சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லூரி மாணவி கொலை; குற்றவாளி கைது!

Added : ஏப் 07, 2019 | கருத்துகள் (11)
Advertisement
கல்லுாரி மாணவி ,கொலை,குற்றவாளி கைது!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கல்லுாரி மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பூசாரிபட்டியில், நேற்று(ஏப்.,6) கழுத்தறுத்து கல்லுாரி மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கைதுசெய்யப்பட்ட சதீஷ், கொலை செய்யப்பட்ட மாணவியின் உறவினர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வந்த ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த மாணவி பிரகதி சனியன்று, பொள்ளாச்சி அருகே பூசாரிபட்டியில் சாலையோரத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மாணவியை கொன்றதாக, ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த அவரது உறவினர் சதீஷ்குமார் என்பவனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். காதல் விவகாரமே இந்த கொலைக்கு காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பைனான்ஸ் தொழில் செய்யும் சதீஷும் - பிரகதியும் காதலித்து வந்துள்ளனர். பிரகதிக்கு அவ்வப்போது நகைகள் வாங்கி கொடுத்தும், செலவுக்கு பணம் கொடுத்தும் உதவி வந்துள்ளான் சதீஷ். சில ஆண்டுகளுக்குமுன் பிரகதியை திருமணம் செய்துவைக்ககோரி சதீஷ் கேட்டபோது, மாணவியின் பெற்றோர் மறுத்துவிட்டதால், சதீஷ்குமார் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இருப்பினும், சதிஷ்-பிரகதி இடையேயான காதல் தொடர்ந்து கொண்டுதான் இருந்துள்ளது. இந்த சமயத்தில்தான் பிரகதிக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வைகாசியில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், சதீஷ்குமாரிடம் திருமணத்திற்கு நகை வாங்கி தருமாறு பிரகதி கேட்டதாக கூறப்படுகிறது. இது, சதீஷுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரகதி வேறொருவரை திருமணம் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாத சதீஷ், பிரகதியை கொலை செய்ய திட்டம் தீட்டினான். வெள்ளியன்று கல்லூரியில் இருந்து ஊருக்கு புறப்பட்ட பிரகதியை காரில் அழைத்து சென்ற சதீஷ், பொள்ளாச்சி பூசாரி பட்டி அருகே பிரகதியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, உடலை சாலையோர புதருக்குள் தள்ளிவிட்டுவிட்டு தலைமறைவானான். ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு என்ற மலைப்பகுதியில் பதுங்கியிருந்த சதீைஷ தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
14-ஏப்-201917:37:19 IST Report Abuse
Somiah M theethum nantrum pirar thara vaaraa .............mutrilum unmaiyaanathu .
Rate this:
Share this comment
Cancel
Manikandan Sivalingam - delhi,இந்தியா
13-ஏப்-201916:08:53 IST Report Abuse
Manikandan Sivalingam பெண்களுக்கு உச்சநீதிமன்ற தீர்பின் வழிகாட்டுதல்?????
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
11-ஏப்-201920:04:24 IST Report Abuse
Amirthalingam Shanmugam பாவத்தின் சம்பளம் மரணம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X