அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதிக்கு வீட்டு சிறை; விசாரணை நடத்துவோம்;இ.பி.எஸ்.,

Updated : ஏப் 08, 2019 | Added : ஏப் 08, 2019 | கருத்துகள் (133)
Share
Advertisement

நீலகிரி : அரசியல் ஆதாயத்திற்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்காமல் வீட்டுச் சிறையில் வைத்தவர் ஸ்டாலின் என தமிழக முதல்வர் பழனிசாமி பேசி உள்ளார்.



latest tamil news



நீலகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி இன்று (ஏப்.,08) பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தான் அரசியலில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக திமுக தலைவர் கருணாநிதியை 2 ஆண்டுகள் வீட்டு சிறையில் வைத்திருந்தார் ஸ்டாலின். அவருக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்திருந்தால் நன்றாக பேசி இருப்பார் என அவர்களின் கட்சியினரே கூறுகிறார்கள். கருணாநிதிக்கு ஏற்பட்ட நிலை குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தும் என்றார்.


latest tamil news



தொடர்ந்து பேசிய அவர், கொடநாடு விவகாரத்தில் ஸ்டாலின் பொய் பேசுகிறார். கொடநாடு விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. நீலகிரி தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் ஆ.ராசா எதுவும் செய்யவில்லை. நீலகிரி மாவட்டத்தை முன்னிலைப்படுத்த பல திட்டங்களை வகுத்தவர் ஜெயலலிதா என்றார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என ஸ்டாலின் கூறி வரும் நிலையில், கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் பழனிசாமி கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (133)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
13-ஏப்-201920:01:13 IST Report Abuse
meenakshisundaram 'அப்படிப்போடு அருவாளை'-ஸ்டாலின் கொஞ்சம் மௌனம் காப்பார். ஆனா ஒன்னு சாதி பாட்சா வை பார்த்தவருக்கு இது என்ன பெரிசா?
Rate this:
Cancel
oce - tokyo,ஜப்பான்
13-ஏப்-201910:36:20 IST Report Abuse
oce உடான்ஸ் இல்லை ஓய். அது தான் வடிகட்டிய உண்மை.
Rate this:
Cancel
Vijay - Bangalore,இந்தியா
09-ஏப்-201912:13:07 IST Report Abuse
Vijay தமிழகத்துக்காக, தமிழக மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைத்த எங்கள் சூரியன் எங்கே, இலங்கை தமிழருக்களுக்காக உண்ணா விரதம் இருந்த எங்கள் முத்தமிழ் அறிஞருக்கு நடந்த கொடுமை என்ன? அவர் பேசமுடியாதபடி தொண்டையில் ஓட்டை போட்டது யாரு.. தமிழக மக்கள் நீதி கிடைக்கும் வரை போராடுவோம் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X