அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஐடி அதிகாரிகளுக்காக காத்திருக்கிறோம்: ப.சிதம்பரம்

Updated : ஏப் 08, 2019 | Added : ஏப் 08, 2019 | கருத்துகள் (109)
Advertisement

சென்னை : தனது வீட்டில் சோதனை நடத்த திட்டமிட்டிருக்கும் வருமான வரித்துறை அதிகாரிகளை வரவேற்க காத்திருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.






இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டுவீட்டில், எனக்குக் கிடைத்த தகவல்: என்னுடைய சென்னை மற்றும் மானகிரி வீடுகளில் வருமான வரி இலாகாவின் சோதனை எந்த நேரத்திலும் நடக்கலாம். வருமான வரி அதிகாரிகளை நாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம். எங்கள் தேர்தல் பணிகளை முடக்கவே இந்த நடவடிக்கை என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். இந்த அரசின் அத்து மீறல்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நாளன்று சரியான பாடம் புகட்டுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.





இன்று காலை அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரதமரின் ஒவ்வொரு பிரசார கூட்டத்திற்கும் எத்தனை கோடிகள் செலவிடப்படுகிறது என பிரதமரின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கேட்கிறார்கள். ஒவ்வொரு பிரசார கூட்டத்திற்கும், பணக்கார குடும்பத்தின் திருமண விழாவில் செய்யப்படுவதை விட பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது. ஏராளமான எல்இடி திரைகள் அமைக்கப்படுகிறது. இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது?





பிரதமரின் ஒவ்வொரு கூட்டத்திற்கும் செய்யப்படும் செலவு, வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும் அல்லது வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்பவரின் கணக்கில் சேர்க்கப்படுமா? இவ்வாறு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (109)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
marimuthu - Riyadh,சவுதி அரேபியா
09-ஏப்-201916:15:34 IST Report Abuse
marimuthu பிரச்சாரத்திற்கு போகலையா
Rate this:
Share this comment
Cancel
ரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா
09-ஏப்-201912:19:20 IST Report Abuse
ரபேல் ராகுல் பாய் "ஜமீன்" பரம்பரையா இருக்கும்னு பாத்தா இது "ஜாமீன்" பரம்பரையா இருக்கு..... கருமம்...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-ஏப்-201908:16:58 IST Report Abuse
Srinivasan Kannaiya உப்பை தின்று விட்டு தண்ணீருக்கு காத்திருக்கும் ஜீவன்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X