பதிவு செய்த நாள் :
தேர்தல் முடிவுக்கு காத்திருக்க
எதிர்க்கட்சி தலைவர்கள் தயார்!

புதுடில்லி: 'தேர்தலில் பதிவாகும் ஓட்டுகளில், 50 சதவீதத்தை எண்ணுவதால், தேர்தல் முடிவுகள் வெளியாக, ஆறு நாட்கள் தாமதமாகும் என்றால், அதற்காக காத்திருக்க தயார்' என, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு உட்பட, 21 எதிர்க்கட்சித் தலைவர்கள், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் முடிவு,காத்திருக்க,எதிர்க்கட்சி,தலைவர்கள்,தயார்!


லோக்சபாவுக்கான தேர்தல், 11ல் துவங்கி, மே, 19 வரை ஏழு கட்டங்களாக நடக்கின்றன. இந்தத் தேர்தலில் அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களுடன், வி.வி.பி.ஏ.டி., எனப்படும், ஓட்டு உறுதி இயந்திரமும் பயன்படுத்தப்பட உள்ளது. ஒருவர், ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், தன் ஓட்டைப் பதிவு செய்ததும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள, இந்த ஓட்டு உறுதி இயந்திரத்தில், ஒரு சீட்டு அச்சாகும்.

வழங்கப்படாது:


அந்த சீட்டைப் பார்த்து, தங்கள் ஓட்டு, சரியாக பதிவாகி உள்ளதா என்பதை, வாக்காளர்கள் உறுதி செய்ய முடியும். ஆனால், இந்த சீட்டுகள், வாக்காளர்களுக்கு வழங்கப்படாது. தேர்தல் முடிவுகளில் சர்ச்சை ஏற்பட்டால், இந்த ஓட்டு உறுதிச் சீட்டு எண்ணப்பட்டு,

அதன்அடிப்படையில், முடிவு அறிவிக்கப்படும். 'வரும் லோக்சபா தேர்தலில், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், ஒரு ஓட்டுச் சாவடியில் பதிவாகும் ஓட்டு உறுதிச் சீட்டுகள் எண்ணப்படும்' என, தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ஆனால், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான, சந்திரபாபு நாயுடு தலைமையில், 21 எதிர்க்கட்சிகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில், ஒரு பொது நலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 'தேர்தலில் பதிவாகும், 50 சதவீத ஓட்டு உறுதிச் சீட்டுகள் எண்ணப்பட வேண்டும்' என, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்த, தேர்தல் ஆணையம் கூறியதாவது: லோக்சபாவுக்கு ஏற்கனவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அதற்கான நடைமுறைகள் துவங்கி விட்டன. இந்நிலையில், 50 சதவீத ஓட்டு உறுதிச் சீட்டுகளை எண்ண வேண்டுமானால், தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கு, கூடுதலாக, ஐந்து நாட்கள் தேவைப்படும். இதற்கு கூடுதலாக தேர்தல் அதிகாரிகள் தேவைப்படுகின்றனர். அடுத்த தேர்தலில் இருந்து, 50 சதவீத சீட்டுகளை எண்ணும் நடைமுறையை செயல்படுத்த தயாராக உள்ளோம். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.

தேர்தல் ஆணையத்தின் இந்த வாதத்துக்கு பதிலளிக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சந்திரபாபு நாயுடு தலைமையிலான, 21 எதிர்க்கட்சித் தலைவர்கள் சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

வலுப்படும்:


அதில், கூறப்பட்டு உள்ளதாவது: மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தின் மீது, எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இருப்பினும், தேர்தல் நடைமுறைகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்கின்றன என்ற நம்பிக்கையை, மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். மொத்தம் பதிவாகும் ஓட்டு சீட்டுகளில், 50 சதவீதத்தை எண்ணுவதால், இந்த நம்பிக்கை வலுப்படும். தேர்தல் முடிவுகள் வெளியிட, ஐந்து நாட்கள் கூடுதலானால், அதை ஏற்கத் தயாராக உள்ளோம். இது அதிக தாமதமில்லை; அதனால், இதை ஏற்பதற்கு தயாராக உள்ளோம்.

கூடுதல் தேர்தல் அதிகாரிகளை நியமித்தால், இந்தக் காலதாமதத்தை, மேலும் குறைக்க முடியும். அதனால், 50 சதவீத ஓட்டு உறுதிச் சீட்டுகளை எண்ணுவதற்கு, உத்தரவிட வேண்டும். இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayaraman Sekar - Bangalore,இந்தியா
08-ஏப்-201917:01:01 IST Report Abuse

Jayaraman Sekarகிராமங்களில் ஒரு சொலவடை சொல்வார்கள் மொட்டை தலையை எப்படி வெட்டறதுன்னு .... அந்த மாதிரி இருக்கு இது வோட்டிங் மெஷினை எண்ணி சொல்லிறட்டும் அப்புறம் யாருக்கேனும் சந்தேகம் இருந்தா பணம் கட்டி பேப்பர் பேலட் ஐ எண்ணிக்கலாம் இதுக்கு பொய் கேஸ் என்ன ? எப்படி இருந்தாலும் வோட் போட்ட பெரிய மனுஷங்க கண்டிப்பா சொல்லப் போறாங்க நான் போட்ட வோட் சரியா பதிவாகலின்னு... இனி காமெரா தான் வைக்கணும் அப்படி யாரும் சொன்னாங்கன்னா கேமரா வை செக் பண்ணிக்கலாம்....

Rate this:
08-ஏப்-201914:36:38 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்பாதி எண்ணிய பிறகு முகத்தில் கரியை பூசிக்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக இருக்க வேண்டும்.

Rate this:
Kumar - Chennai,இந்தியா
08-ஏப்-201919:16:45 IST Report Abuse

Kumarதேர்தலுக்கு பிறகு வரும் எதிர்கட்சியை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறன். ...

Rate this:
Loganathan Balakrishnan - Salem,இந்தியா
08-ஏப்-201909:39:21 IST Report Abuse

Loganathan Balakrishnanஇதற்கு முன்னாடி சந்திரபாபு ஜெயித்து முதல்வர் பதவியில் உக்காரும்போது நம்பும் போது இப்ப என்ன பிரச்சினை

Rate this:
JIVAN - Cuddalore District,இந்தியா
08-ஏப்-201911:08:45 IST Report Abuse

JIVANஅப்போ அவர் பிஜேபி யோட இருந்தார் அதனால கூட இருக்கலாம் ...

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X