லஞ்சம் கேட்டாரா காங்., எம்.பி.,: விசாரணைக்கு உத்தரவு

Updated : ஏப் 05, 2019 | Added : ஏப் 05, 2019 | கருத்துகள் (7)
Advertisement
காங்கிரஸ், ராகவன், லஞ்சம்

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தற்போதைய எம்.பி., ராகவன், தன்னை சந்தித்த 2 பேரிடம் நிலம் வாங்கிக் கொடுக்க ரூ.5 கோடி லஞ்சம் கேட்டதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு தொகுதி எம்.பி.,யாக இருப்பவர் எம்.கே.ராகவன். அவர் மீண்டும் கோழிக்கோடு தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், கேரளாவில் உள்ள தனியார் டிவியில் ராகவன் குறித்த வீடியோ காட்சி ஒளிரப்பப்பானது
அதில், ராகவனை சந்தித்த இரண்டு நிருபர்கள், நிறுவனம் ஒன்று ஐந்து நட்சத்திர ஓட்டல் கட்டுவதற்காக கோழிக்கோட்டில் உள்ள ரூ.15 கோடி மதிப்பு நிலத்தை, வாங்கி தர உதவ வேண்டும் எனகேட்டனர். அவர்களிடம் தேர்தல் செலவு குறித்து விவாதித்த ராகவன், நிலத்தை வாங்கி கொடுக்க ரூ.5 கோடி பணம் கொடுக்க வேண்டும் என கேட்டது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த காட்சிகள் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்த கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சியின் கரீம் கூறுகையில், ராகவன் உடனடியாக பதவி விலகி விசாரணையை சந்திக்க வேண்டும். பதவியில் நீடிக்க அவருக்கு தகுதியில்லை. காங்கிரஸ் உடனடியாக அவரை கோழிக்கோடு தொகுதியிலிருந்து திரும்ப பெற வேண்டும். தேர்தல் விதிகளை மீறி அதிகளவு செலவு செய்துள்ளேன் என்பதை அவர் ஒப்பு கொண்டுள்ளார். இதன் மூலம் தேர்தலில் காங்கிரஸ் கறுப்பு பணத்தை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம் என்றார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ராகவன், இந்த வீடியோ பின்னணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. எனது அரசியல் வாழ்க்கையில், இது போன்று தனிநபர் மீதான தாக்குதலை சந்திப்பது முதல்முறை. இந்த வீடியோ பின்னணியில் பெரிய சதி உள்ளது என்றார்.





இந்த விவகாரம் குறித்து அறிக்கை அளிக்கும்படி கோழிக்கோடு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் டிஜிபிக்கு மாநில தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06-ஏப்-201905:41:37 IST Report Abuse
J.V. Iyer ராகுல் குடும்பம் "முன்ஜாமீன் முத்தையா". இப்பொழுது எல்லா காங்கிரஸ் காரர்களும் இப்படியா? தேவுடா?
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
05-ஏப்-201921:15:41 IST Report Abuse
அசோக்ராஜ் நியூஸ முலூசா படிச்சுட்டோம். பஞ்ச நட்சத்திர ஓட்டல் ரியல் எஸ்டேட் யாவரத்துல ப்ரோக்கர் கமிஷன் கேட்டுருக்காரு. என்ன தப்பு கண்டுட்டாங்க? இதுக்கு டிஜிபி அறிக்கை வேற கொடுக்கணுமாம். ஸ்டுபிட்.
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
05-ஏப்-201919:36:01 IST Report Abuse
Siva காங்கிரஸ் தலைவர் முன்ஜாமீன்... அவரது தாய் mp சோனியா முன்ஜாமீன். மச்சான் ராபர்ட் முன் ஜாமீன்.. அடுத்து ராபர்ட் மனைவி பிரியங்கா... .. நீயெல்லாம் சாதாரணமப்ப......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X