காங்கிரசுடன் கூட்டணி: ஆம் ஆத்மி நிபந்தனை

Updated : ஏப் 06, 2019 | Added : ஏப் 06, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
 காங்கிரஸ்,கூட்டணி, ஆம்ஆத்மி, நிபந்தனை


புதுடில்லி:'காங்., தலைவர் ராகுல், தங்கள் நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே, லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்கப்படும்' என, ஆம் ஆத்மி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார்.இங்குள்ள, ஏழு லோக்சபா தொகுதிகளுக்கு, மே, 12ல் தேர்தல் நடக்கவுள்ளது.இங்கு, ஆம் ஆத்மியும், காங்கிரசும் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சு நடத்தி வந்தாலும், இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்கள், கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

இதில், 'இரண்டு முக்கிய நிபந்தனைகளை, காங்., ஏற்றால் மட்டுமே, கூட்டணி அமைக்க வேண்டும்' என, முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து, ஆம் ஆத்மி வட்டாரங்கள் கூறியதாவது:டில்லிக்கு தனி மாநில அந்தஸ்து அளிப்பதை பகிரங்கமாக, காங்., அறிவிக்க வேண்டும்; டில்லி மற்றும் ஹரியானா மாநிலத்தில், கணிசமான லோக்சபா தொகுதிகளை ஆம் ஆத்மிக்கு தர வேண்டும்.இந்த இரண்டு நிபந்தனைகளை, காங்., தலைவர் ராகுல் ஏற்றால் மட்டுமே, டில்லி மற்றும் ஹரியானா மாநிலங்களில், காங்கிரசுடன் கூட்டணி அமைக்கப்படும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


latest tamil news




ஆம் ஆத்மி கட்சியின் புது நிபந்தனைகள் குறித்து, காங்., தலைவர் ராகுல், கட்சி நிர்வாகிகளுடன் விவாதித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா
07-ஏப்-201920:14:18 IST Report Abuse
Yes your honor காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்தால், தி.க.வுடன் உறவு கொண்டாடும் தி.மு.க.வின் கதி தான் கெஜ்ரிவாலுக்கும் வரும். ஷீலா தீக்ஷித்தை எதிர்த்து நின்று, ஜெயித்து, தன் பலத்தையும், திறமையையும் நிரூபித்துள்ள வேளையில், இப்பொழுது கூட்டணி சேர்ந்தால், டெல்லி மக்களிடம் மரியாதை கெடுத்துக்கொண்டதுபோல் ஆகிவிடும். வெற்றியோ தோல்வியோ, தனித்து நின்றால் ராஜா, இல்லையேல் ஷீலா தீக்ஷித், கெஜ்ரிவாலை தனக்கு கூஜா தூக்கவைத்து, தன் தோல்விக்கு பழிதீர்த்துக் கொள்வார்......
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
07-ஏப்-201918:01:59 IST Report Abuse
Sridhar ஒரு மாதத்துக்கு முன் இழுபறி நிலை இருந்த போது, இந்த கூட்டணியில் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. இப்போது பிஜேபி 300 + இங்கிற நிலமையில, இவனுக 7 சீட்டுக்கு கூட்டணி வச்சா என்ன வைக்காட்டி என்ன? ஆனா ஒன்னு, அம் ஆத்மி கட்சியிலே தல மோசமானாலும், தொண்டர்கள் அப்பாவிகள். பாவம் அவனை இன்னுமும் நம்பிக்கொண்டு மாற்று அரசியல் கொண்டு வருவான் என்ற கற்பனையில் அக்கட்சியில் இருப்பவர்கள். காங் உடன் கூட்டணி அமைந்தால், வெறுப்பின் உச்சத்துக்கே போய், BJP கு ஒட்டு போட்டாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை மேலும் ஷீலா திக்ஷித் அம்ரிந்தர் சிங் போன்றவர்கள் காங் கிலிருந்து விலகவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே, இந்த கூட்டணி அமைந்தால் நல்ல வேடிக்கை பார்க்கலாம்
Rate this:
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
07-ஏப்-201911:40:07 IST Report Abuse
Nalam Virumbi சங்கர் நியூ ஜெர்சி கமெண்ட் சூப்பர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X