2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாகும்: பிரதமர் பேச்சு

Updated : ஏப் 08, 2019 | Added : ஏப் 08, 2019 | கருத்துகள் (54)
Advertisement
BJPManifesto, BJPSankalpPatr2019, BJPJumlaManifesto, Sankalp Patra, Rajnath Singh, Ram Mandir, Citizenship Amendment Bill,  பா.ஜ., பாஜ, தேர்தல் அறிக்கை, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங், ஜெட்லி, சுஷ்மா

புதுடில்லி: மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் பா.ஜ., தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பா.ஜ., தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், தேசியம் தான் எங்களது நோக்கம். பலவீனமான சமூகத்திற்கு அதிகாரம் அளிப்பது எங்களது கொள்கை. சிறந்த நிர்வாகம் எங்களது மந்திரம். 5 ஆண்டில் எனக்கு அளித்த ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும். இந்த தேர்தல் அறிக்கையை தயாரிக்க ராஜ்நாத் 3 மாதங்கள் பணியாற்றியுள்ளார். அரசு தொடர்ந்து, ஆட்சியில் இருக்கும் வகையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரச்னைகளை அறிந்து சிறந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களின் எண்ணங்களை தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது. ஜனநாயகத்தின் ஆன்மாவை தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது.


சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் கனவு நிறைவேற்றப்படும். எதிர்காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பது குறித்து முக்கியத்துவம் அளிக்கப்படும். பா.ஜ., தேர்தல் அறிக்கையில் 75 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதனை, குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றுவோம். இந்தியா வளர்ச்சி பெற, வளர்ச்சி என்பது பெரிய இயக்கமாக மாற வேண்டும்.2047 க்குள் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக மாறும்21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். ஆசியாவை இந்தியா வழிநடத்தி செல்லும். இவ்வாறு பிரதமர் பேசினார்.


சாத்தியம்


தேர்தல் அறிக்கையை தயாரித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை சாத்தியமானது. நடைமுறைபடுத்தக்கூடியது. பயங்கரவாதத்தை நாங்கள் பொறுத்து கொள்ள மாட்டோம். முற்றிலும் அகற்றப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும். ராமர் கோவில் கட்டுவது குறித்து கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதியை மீண்டும் அளிக்கிறோம். சுமூகமான முறையில் ராமர் கோவில் கட்டுவதற்கான அனைத்து வழிகளையும் ஆராய்வோம்.
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கியுள்ளோம். 60 வயது நிரம்பிய சிறு குறு விவசாயிகளுக்கு பென்சன் வழங்குவோம். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் வருமானத்தை இரு மடங்காக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.


வறுமை அகற்றம்


பின்னர் நிதி அமைச்சர் ஜெட்லி பேசுகையில், வலிமையான தேசிய கொள்கையுடனும், மக்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வரலாற்றில், நடுத்தர மக்களை ஒருங்கிணைத்ததுடன், ஏழை மக்களை விரைந்து வறுமையில் இருந்து அகற்றியுள்ளோம். இவ்வாறு அவுர் பேசினார்.பெருமை உயர்வு


வெளியுறவு அமைச்சர் சுஷ்மா பேசுகையில், மற்றவர்களைப் போல் நாங்கள் வெற்று கோஷங்களுடன் வரவில்லை. நாங்கள் உறுதியுடன் வந்துள்ளோம். இதனை நாங்கள் நிறைவேற்றுவோம். பிரதமர் மோடி தலைமையில், உலகளவில் இந்தியாவின் பெருமை முன்னர் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement
வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sams - Palakkad,இந்தியா
09-ஏப்-201914:01:58 IST Report Abuse
sams meum MODI Meum modi Vaam modi
Rate this:
Share this comment
Cancel
sams - Palakkad,இந்தியா
09-ஏப்-201913:56:01 IST Report Abuse
sams Dei maapla innoru kidnya pudungha bjp varuthu
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-ஏப்-201909:54:58 IST Report Abuse
D.Ambujavalli 2020 இல் வல்லரசாகி விடும் என்று கூறியதை ‘47 க்கு இழுத்தாச்சு இவர் அடுத்த முறை வந்தால் இதையே 2080 க்கு தள்ளிக்கொண்டு போய்விடுவார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X