ராகுல் பேரணி பச்சைக் கொடியால் பரபரப்பு

Updated : ஏப் 06, 2019 | Added : ஏப் 06, 2019 | கருத்துகள் (36)
Advertisement

புதுடில்லி: கேரளாவில் வயநாட்டில் வேட்பு மனு தாக்கல் செய்ய ராகுல் சென்றபோது பேரணியில் பறந்த பிறையுடன் கூடிய பச்சை நிற இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யு.எம்.எல்.,) கொடியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


பார்ப்பதற்கு பாகிஸ்தான் கொடி போலவே இருக்கும் ஐ.யு.எம்.எல்., கொடியால் ஏற்கனவே வட இந்தியாவில் பிரச்னை ஏற்பட்டது.

ராகுலுக்கு எதிராக பிரசாரம் செய்யும் பா.ஜ.,வினர் இதையே குறிப்பிட்டு, இந்துக்களின் ஓட்டுகளை கேட்க செல்லும்போது பூணூல் அணியும் ராகுல், முஸ்லீம் ஓட்டுகளை கேட்க செல்லும்போது பச்சைக் கொடி ஏந்தியவர்களுடன் செல்கிறார் என்று குற்றம்சாட்டுகின்றனர்.இதை புரிந்து வைத்துள்ள உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் பேரணியில் முடிந்த அளவு முஸ்லீம் லீக் கொடிகளின் எண்ணிக்கையை குறைக்கப் பார்க்கின்றனர்.

வயநாடு தொகுதியில் ஏற்கனவே முஸ்லீம்கள் அதிகம். இங்கு வேட்பு மனு தாக்கல் செய்ய ராகுல் வந்தபோது, நுாற்றுக்கணக்கான முஸ்லீம் லீக் கட்சியினர் ஏராளமான கொடிகளுடன் வந்துவிட்டனர்.

முஸ்லீம் லீக் கொடியில் இடது மேல் ஓரத்தில் பிறை, நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும். ஆனால், பாக்., கொடியில் இவை கொடியின் நடுவே இடம் பெற்றிருக்கும்.
சாதாரண மக்களுக்கு இவையெல்லாம் புரியப் போவதில்லை. பச்சைக்கொடி ஏன் இடம் பெற்றது என்பது தான் அவர்களது கேள்வியாக இருக்கிறது. இதற்கு பதில் சொல்வதே காங்கிரசுக்குபெரிய வேலையாக இருக்கிறது.
இருப்பினும் வயநாட்டில் பெரும்பான்மை முஸ்லீம் ஓட்டுகள் ராகுலுக்கு கிடைக்கும் என்று காங்., கணக்குப் போடுகிறது.
மோடியின் கருத்து என்ன :
ஏப்.1ம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள வார்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ‛‛நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் மீது ‛இந்து தீவிரவாதம்' என்ற முத்திரையை பதிக்க காங்., முயற்சிக்கிறது. அனைத்து மக்களையும் சகோதரர்களாகவும், உலகத்தையே தங்கள் குடும்பமாக நினைக்கும் இந்துக்களை தீவிரவாதிகள் என்கிறது காங்., இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதியில் போட்டியிட அக்கட்சி (ராகுல்) தயாராக இல்லை. எனவே தான், சிறுபான்மையினர் மெஜாரிட்டியாக உள்ள தொகுதியில் அக்கட்சி போட்டியிடுகிறது'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sams - Palakkad,இந்தியா
07-ஏப்-201906:31:17 IST Report Abuse
sams பாகிஸ்தான் கொடிக்கும் லீக் கொடிக்கும் வித்தியாசம் தெரியாத மூடர்கள்.
Rate this:
Share this comment
Cancel
k balakumaran - London,யுனைடெட் கிங்டம்
07-ஏப்-201905:32:05 IST Report Abuse
k balakumaran பாகிஸ்தான் பச்சை கொடியை காட்டியாவது ஒட்டு மொத்த முஸ்லீம் வாக்குகளை பெற்று எப்படியாவது வென்று விட வேண்டும் என்றே கேரளாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நிற்கிறார். அவருக்கே வட இந்தியாவில் வெல்லுவோமா என்ற சந்தேகம் வந்து விட்டது. பாதிரிகள் தேவாலயத்தில் இவருக்கே எல்லோரும் வாக்கு செலுத்தணும் என்று வேறு பிரசங்கம் செய்கின்றனர். ஆகவே, வய நாட்டில் வெற்றி உறுதி. ஆனால், பெரும்பான்மை இந்துக்களை நம்பாமல் சிறுபான்மையிடம் சென்று தஞ்சம் அடைவது காங்கிரஸ் கட்சி என்ற ஓடம் வண்டியில் ஏறும் இழி நிலைக்கு வந்து விட்டதையே காட்டுகிறது. மக்கள் நலத்தை புறம் தள்ளி இந்தியாவே சொந்த குடும்ப சொத்து என்ற மமதையில் 50 வருடம் காலம் தள்ளிய காங்கிரஸ் தலைமை "உண்ண பாண் இல்லை என்றால் கேக் ஐ சாப்பிடுவது தானே" என்று சொல்லிய முதல் குடும்பம் பிரெஞ்சு மக்களின் கிளர்ச்சியில் காணாமல் போய் விட்டது போல காங்கிரஸ் கட்சியும் காணாமல் போகும் காலம் விரைவில் வந்து கொண்டு இருக்கிறது. இந்துக்கள் மேல் நம்பிக்கை அற்ற காங்கிரஸ் கட்ச்சியை விட இந்துக்களுடன் எல்லோரையும் அரவணைத்து எல்லோரும் இந்நாட்டு மன்னர் ஆக வாழ வைக்கும் பிஜேபியும் அதன் பிரதமர் திரு மோடிஜியும் இந்த நாட்டுக்கு எவ்வளவோ மேல். அடுத்த பிரதமர் மோடிஜி தான். வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
07-ஏப்-201905:25:26 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> இதென்னங்க அதிசயம் வயநாடுளே மேக்சிமம் முஸ்லிம்கள் இருக்காங்களே .எல்லாமுஸ்லிம்களுக்கும் (சமீபத்துல மதம் மாறினாலும்கூட )விவரமே புரியாமல் (ஒரு ஆடு குழிலேவிழுந்தால் பின்னாலேபோவும் எல்லா ஆடுகளும் குளிலே வீழவதைப்போல )உலகில்வாழும் எல்லா முஸ்லிம்களையும் தன ரத்தமா என்னும் துலுக்கா அதிகம் தீவிரவாதம் காலிலே ஈடுபட்டு காவுகொடுக்கவே இந்த இந்தியநாட்டு இளைஞர்களை இழுத்துண்டுபோவுதுங்க அந்த இயக்கம் பரம்பரை முஸ்லீம்களும் உண்டு ஆனால் எல்லோருமே தின்பது இந்தியமண்ணின் சோறு சுவாசிப்பது இந்திய காத்து குடிப்பது இந்திய தண்ணீருமேதான் சோனியா அண்ட் குடும்பமே பாகிஸ்தான் விசுவாசிகளேதான் நேரு பரம்பரையே கூட ஆனாலும் இந்துக்களும் இருக்கா அண்ட் அவால்லேயும் காங்கிரஸ் மீது வெறுப்பாக இருக்காங்க என்பத்துதான் உண்மை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X