தமிழ்நாடு

பிரசாரம்! களை கட்டியது சிதம்பரம் தொகுதியில் தேர்தல்...வெற்றியை நோக்கி அ.தி.மு.க., - வி.சி., பயணம்

Added : ஏப் 07, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
 பிரசாரம்! களை கட்டியது சிதம்பரம் தொகுதியில் தேர்தல்...வெற்றியை நோக்கி அ.தி.மு.க., - வி.சி., பயணம்

சிதம்பரம்:சிதம்பரம் தொகுதியை இந்த முறையும் தவற விட்டு விடக்கூடாது என, வி.சி., கட்சியும், தொகுதியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என, அ.தி.மு.க.,வும் போட்டி போட்டுக் கொண்டு, பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், அரியலுார் மாவட்டத்தில் அரியலுார், ஜெயங்கொண்டம், பெரம்பலுார் மாவட்டத்தில் குன்னம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது சிதம்பரம் லோக்சபா தொகுதி. இத்தொகுதியில் காங்., 6 முறை வெற்றி பெற்று கோட்டையாக வைத்திருந்தது. தி.மு.க., நான்கு முறை, பா.ம.க., மூன்று முறை தொகுதியை தன் வசம் வைத்திருந்தன. ஆனால், மூன்று கட்சிகளுமே இந்த தேர்தலில் போட்டியில் இருந்து பின் வாங்கின. தொகுதியில் ஐந்தாவது முறையாக வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்,களம் இறங்கியுள்ளார்.
கடந்த (2014 ஆண்டு) தேர்தலில் திருமாவளவனை வீழ்த்திய அ.தி.மு.க., மீண்டும் மோதுகிறது. அக்கட்சி வேட்பாளராக சந்திரசேகர் களம் இறக்கப்பட்டுள்ளார். அத்துடன் அ.ம.மு.க சார்பில், வழக்கறிஞர் இளவரசன், மக்கள் நீதி மையம் வேட்பாளர் ரவி உள்ளிட்ட 13 பேர் தேர்தல் போட்டியில் உள்ளனர். சிதம்பரம் தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்ற அ.தி.மு.க., தொடர்ந்து வெற்றி பெறுவதன் மூலம், சிதம்பரத்தை அ.தி.மு.க., கோட்டையாக மாற்ற வேண்டும் என்ற முடிவுடன், தீவிரமாக பிரசாரத்தில் இறங்கியுள்ளது. அதே சமயத்தில், தொடர்ந்து 4 முறை போட்டியிட்டு ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றதால், இந்த முறை வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முடிவுடன் வி.சி., வேட்பாளர் திருமாவளவன் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.
தொகுதியில் அ.தி.மு.க., - வி.சி., வேட்பாளர்கள் இருவருமே, வெற்றி இலக்குடன், கூட்டணி கட்சியினருடன் பம்பரமாக சுழன்று பிரசாரம் செய்து வருகின்றனர். அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். வி.சி.,வேட்பாளருக்கு ஆதரவாக ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பிரசாரம் மேற்கொண்டனர். வரும் 12ம் தேதி தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வருகிறார். தலைவர்கள் பிரசாரத்தால் கூட்டணி கட்சியினரும், தொண்டர்களும் உற்சாகமடைந்து பிரசாரத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால், சிதம்பரம் தொகுதியில் தேர்தல் பிரிசாரம் 'களை' கட்ட துவங்கியுள்ளது. மேலும், தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க.,- மக்கள் நீதி மையம் வேட்பாளர்களும் முடிந்த அளவிற்கு தொகுதியில் பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அவர்கள் சார்ந்த கட்சி தலைவர்கள் யாரும் இதுவரை பிரசாரத்திற்கு வராதது வேட்பாளர்களுக்கு பெரும் குறையாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
10-ஏப்-201916:14:43 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> கூட்டணியே கேவலம் அசிங்கம்
Rate this:
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
10-ஏப்-201914:28:49 IST Report Abuse
Yaro Oruvan மக்களே சிந்த்தித்து வாக்களியுங்கள் - அடங்க மறு அத்துமீறி அடுத்த சாதி பெண்களை கயப்புடிச்சி இழு...இத ஒரு குறிக்கோள் கொள்கையா வச்சிருக்கிற கட்சிக்கா உங்கள் ஒட்டு ?
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
10-ஏப்-201913:42:35 IST Report Abuse
bal சிதம்பரம் கோவிலை அசிங்கப்படுத்திய திமுக வீசி கு வோட்டு போடாதீர்கள்...தொல் நாடகம் பண்ணுகிறார் கோவிலுக்கெல்லாம் பொய்...எங்கே ஒரு கண்டனம் வீரமணிக்கு சொல்ல சொல்லுங்கள். பார்ப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X