பா.ஜ.,வுக்குள் புயலை கிளப்பிய அத்வானி

Updated : ஏப் 05, 2019 | Added : ஏப் 05, 2019 | கருத்துகள் (61)
Advertisement

புதுடில்லி: நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருக்கும் இந்த நேரத்தில் பா.ஜ., கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, தனது வலைப்பூவில் (பிளாக்) எழுதிய கருத்துகள், அக்கட்சிக்குள் புயலை கிளப்பி உள்ளன.அத்வானி திடீர் கருத்து


திடீரென அத்வானி தனது வலைப்பூ பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது;
துவக்கப்பட்டது முதலே அரசியல் ரீதியாக கருத்து முரண்படுவோரை எதிரிகளாக பா.ஜ., நினைத்ததில்லை. அவர்களை கருத்து வேறுபாடு உள்ளவர்களாக மட்டுமே நினைக்கும்.அதே போல, தேசியம் தொடர்பான கருத்தில் முரண்படுவோரே தேச விரோதிகளாகவும் பா.ஜ., கருதியதில்லை. ஒவ்வொருவரும் சுதந்திரமான கருத்துகளை கொண்டு இருப்பதை பா.ஜ., ஆதரிக்கிறது.

அத்வானியின் கருத்துகள், பா.ஜ.,வில் பலத்த விவாதத்தையும் உருவாக்கி உள்ளது. அத்வானிக்கு இப்போது வயது 91. இம்முறை அவரது காந்திநகர் தொகுதியில் போட்டியிட அவருக்கு சீட் தரப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாக ஏற்கனவே ஒரு தகவல் உலாவி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, இந்த வயதில் அவரால் எப்படி வலைப்பூவில் எழுத முடியும் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அத்வானியுடன் நெருங்கி பழகியவர்கள் கூறும்போது, ‛‛எழுதப்பட்ட கருத்துகள், பயன்படுத்தப்பட்ட ஆங்கில மொழி நடை போன்றவை அத்வானியுடையது அல்ல'' என்கிறார்கள்.
அத்வானியின் கருத்துகள் பெரிதாக பேசப்படுவதற்கு முன்பே மோடி தலையிட்டு, அத்வானியின் கருத்தை வரவேற்று டுவீட் செய்து சுமூகமாக்கி விட்டார். அவர், ‛‛பா.ஜ.,வின் கொள்கையை அத்வானி பிரதிபலித்துள்ளார். முதலில் நாடு, பிறகு கட்சி, அடுத்து தான் தனிநபர் என்ற கோட்பாட்டை அத்வானி சுட்டிக்காட்டி உள்ளார்'' தனது டுவீட்டில் கூறிவிட்டு, அத்வானி வலைப்பூவின் லிங்கையும் கொடுத்துள்ளார்.
மம்தாவும் பிரியாங்காவும் கூட அமைதியாகி விட்டனர்.ஆனால் பிரியங்காவின் கணவர் வாத்ரா தனது டுவீட்டில், ‛‛அத்வானியை அவரது கட்சி மறந்தது கவலைக்குரியது'' என்று கூறியுள்ளார்.


யார் வேலை ?


அத்வானி கருத்து வெளியிட காரணம், அவருக்கு நெருக்கமானவர்கள் தான் செய்திருக்க வேண்டும் என்று பா.ஜ.,வினர் சந்தேகப்படுகின்றனர். டில்லியில் வாஜ்பாய், மம்தா, அத்வானி குடும்பத்தினருக்கு நெருக்கமாக பத்திரிகையாளர் ஒருவர் தான் அத்வானியின் கருத்தை எழுதித் தந்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kudiyanathfans - ayodhya,இந்தியா
11-ஏப்-201919:03:43 IST Report Abuse
kudiyanathfans அடேங்கப்பா என்ன ஒரு புயலு இவரு பெரிய மஹாத்மா பாரு
Rate this:
Share this comment
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
06-ஏப்-201912:51:09 IST Report Abuse
Divahar கருத்து மோதல்களுக்காக பலர் கொலை செய்யப்பட்டு இருக்கிறதாக செய்திகள் வந்தது.
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
06-ஏப்-201917:37:45 IST Report Abuse
Chowkidar NandaIndiaஆம். கருத்து சரியாகயில்லை என்பதற்காக மதுரையில் பத்திரிக்கை அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதும் நடந்ததே....
Rate this:
Share this comment
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
07-ஏப்-201912:59:53 IST Report Abuse
Mohamed Ilyasஆம் , தபோல்கர் , கௌரி லங்கேஷ் போன்று...
Rate this:
Share this comment
Cancel
06-ஏப்-201912:43:26 IST Report Abuse
mannanthai Age... too much advance age related problem. Telling something to attract people to look at (as being ignored) We have to tolerate.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X