பா.ஜ., வேட்பாளர் பிரசாரத்தில்பாட்டில் வீசிய இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., வேட்பாளர் பிரசாரத்தில்பாட்டில் வீசிய இருவர் கைது

Added : ஏப் 06, 2019
Share

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தில் பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பிரசாரத்தில் ஈடுபட்ட போது பாட்டில் வீசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் லோக்சபா பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஏப்.,1ல் பெரியபட்டிணம் பகுதியில் அமைச்சர் மணிகண்டன், அன்வர்ராஜா எம்.பி., உள்ளிட்டோருடன் பிரசாரம் மேற்கொண்டார். பெரியபட்டினம் பகுதியில் ஓட்டு கேட்ட போது வீட்டு மாடியில் இருந்து யாரோ மர்ம நபர்கள் சோடா பாட்டிலை வீசினர்.

இதில் திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் உதயதேவர் தலையில் காயம் ஏற்பட்டது. அவருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. லோக்சபா தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பா.ஜ., வேட்பாளர் பிரசாரத்தில் பாட்டில் வீசியது ராமநாதபுரம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாட்டில் வீச்சு சம்பவம் தொடர்பாக திருப்புல்லாணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில் பாட்டில் வீச்சு தொடர்பாக பெரியபட்டினத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் ரிபாஸ்கான் 22, முஹமது பாதுஷா33, ஆகிய இருவரையும் திருப்புல்லாணி போலீசார் கைது செய்து ராமநாதபுரம் முதலாவது மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X