பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' நுழைவுத் தேர்வு ரத்து சட்டப்படி சாத்தியமாகுமா

Updated : ஏப் 05, 2019 | Added : ஏப் 05, 2019 | கருத்துகள் (65)
Advertisement
NEET exam,medical entrance test,நீட், காங்கிரஸ்

சென்னை:காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், 'நீட்' நுழைவுத் தேர்வு, முக்கிய இடம் பிடித்து உள்ளது. மருத்துவ படிப்பில் சேருவதற்கான, தகுதி தேர்வாக, இதை நடத்த வேண்டும் என்ற, மத்திய அரசின் முடிவுக்கு, தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இருந்தும், நீட் தேர்வுப்படி தான், தற்போது மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடந்துவருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு இல்லாமல், மாநில அளவில் தேர்வு நடத்தி, மாணவர்களை சேர்த்து கொள்ளலாம் என்ற, அறிவிப்பு இடம் பெற்றுஉள்ளது.இதற்கு, கூட்டணியில் உள்ள, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துஉள்ளன.'நீட்' நுழைவு தேர்வு ரத்து அறிவிப்பு சாத்தியமானதா, இல்லையா என்பது பற்றி, சட்டம் படித்த வழக்கறிஞர்களின் கருத்து இதோ:


மூத்த வழக்கறிஞரும், முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரலுமான, பி.வில்சன்: மருத்துவ கவுன்சில் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட, புதிய பிரிவால், நீட் தேர்வு அமலுக்கு வந்தது. இந்தப் பிரிவை நீக்கி விட்டால், நீட் தேர்வும் போய் விடும்.'மாடர்ன் டெண்டல் கல்லுாரி' வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, மிகவும் முக்கியமானது. மாணவர்கள் சேர்க்கை நடத்த, மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதை, அந்த உத்தரவு வலியுறுத்துகிறது. .நீட் தேர்வால், ஒவ்வொரு ஆண்டும், மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு பிரச்னை தான்.கடந்த ஆண்டில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, மிக குறைந்த இடங்களே கிடைத்தன. மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள், பலன் பெற வேண்டும் என்றால், நீட் தேர்வு இருக்கக் கூடாது.நமது கல்வி தரத்துக்கு ஏற்ப, தேர்வு நடத்தி, மாணவர்களை சேர்க்கலாம். மாநில கல்வி முறையில் படித்து வருபவர்கள், அதன் அடிப்படையில் நடக்கும் தேர்வில், எளிதாக வெற்றி பெறுவர்.ஏற்கனவே, நுழைவு தேர்வுக்கு விலக்கு அளித்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை இருக்க வேண்டும் என்பதற்கான சட்டம்உள்ளது.

மத்திய அரசு வழக்கறிஞரான, உதவி சொலிசிட்டர் ஜெனரல், ஜி.கார்த்திகேயன்: திருத்த சட்டத்தை ஏற்படுத்தி, நீட் தேர்வு இல்லாமல் ஆக்கலாம். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்வது, தகுதி உள்ள மாணவர்களுக்கு பயன் அளிக்காது. நீட் இருந்தால் தான், தகுதியானவர்களுக்கு இடம் கிடைக்கும்; தகுதியற்றவர்கள், மருத்துவ படிப்பில் நுழைய முடியாது. அதனால், நீட் கண்டிப்பாக வேண்டும். நீட் இல்லை என்றால், தனியார் மருத்துவ கல்லுாரிகள், வசதி படைத்தவர்களை சேர்த்துக் கொள்ள முடியும். அவர்கள் விருப்பப்படி மாணவர்களை சேர்த்து, கல்லா கட்டலாம். பழைய முறையை பின்பற்றினால், ஏழை எளிய மாணவர்களுக்கு, தனியார் மருத்துவ கல்லுாரிகளில் இடம் கிடைப்பது என்பது, அபூர்வமாகி விடும்.அதுவே, நீட் இருந்தால், திறமையான, தகுதியான ஏழை மாணவர்களுக்கு, கண்டிப்பாக மருத்துவ, 'சீட்' கிடைக்கும். நீட் இல்லை என்றால், தகுதி இருந்தும், பண வசதி இல்லாத மாணவர்களுக்கு, 'சீட்' கிடைப்பது அரிது.

Advertisement
வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - London,யுனைடெட் கிங்டம்
06-ஏப்-201905:17:07 IST Report Abuse
anbu மாணவர்களே நீட் தேர்வை விரும்பும் போது இவர்கள் மாணவர்களின் கல்வியிலும் எதிர்காலத்திலும் அரசியலுக்காக விளையாடுகிறார்கள். பப்பு,சுடலை,குருமா,சைக்கோ ,சீ மண் போன்றோர் மருத்துவ தேர்வில் தேர்ச்சி அடைஞ்சவங்க.
Rate this:
Share this comment
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
05-ஏப்-201922:48:57 IST Report Abuse
Dr.C.S.Rangarajan மத்திய அரசு வழக்கறிஞரான, உதவி சொலிசிட்டர் ஜெனரல், ஜி.கார்த்திகேயன் கூறும் கருத்துப்படி தகுதி உள்ளவர்கள் நீட் இல்லாதபோது தகுதியற்றவர்களாக போனார்கள். தகுதியின் தகுதியை நீட் தேர்வு உறுதிசெய்கிறது. பணம் படைத்தோரே ஜனநாயக நாட்டில் தேர்தலில் நிற்கமுடியும் என்ற சூழ்நிலையில் தகுதிப்படைத்தவர்கள் பணவசதி இல்லாததால் தேர்தலில் நிர்க்கமுடியாது போவதுபோல், பணம் படைத்தவர்களே, தகுதி இல்லாதுபோனாலும், மருத்துவ கல்வி பயிலமுடியும் நீட் இல்லாதுபோனால். பாடத்திட்டங்கள் தரக்குறைவினால், நீட் எழுதமுடியாது என்றால், பாடத்திட்டங்களை சரிசெய்வது முறை அல்லவா? உடலுக்கு ஏற்ற சட்டையா அல்லது சட்டைக்கேற்ற உடலா?
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
05-ஏப்-201921:51:03 IST Report Abuse
அசோக்ராஜ் நீட் மேலும் கடுமையாகும். பொறியியலுக்கும் அகில இந்திய நுழைவுத் தேர்வு வரும். காலத்தின் கட்டாயம். எழாம்குறி குடும்பக் கட்சித் தலைவர்கள் தலைகீழே நின்றாலும் மாற்ற முடியாது. பொய் வாக்குறுதி கொடுத்து முட்டாள்களின் கைதட்டல் பெற்றுக்கொள்ளலாம். அத்தோடு சரி. ஸ்டுபிட்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X