அரசியல் செய்தி

தமிழ்நாடு

எடு நகையை வாங்கு கடனை: ஸ்டாலின் அறிவிப்பால் கிலி

Updated : ஏப் 05, 2019 | Added : ஏப் 05, 2019 | கருத்துகள் (113)
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

கூட்டுறவு வங்கி மற்றும் பொதுத் துறை வங்கிகளில், 5 சவரன் நகையை அடமானமாக வைத்து, விவசாயிகள் வாங்கி இருக்கும் கடன்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தள்ளுபடி செய்யப்படும். - இப்படியொரு அறிவிப்பை திருப்பூரில் வெளியிட்டார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்.

தமிழக விவசாயிகள் குஷியாகி விட்டனர். வீட்டில் இருக்கும் நகைகளை துழாவி எடுத்து, அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளிலும், பொதுத்துறை வங்கிகளிலும் அடமானம் வைத்து கடன் வாங்கி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் வங்கிகளில் நகையை வைத்து விவசாய கடன் பெற, கூட்டம் அலைமோதுவதாக சென்னைக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டாலின் இதை அறிவித்த, 48 மணி நேரத்துக்குள், எட்டாயிரத்துக்கு மேலான விவசாயிகள், நகையை வைத்து கடன் பெற்றுள்ளதை வங்கி அதிகாரிகளும் ஊர்ஜிதம் செய்கின்றனர். இது மேலும் எகிற வாய்ப்பு இருக்கிறது. ஏன் இந்த திடீர் பரபரப்பு என விசாரித்தால் அதிர்ச்சி காத்திருக்கிறது. ஒருவர், 5 சவரன் நகையை அடமானம் வைத்து, 50 ஆயிரம் ரூபாய் கடனாக பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். தேர்தலுக்கு பின், கடன் தள்ளுபடி ஆனால், 50 ஆயிரம் லாபம். இதுதான் கூட்டம் அலைமோத காரணம்.

திமுக ஆட்சிக்கு வராவிட்டால்? வழக்கம்போல தவணையில் திருப்பி செலுத்துவோம். 'இதுபோன்ற அறிவிப்புகளை செயல்படுத்த, புதிய அரசு முடிவெடுத்தால், சமூகத்தில் கடும் விளைவுகள் ஏற்படும்' என, பொருளாதார வல்லுனர்கள் கொந்தளிக்கின்றனர்.


கழுத்தை நெரிக்கும் நெருக்கடி : இலவசங்கள்... கடன் தள்ளுபடி...


தி.மு.க., தலைவர் ஸ்டாலினின், 5 பவுன் நகை அடமான கடன் தள்ளுபடி அறிவிப்பு, காங்., தலைவர் ராகுலின் ஏழைகளுக்கு ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் இனாம் அறிவிப்பு போன்றவற்றை செயல்படுத்தினால், நாட்டில் மிக மோசமான நெருக்கடி ஏற்படும் என, பொருளாதார நிபுணர் ராஜா சங்கர் எச்சரிக்கிறார்:

இலவசங்களை கொடுத்து கொடுத்து, ஏற்கனவே கஜானா காலியாகி விட்டது. தமிழக அரசு, ஐந்து லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது. மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த பணம் இல்லை. ஆண்டு தோறும், பற்றாக்குறை பட்ஜெட். இருக்கும் திட்டங்களை நிறைவேற்றவே பணம் இல்லை என்ற போது, புதிது புதிதாக இலவச அறிவிப்புகளை வெளியிட்டால், நிதி நிலை என்ன ஆகும். ஒரு கட்டத்தில், பணத்துக்கு மதிப்பில்லாமல், வெனிசுலா நாட்டு நிலைமை வந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மத்தியில் புதிதாக அமையும் காங்கிரஸ் அரசு, நாடு முழுவதும் விவசாயிகளின், 5 சவரன் அடமான கடனை தள்ளுபடி செய்யும் என்கிறார் ஸ்டாலின். தமிழகத்தில், 25 லட்சம் பயனாளிகள் என்றால், ஒவ்வொருவரும், 50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தால், அதற்கு மட்டுமே, 12 ஆயிரத்து, 500 கோடி தேவைப்படும். நாடு முழுவதும், ஐந்து கோடி பயனாளிகள் என்றால், 5 லட்சம் கோடி ரூபாய் தேவை. இவ்வளவு பணத்துக்கு எங்கே போவது?


வருமான வரி கட்டுபவர்களின் தலையில்தான் கை வைக்க வேண்டும். அவர்கள், ஏற்கனவே கோபத்தில் உள்ளனர். விவசாயமும் ஒரு தொழில் என்கிறபோது, அதற்கு மட்டும் சிறப்பு சலுகை ஏன் என அவர்கள் கேட்கின்றனர். எந்த தொழிலில் இருந்தாலும், நாங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்துக்கு வரி செலுத்த வேண்டும். விவசாயி மட்டும் எவ்வளவு சம்பாதித்தாலும் வரி கிடையாது; இது என்ன நியாயம் என்பது அவர்களின் ஆதங்கம். விதை, உரம், பூச்சி மருந்து எல்லாமே மானியம். விளைச்சல் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரியில்லை. இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்கு உதவி. அதற்கான காப்பீடு தொகையை அரசே செலுத்தும். விளை பொருளை வியாபார தலத்துக்கு எடுத்துச் செல்ல போக்குவரத்து கட்டணம் கிடையாது. இலவச மின்சாரம், இலவச தண்ணீர். இது போக, அவ்வப்போது, விவசாய கடன் தள்ளுபடி. விவசாயி மட்டும் தான் ஏழையா... மற்ற தொழில் செய்கிறவன் ஏழை இல்லையா?இப்படி ஏகப்பட்ட கேள்விகளை கேட்கின்றனர்.

'ஏழைகளுக்கு மாதம் தோறும், 6,௦௦௦ ரூபாய் வீதம், ஐந்து கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' என, காங்., தலைவர் ராகுல் ஏற்கனவே அறிவித்து விட்டார். அதற்கு எத்தனை லட்சம் கோடி ரூபாய் தேவை என்பதை கணக்கிட்டால், தலை சுற்றுகிறது. இந்நிலையில், ஸ்டாலின் அறிவிப்பு. எல்லாவற்றையும் செயல்படுத்த பணம் எங்கே? மாதம் தோறும், அரசு கொடுக்கும் உதவித் தொகை, இலவசங்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கிடைத்தால், ஒருவன் உழைக்க தயாராவானா... பிச்சைக்காரனாக இருக்க ஆசைப்படுவானா? பொறியியல் பட்டதாரி, எட்டாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு செல்கிறான். சும்மா இருப்பவனுக்கு, அரசே, 10 ஆயிரம் கொடுத்தால், படிப்பு எதற்கு, வேலை எதற்கு என்ற சிந்தனை வருமா வராதா?

மகாராஷ்டிராவில், ஒரு விவசாய குடும்பம், வெவ்வேறு வகையில் வாங்கிய கடன் தொகை, 45 கோடி ரூபாய். மொத்த தொகையும் தள்ளுபடியாகி இருக்கிறது. இது வெளியே தெரிந்து, பெரும் பிரச்னையானது. தமிழகத்தின் ஓசூரில், ஒரு விவசாயி, தனக்கு தெரிந்தவர்கள், 400 பேரிடம் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை வாங்கி, அதை வைத்து விவசாய கடனாக பல கோடி பெற்றுள்ளார். அவருக்கும் மொத்த கடனும் தள்ளுபடியாகி, சர்ச்சையாகி இருக்கிறது. நிலமற்ற விவசாய கூலிகளுக்கு அரசு கொடுக்கும் எந்த சலுகையும், போய் சேருவதில்லை. ஆனால், ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருக்கும் பெரும் விவசாயிகளுக்கு, கடன் உள்ளிட்ட எல்லா சலுகைகளும் போய் சேருகிறது. தள்ளுபடி ஆகும் என்று தெரிந்தே, ஏமாற்றும் எண்ணத்தோடு பலர் கடன் பெற்றிருக்கின்றனர்.

ஒருபக்கம் இலவசங்களை கொடுப்பதோடு, இன்னொரு பக்கம், கடனை தள்ளுபடி செய்து கொண்டே போனால், நாட்டில் மிக மோசமான நெருக்கடி ஏற்படும். இது நீடித்தால், வருமான வரி செலுத்துபவர்களுக்கும் -இலவசங்கள், தள்ளுபடிகளை பெறுகிறவர்களுக்கும் இடையே மோதல் வெடிக்கலாம். வங்கிக் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன், தனி நபர் கடன் எல்லாவற்றையும் தள்ளுபடி செய்யக் கோரி போராட்டங்கள் உருவாகலாம். ஸ்டாலின் அறிவித்த சில மணி நேரத்தில் கடன் வாங்க வங்கிக்கு புறப்பட்ட விவசாயிகளின் மனநிலையை பார்த்தால், நாட்டின் எதிர்காலம் என்னாகுமோ என்ற கிலி ஏற்படுகிறது என்றார் ராஜா சங்கர்.

-வி

Advertisement
வாசகர் கருத்து (113)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kudiyanathfans - ayodhya,இந்தியா
11-ஏப்-201918:57:24 IST Report Abuse
kudiyanathfans அட கடவுளே! மோடி 15 லட்சம் தருவாருன்னு சொன்னதெல்லாம் பொய்யா. அப்ப அவர நம்பி ஓட்டு போட்டதற்கு நாமம் தானோ.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
11-ஏப்-201911:10:25 IST Report Abuse
ரத்தினம் கவர்மெண்டு செலவுல டிவி குடுத்து மக்களை ஏமாத்தி அவங்க அப்பன் வீட்டு துட்டில குடுத்தது மாதிரி விளம்பரம் செஞ்சு, கவர்மெண்டு கஜானாவை காலி பண்ணி, கட்டிங் வாங்கி, அவங்க கேபிள் டிவி யாவாரத்த பெருக்கி, அழுமூஞ்சி சீரியலுக்கு அடிமையாக்கி, மானாட மயிலாட பாக்க வச்சு தமிழ் கலாச்சாரத்தை கெடுத்து தமிழ்நாட்டை காலி பண்ணினது மாதிரி இன்னம் எத்தனையோ பிளான் இருக்கு மக்களே.
Rate this:
Share this comment
Cancel
ar saravanan - tiruchirapalli,இந்தியா
09-ஏப்-201917:35:58 IST Report Abuse
ar saravanan ஓசியில் கிடைத்தால் நம் மக்கள் எதை வேண்டுமானாலும் செய்வர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X