பொது செய்தி

இந்தியா

பிரபலங்களின் திடீர் அறிக்கை: பின்னணியில் பதவிக்கு குறி?

Updated : ஏப் 05, 2019 | Added : ஏப் 05, 2019 | கருத்துகள் (56)
Advertisement
பிரபலங்கள், அறிக்கை, அருந்ததி ராய், ஹிரிஸ் கர்னாட்

வன்முறை, மத, இன பாகுபாட்டை உருவாக்குவோரை இந்த தேர்தலில் புறந்தள்ள வேண்டும் என, தேசிய அளவில் பிரபலமான எழுத்தாளர்கள், நடிகர், நடிகையர் வலியுறுத்தி உள்ளனர். இது தேர்தலுக்கு பிந்தைய பதவிக்கு குறி வைத்துவெளியிடப்பட்ட அறிக்கை என, சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. முதல் கட்ட தேர்தல், வரும், 11ல் நடக்கிறது. இறுதிக் கட்ட தேர்தல், மே, 19ல் நடக்கிறது.ஆளும், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு புறம்; எதிர்கட்சியாக உள்ள, காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மற்றொரு புறம் களத்தில் உள்ளன.இது தவிர, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஒருங்கிணைக்கும் ஒரு அணியும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைக்கும் மற்றொரு அணியும் களத்தில் உள்ளது.

இவை தவிர, மாநில கட்சிகள் தனியா கவும் போட்டியிடுகின்றன.இந்நிலையில், தேசிய அளவில் பிரபலமான எழுத்தாளர்கள், நடிகர், நடிகையர், இசை கலைஞர்கள் அடங்கிய குழுவினர், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.'இந்திய கலாசார அமைப்பு' என்ற பெயரிலான அந்த அமைப்பின் அறிக்கையில், எழுத்தாளர் அருந்ததி ராய், நடிகர் கிரிஷ் கர்னாட், வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர் உட்பட பலர், கையெழுத்திட்டுள்ளனர்.






அதில் கூறியிருப்ப தாவது:கடந்த சில ஆண்டுகளாக, வன்முறை கலாசாரம் அதிகரித்துள்ளது. மதம், இனம் என, பாகுபாடு பார்க்கப்படுகிறது. நாட்டு மக்களிடையே பிரிவினைவாதம் துாண்டி விடப்படுகிறது. மக்களை பீதியடைய செய்யும் சம்பவங்கள் நடந்துள்ளன.சர்வாதிகாரமான நடவடிக்கைகளை எதிர்த்து கேட்டால், அவர்கள் ஒடுக்கப்படுகின்றனர். அவர் கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்யும் நிலையும் இருந்துள்ளது. இந்த கசப்பான சம்பவங்கள் இனி நடக்காத வகை யில், விழிப்புணர்வுடன் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.






இந்த அறிக்கை, ஏதோ உள்நோக்கத்தின் அடிப்படையிலும், சில கட்சிகளின் பின்னணியிலும் வெளியிடப்பட்டுள்ளதோ என, ஆளும் கட்சி தரப்பில் பார்க்கப்படுகிறது.இவ்வளவு நாள் அமைதியாக இருந்த, சில எழுத்தாளர்களும், பிரபலங்களும், தேர்தல் நேரத்தில் திடீர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தேர்தலுக்கு பின், புதிதாக ஏதாவது பதவி கிடைக்குமா என்ற நோக்கத்தில், இந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்களோ என, அரசியல் ஆர்வலர்கள் சந்தேகம் அடைந்துஉள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07-ஏப்-201908:56:27 IST Report Abuse
Srinivasan Kannaiya தேர்தலுக்கு பின், புதிதாக ஏதாவது பதவி கிடைக்குமா என்ற நோக்கத்தில், இந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்களோ என, அரசியல் ஆர்வலர்கள் சந்தேகம் அடைந்து உள்ளனர். உங்களுக்கு போட்டியாக வந்து விடுவார்கள் என்ற எண்ணம் வேண்டாம். உண்மையிலேயே சமூகத்தின் மேல் உள்ள அக்கறையால் உதிர்ந்தவை அவை...
Rate this:
Share this comment
Cancel
Sundar - Chennai,இந்தியா
06-ஏப்-201900:25:41 IST Report Abuse
Sundar தப்பி தவறி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏதாவது எலும்பு துண்டு கிடைக்கும் என்ற நப்பாசை தவிர வேறென்ன?
Rate this:
Share this comment
Cancel
05-ஏப்-201923:09:31 IST Report Abuse
kulandhai Kannan இதில் அருந்ததி ராய் நேரடியாகவே காஷ்மீர பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பவர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X