பா.ஜ., கூட்டணிக்கு 263 தொகுதிகள் கிடைக்கும்: சி.என்.என்.நியூஸ்18 கணிப்பு

Updated : ஏப் 08, 2019 | Added : ஏப் 08, 2019 | கருத்துகள் (101)
Share
Advertisement

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணி 263 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னிலை பெறும் என சி.என்.என்.நியூஸ்18 கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.latest tamil newsலோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பா.ஜ.,வும், ஆட்சியை பிடிக்க காங்.,கும் முட்டி மோதுவதால், தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது. கட்சி தலைவர்கள் நாடு முழுவதும் அனல் பரப்பும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சி.என்.என்., நியூஸ் 18 நடத்திய கருத்துக்கணிப்பில், தனிப்பெரும் கட்சியாக பா.ஜ., உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில், பா.ஜ., கூட்டணிக்கு 263 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த தேர்தலைவிட 76 தொகுதிகள் குறைவு. காங்., கூட்டணிக்கு 139 இடங்களும், மற்ற கட்சிகள் 141 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை விட காங்., 56 தொகுகளிலும், மற்ற கட்சிகள் 20 தொகுதிகளிலும் அதிக வெற்றிகள் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news
தெற்கில் காங்., முன்னிலை:


தென் இந்தியாவை பொறுத்தவரை, மொத்தமுள்ள 129 தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி 28, காங்., கூட்டணி 49 மற்றும் பிற கட்சிகள் 52 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் திமுக:


* தமிழகத்தில், திமுக கூட்டணிக்கு 21, அதிமுக கூட்டணிக்கு 12 மற்றும் அமமுக., கட்சிக்கு 6 தொகுதிகள் கிடைக்கும்.


latest tamil news
ஆந்திராவில் மாநில கட்சிகள்:


* ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்., 19, தெலுங்கு தேசம் கட்சி 6 இடங்களில் வெற்றி பெறும் என்றும், பா.ஜ., மற்றும் காங்., கட்சிக்கு எங்கும் வெற்றி கிடைக்காது.

* கர்நாடகாவில் பா.ஜ., கூட்டணிக்கு 16, காங்., கூட்டணிக்கு 12 இடங்கள் கிடைக்கும்.

* தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ்., 15, காங்.,1 மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சி 1 இடத்திலும் வெற்றி பெறும்.

* கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி 15 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பா.ஜ.,வுக்கு எந்த தொகுதியும் கிடைக்காது.
இதுபோல் டிராங்கா டிவி நடத்திய கருத்துக்ணிப்பில் ; பா.ஜ.,கூட்டணி 222 முதல் 232 தொகுதிகளை பிடிக்கும் என்றும், காங்., கூட்டணி 115 முதல் 135 தொகுதிகளை பிடிக்கும் என்றும், மற்றவை 135 முதல் 155 தொகுதிகளை பிடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MIRROR - Thamizhagam,இந்தியா
09-ஏப்-201921:58:43 IST Report Abuse
MIRROR என்னாது 263 ஆ. இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்ல. ஓட்டு போட வெளிநாட்டுல இருந்து கப்பலில் வருகிறார்களோ?
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
09-ஏப்-201914:19:44 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை பரவயில்லை எப்ப இருந்தே பிஜேபி ஆளுங்க மனச தேத்திக்கிறாங்க.
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
09-ஏப்-201914:51:27 IST Report Abuse
Chowkidar NandaIndiaஇங்கே எழுதியிருக்கற கருத்துக்களை படிச்சா பிறகுமா இப்படி சொல்லுறீங்க. சரி விடுங்க, நமக்கு தான் மீசையில மண் ஒட்டலையில்ல. அப்பறம் என்ன?...
Rate this:
Cancel
Sudhagar Ramaiah - Tiruvannmalai,இந்தியா
09-ஏப்-201913:52:35 IST Report Abuse
Sudhagar Ramaiah வந்தே மாதரம் காங்கிரஸ் எனும் கரையான்புற்றிலிருந்து இந்தியா விடுதலையை நோக்கி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X