு.க., அனுதாபியான பாடலாசிரியர் வைரமுத்து, ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளை

அவமதித்து பேசிய போது, நாடே திரண்டு எதிர்ப்பு தெரிவித்த போதும், தி.மு.க.,வினர் வாய்திறக்கவே இல்லை.

இப்படிப்பட்ட, தி.மு.க.,வின் ஹிந்து மத எதிர்ப்புணர்வானது, அனைவரும் அறிந்ததே. இதுவரை, தி.மு.க,விற்கு அது ஆபத்தை தரவில்லை. ஆனால், இந்த தேர்தலிலோ, 'தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க மாட்டோம்' என்ற, ஹிந்துக்களின் பிரசாரம் ஓங்கியிருக்கிறது. சமூக ஊடகங்களில், ஹிந்துக்களின் எதிரி தி.மு.க., என்ற கோஷம், ரெக்கை கட்டி பறக்கிறது. பல வீடுகள், கடைகளில், 'ஹிந்துக்களுக்கு எதிரான கட்சிகளுக்கு ஓட்டு இல்லை' என, நோட்டீசும் ஒட்டியுள்ளனர்.

அதற்கு காரணம், தி.க., வீரமணி மீதான, தி.மு.க.,வின் பாசம் தான். சில நாட்களுக்கு முன், கடவுள் கிருஷ்ணரை, பொள்ளாச்சி சம்பவ கொடூரர்களோடு ஒப்பிட்டு அவர் பேசியது, ஹிந்துக்களின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சியது போல இருந்தது. பகவத்கீதையை தந்த கிருஷ்ணரை, இப்படி அவமதிக்க, வீரமணியை தவிர யாராலும் முடியாது. இந்த பேச்சை, ஸ்டாலின் இதுவரை கண்டிக்கவில்லை. அவர் ஏன் கண்டிக்க வேண்டும்; வீரமணி என்ன தி.மு.க.,காரரா என்ற, கேள்வி எழலாம்.

'பிளாஷ் பேக்':


சில வாரங்களுக்கு முன், நாகர்கோவிலில், காங்., தலைவர் ராகுல் முன்னிலையில், தி.மு.க.,வின் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. அதில், ஸ்டாலினின் ஒரு பக்கத்தில் ராகுலும், மறு பக்கத்தில், தேர்தலில் போட்டியிடாத, தி.க., கட்சியின் தலைவர் வீரமணியும் அமர்ந்திருந்தனர். கூட்ட நிறைவாக, எல்லாரும் ஒற்றுமையாய் கைகோர்த்து நின்றனர். மற்ற கூட்டணி கட்சிகளை விட, வீரமணிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. இப்போது அவர், தமிழகம் முழுவதும், தி.மு.க.,விற்கு ஓட்டு கேட்டு பேசி வருகிறார். தி.மு.க.,வின், 'பிதாமகன்' ரேஞ்சில் இருக்கிறார் வீரமணி. எனவே, அவரது கருத்தை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார் என்று தான், எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது.

மவுனமானது ஏன்?


நடிகை நயன்தாராவை கிண்டலடித்த, நடிகர் ராதாரவியை உடனடியாக, தி.மு.க.,வை விட்டு நீக்கினார் ஸ்டாலின். தன் கட்சியின் பொருளாளராக இருக்கும், துரைமுருகன் வீட்டில், சமீபத்தில் நடந்த ரெய்டில், வருமான வரித்துறை கோடிக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்தது என்பதற்காக, 'மோடியின் பாசிஸ்ட் பாய்ச்சல்;

Advertisement

சேடிஸ்ட் சேட்டை' என்று வார்த்தைகளால் கோபத்தைக் கொட்டினார் ஸ்டாலின். ஆனால், ஹிந்துக்கள் கொண்டாடும் கடவுளை, கூட்டணி கட்சியான, தி.க.,வின் தலைவர் இழிவுப்படுத்தியதை, தெரிந்தும் மவுனமாகி விட்டார் ஸ்டாலின்.

இதனிடையே, தி.மு.க., மீதான ஹிந்துக்களின் எதிர்ப்பு பரவி வருகிறது என அறிந்து, சமீபத்தில் கூட்டம் ஒன்றில், 'தி.மு.க., ஹிந்துக்களுக்கு எதிரி அல்ல; என் மனைவி தினமும் கோவிலுக்கு போகிறார். அதை நான் தடுக்கவில்லை' என்று ஸ்டாலின் குறிப்பிட்டார். அப்போதும் வீரமணியின், 'கிருஷ்ணர் அவமதிப்பை' கண்டுகொள்ளவில்லை. காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், தி.மு.க., கூட்டணியில் உள்ளன. ஏற்கனவே, சபரிமலை விவகாரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவால், அக்கட்சிக்கு எதிராக இந்தியா முழுவதும், ஹிந்துக்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். இப்போது, வீரமணியின் பேச்சாலும், நம் ஓட்டுகள் பாதிக்குமோ என, காங்கிரசார் அஞ்சுகின்றனர்.

சபரிமலைக்கு பெண்கள் செல்வது தொடர்பாக, தனக்கு தனிப்பட்ட கருத்து இருந்தாலும், பெரும்பான்மை ஹிந்துக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் ராகுல். தேர்தல் அறிக்கை வெளியிட்டு பேசிய போது, மோடியின் கருத்துக்கு பதிலடி தர, 'நானும் ஹிந்து தான்' என்று உரக்க சொன்னவர் ராகுல். வடமாநிலங்களில், ஹிந்து கோவில்களுக்குச் சென்று, பட்டையும், கொட்டையும் போடுகிறார். இந்நிலையில், கிருஷ்ணரை அவமதித்து, தமிழகத்தில் நடக்கும் அரசியல் அவருக்கு தெரியுமா? தன்னை, 'பிரதமர் வேட்பாளர்' என, கொண்டாடும் ஸ்டாலினின், ஹிந்து எதிர்ப்பு கொள்கை அவருக்கு தெரியுமா? நாகர்கோவில் மேடையில், 'வீரமணி ஜி' என்று, தான் அழைத்து பேசியவரின், கிருஷ்ணர் அவமதிப்பு பேச்சு ராகுலுக்கு தெரியுமா...? இதை ராகுலுக்கு சொல்பவர் யார்?

- வாக்காளன்


Advertisement

வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
08-ஏப்-201904:22:15 IST Report Abuse

meenakshisundaramவீரமணி ஜி ,ஈவேரா ஜி .மொஜார் ஜி ,மட்டுமல்ல 2 G வரை Rahul நன்கு அறிவார்.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
06-ஏப்-201917:12:57 IST Report Abuse

இந்தியன் kumarயாருக்கு வேணாலும் போடுங்கள் இறைவனை அவமதிப்போருக்கு வோட்டு போடாதீர்கள்.

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
05-ஏப்-201922:43:28 IST Report Abuse

Bhaskaranகருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக திணிக்கப்படும் முயற்சி ஆரம்பித்தாகிவிட்டது இது கண்டிப்பாக எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி திமுகவுக்கு எதிராக அராஜகம் நிலஅபகரிப்பு கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றிற்கு எதிராக மக்களின் வாக்குகளைஅதிமுகபெறுவதற்கு உதவலாம்

Rate this:
மேலும் 62 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X