அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பெண்ணை கொன்றவர்களுடன்
கம்யூ., கூட்டணி; கமல் காட்டம்

மதுரை: ''எங்களுடன் இருக்க வேண்டிய தோழர்கள், தண்ணீருக்காக போராடிய பெண்ணை (மதுரை மாநகராட்சி மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி) கொலை செய்தவர்களுடன் (தி.மு.க.,) கூட்டணி அமைத்துள்ளனர். இதுதான் இன்றைய அரசியலின் அவலம்,'' என ம.நீ.ம., தலைவர் கமல் வேதனை தெரிவித்தார்.

கம்யூ., கூட்டணி,கமல்,காட்டம்


மதுரை லோக்சபா தொகுதி வேட்பாளர் எம்.அழகரை ஆதரித்து அவர் பேசியதாவது: எனது நான்கு வயதில் அன்போடு வரவேற்றீர்கள். தற்போது 63 வயதிலும் அந்த அன்பு குறையவில்லை. சினிமாவில் நடித்ததால் சம்பளம் கொடுத்தனர். ஆனால் என் மீது அன்பு செலுத்தியவர்களுக்கு நான் ஒன்றும் செய்யவில்லை. எனது எஞ்சிய வாழ்க்கையை, மக்களுக்காக வாழ தீர்க்கமான முடிவெடுத்து ஒரு இலக்குடன் வந்துள்ளேன்.

என்னை நான் 'தலைவர்' என சொல்லிக் கொள்ள மாட்டேன். மக்கள்தான் தலைவர்கள். பெரியவர் யாரும் கிடையாது. மக்கள் தான் பெரியவர்கள்.

மதுரை சித்திரை திருவிழாவை காண 1970ல் 50 மாட்டு வண்டிகளில் வந்தனர். இன்று 15 லட்சம் பேராவது பஸ்கள், கார்களில் வருவர். அன்று தேர்தல் வைப்பதால் பெரும்பாலானோர் ஓட்டுப்போட வரமாட்டர். வாக்காளர்களின் ஓட்டுரிமைக்கு அநீதி இழைத்து விட்டனர். அதையும் தாண்டித்தான் ம.நீ.ம., வேட்பாளர் அழகர் ஜெயிக்க வேண்டி உள்ளது. பணம் இல்லாமல் நற்பணி இயக்கத்துக்காக, 30 ஆண்டுகள் உழைத்த நீங்கள் இன்னும் 13 நாள் உழைக்க மாட்டீர்களா.

மதுரையை இன்றளவும் பெரிய கிராமம் போல வைத்துள்ளனர். இதை மற்ற நகரங்கள் போல் மாற்ற வேண்டும். எய்ம்ஸ் அடிக்கல் நாட்டியது 'ஜால்ஜாப்பு' வேலை. குடிநீருக்கு கூட கையேந்த வைத்து விட்டனர். ம.நீ.ம.,க்கு வாய்ப்பு வழங்கினால் வீடு தோறும் குடிநீர் கிடைக்கும். எம்.ஜி.ஆர்., பிரசாரம் நெருப்பாக இருந்தது. இப்போது செருப்பாக பிரசாரம் உள்ளது. 234 பேர் கொண்ட நேர்மையான படையை அமைக்க வேண்டும். அப்படையால் மட்டுமே தமிழகத்துக்கு வெளிச்சம் கிடைக்கும்.

Advertisement

இது பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல் என பார்க்கக்கூடாது. தமிழ்நாட்டின் நலன்தான் முக்கியம். தமிழ்நாட்டில் இருந்து சென்றால்தான் நமது தேவைக்கு குரல் கொடுக்க முடியும். லோக்சபா தேர்தல்தானே, சட்டசபை தேர்தல் வந்தால் பார்த்து கொள்ளலாம் என இருந்து விடக்கூடாது. கள்ளழகர் ஆற்றில் இறங்குவார். நாம் அழகரை பாராளுமன்றத்தில் இறக்கி விடுவோம். அவர் டில்லியில் இருக்கட்டும். நான் மக்களுடன் இங்கே இருக்கிறேன்.

எமது கட்சியினர் குதிரைகள் அல்ல; அவர்கள் விலை போக மாட்டார்கள். என்னை கை துாக்கி விடுங்கள். இல்லையென்றால் தமிழகம் இன்னும் 30 ஆண்டுகள் பின்தங்கி விடும். நீங்கள் முடிவெடுத்தால் நாளை நமதே, என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kurinjikilan - Madurai,இந்தியா
10-ஏப்-201914:59:55 IST Report Abuse

kurinjikilanகம்யூனிச சித்தாந்தம் ஏற்கனவே கம்யூனிஸ நாடுகளில் இற்றுப்போய்விட்டது..பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமன்படுத்த ஏழைகள் பணக்காரராக வேண்டும்..ஆனால் கம்யூனிசம் பணக்காரர் களை ஏழைகளாக்கி ஏழைகளை விளிம்பு நிலைக்கு தள்ளிவிட்டது..அதனால்தான் ரஷ்யாவில் கம்யூனிசம் மடிந்து விட்டது..மதுரையில் கம்யூனிசம் வெற்றியடைந்தால் அதனால் மதுரை மக்களுக்கு கிஞ்சித்தும் பயனில்லை. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்க ஒரு நபர் கிடைப்பார்..அவ்வளவுதான்..பினராயீ கேரளாவில் காங்கிரஸை பின்னிவிட்டு இங்கு அவர்களிடம் ஓட்டுக்காக கையேந்துவார்..யாருக்கும் வெட்கமில்லை..

Rate this:
05-ஏப்-201923:40:26 IST Report Abuse

கதை சொல்லிஅனைத்து அரசு அலுவலகங்களிலும் கம்யூனிஸ்ட் ஆட்கள்தான் இருக்கின்றனர். ஆட்சியாளர் என்ன சட்டம் திட்டம் தீட்டினாலும் அதை செயல்படாமல் செய்பவர்கள் அவர்களே

Rate this:
jagan - Chennai,இந்தியா
05-ஏப்-201917:44:34 IST Report Abuse

jagan"பெரியவர் யாரும் கிடையாது. மக்கள் தான் பெரியவர்கள்." -அப்போ ஈ வேராவை சொல்கிறதோ ?

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X