பா.ஜ., தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்

Updated : ஏப் 08, 2019 | Added : ஏப் 08, 2019 | கருத்துகள் (156)
Share
Advertisement

புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்கான பா.ஜ., தேர்தல் அறிக்கை இன்று (ஏப்.,08) வெளியிடப்பட்டது. டில்லியில் பா.ஜ., தலைமையகத்தில் நடந்த விழாவில் "சங்கல்ப் பத்ரா" என பெயரிடப்பட்ட தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர்.latest tamil news

தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்கள் :* இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் 2022 ம் ஆண்டிற்குள் பா.ஜ., அளித்துள்ள 75 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

* பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வகையில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்.

* 2030 க்குள் உலகில் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகும்.


latest tamil news
* மகாத்மா காந்தி கண்ட கிராமத்தை நனவாக்க அனைவருக்கும் வீடு, குடிநீர், டிஜிட்டல் இணைப்பு, சாலை வசதி, தூய்மை இந்தியா உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வரப்படும்.

* 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு பென்சன் வழங்கப்படும்.

* அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6000 வருமானம் கிடைக்க செய்யப்படும்.

* சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தி விரைவில் ராமர் கோயில் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* 5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன்


latest tamil news
* ஜிஎஸ்டி நடைமுறைகள் எளிமையாக்கப்படும்.

* ராணுவம் போலீஸ் படைகள் நவீனமயமாக்கப்படும்.

* உள்கட்டமபை்பு துறையில் ரூ.100 லட்சம் கோடி

* நாடு முழுவதும் 75 மருத்துவ கல்லூரிகள்

* முத்தலாக் தடை சட்டம் மற்றும் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்படும்

* மத நம்பிக்கைகளை பாதுகாக்க அரசியல் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

* 2022க்குள் தேசிய நெடுஞ்சாலைகள் இரு மடங்காக்கப்படும்

* நதிகள் இணைப்பிற்கு தனி ஆணையம் உருவாக்கப்படும்


latest tamil news
* எல்லையோர பகுதிகள் வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்புக்கு தரம் உயர்த்தப்படும்

* வடகிழக்கு மாநிலங்களில் சட்ட விரோத ஊடுருவலை தடுக்க நடவடிக்கை

* அனைவருக்கும் வீடு, கழிப்பறை, வங்கிக்கணக்கு கிடைக்க நடவடிக்கை

* பெண்கள் நலன், முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்

* பார்லிமென்ட், சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்

* காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டம் ரத்து செய்யப்படும்

* 2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடுகள் கட்டித்தரப்படும்.

Advertisement
வாசகர் கருத்து (156)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
11-ஏப்-201906:20:42 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி பாரத வரலாற்றிலேயே தேர்தல் அறிக்கையை உண்மையாக நடைமுறைப்படுத்தும் ஒரே கட்சி மோதியின் பா ஜ க மட்டுமே.
Rate this:
Cancel
09-ஏப்-201921:00:26 IST Report Abuse
Boopathi Subramanian இதை எல்லாம் செய்தால் மோடி இந்தியாவின் நிரந்தர பிரதமர் ஆவார்
Rate this:
Cancel
Sivanesan Munuswamy - chennai,இந்தியா
09-ஏப்-201910:24:55 IST Report Abuse
Sivanesan Munuswamy அருமையான தேர்தல் அறிக்கை. மக்களை ஏமாற்றாமல் எதை செய்ய முடியுமோ அதை சொல்லி இருக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X