பா.ஜ.,தேர்தல் அறிக்கை தாமத ரகசியம்

Updated : ஏப் 06, 2019 | Added : ஏப் 06, 2019 | கருத்துகள் (39)
Share
Advertisement

புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்காக காங்., தேர்தல் அறிக்கையை ஏப்.,02 அன்று வெளியிட்டது. ஆனால் பா.ஜ., இதுவரை தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. நாளை (ஏப்.,07) பா.ஜ., தேர்தல் அறிக்கை வெளியிடப்படலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.



latest tamil news


தேர்தல் நெருங்கும் நேரத்திலும், கடைசி நிமிடத்திலும் தேர்தல் அறிக்கையை வெளியிடுவது பா.ஜ.,விற்கு புதிதல்ல. கடந்த 3 லோக்சபா தேர்தல்களிலும் காங்.,க்கு பிறகு பா.ஜ., தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2004 ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, தேர்தல் தேதி ஏப்.,20 என அறிவிக்கப்பட்ட நிலையில் மார்ச் 22 ம் தேதி காங்.,ம், பா.ஜ., ஏப்.,8 ம் தேதியும் தேர்தல் அறிக்கை வெளியிட்டன.
2009ம் ஆண்டு லோக்சபா தேர்தல் ஏப்., 16 ல் நடந்தது. அந்த ஆண்டு மார்ச் 24 காங்.,ம், ஏப்ரல் 3 ம் தேதி பா.ஜ.,ம் தேர்தல் அறிக்கை வெளியிட்டன. 2014 ம் ஆண்டு மார்ச் 26 ம் தேதி காங்., தேர்தல் அறிக்கை வெளியிட்ட நிலையில், தேர்தல் நாளான ஏப்.,07 அன்று தான் பா.ஜ., தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.


latest tamil news


2014 ல் தேர்தல் நாளன்று பா.ஜ., வெளியிட்ட தேர்தல் அறிக்கை சர்ச்சையாக்கப்பட்டது. இது வாக்காளர்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என காங்.,ம் தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு 48 மணிநேரத்திற்கு முன் தேர்தல் அறிக்கையை வெளியிட தேர்தல் கமிஷன் தடை விதித்தது. இதற்கு முன், தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு பின் பிரசாரம் செய்ய மட்டுமே தடை விதித்திருந்தது.


latest tamil news



பா.ஜ., திட்டம் பலிக்குமா? : கடைசி நிமிடத்தில் தேர்தல் அறிக்கை வெளியிட்டால் அது வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பா.ஜ., கருதுகிறது. இதற்கு முந்தைய தேர்தல்களிலும் பா.ஜ.,வின் இந்த வியூகம் ஓரளவிற்கு கை கொடுத்துள்ளது. இந்த ஆண்டு காங்., தேர்தல் அறிக்கைக்கு பிறகு வெளியிடப்பட உள்ள பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில், காங்.,ன் வாக்குறுதிகளுக்கு சற்றும் சளைக்காத வகையில் வாக்குறுதிகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
பா.ஜ.,வின் 20 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, காங்.,ன் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவசாயிகள், வேலைவாய்ப்புக்கள், உள்நாட்டு பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை மிஞ்சும் அளவிற்கு பல அம்சங்களை மாற்றி அமைக்கலாம் என கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-ஏப்-201922:35:29 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தேர்தல் அறிக்கையை படிச்சிட்டு ஓட்டு போடுற அளவுக்கு நம்ம மக்கள் இருந்தா நாடு ஏண்டா இப்படி இருக்க போகுது. பக்கோடா கூட கட்டி தர முடியாது.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-ஏப்-201922:34:11 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் "காப்பி வாரியர்ஸ்" புத்தகத்தில் மோடி இதை பத்தி தெளிவா வெளக்கியிருக்காரு.
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
06-ஏப்-201921:43:29 IST Report Abuse
Anandan மத்தவர்கள் அறிக்கையை பார்த்துவிட்டு அதில் கொஞ்சம் கரம் மசாலா சேர்த்து ஒரு அறிக்கை விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X