அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொரப்பாடி, அண்ணாகிராமம் பகுதியில் பா.ம.க., வேட்பாளர் தீவிர ஓட்டு சேகரிப்பு

Added : ஏப் 09, 2019
Advertisement

பண்ருட்டி:பண்ருட்டி தொகுதியில் தொரப்பாடி பேரூர், அண்ணாகிராமம் ஒன்றிய பகுதியில் பா.ம.க., வேட்பாளர் கோவிந்தசாமி ஆதரவாக அமைச்சர் சம்பத், தீவிர ஓட்டு சேகரிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டார். கடலுார் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் கோவிந்தசாமி மாம்பழம் சின்னத்தில் ஓட்டு கேட்டு, பண்ருட்டி தொகுதி தொரப்பாடி பேரூராட்சி, அண்ணா கிராமம் ஒன்றிய பகுதியில் அங்குசெட்டிப்பாளையம், கோட்லாம்பாக்கம், மந்திப்பாளையம், பண்டரக்கோட்டை, அவியனுார், ஒறையூர், காவனுார், எனதிரிமங்கலம், திருத்துறையூர், அக்கடவல்லி உள்ளிட்ட பகுதியில் நேற்று தீவிரமாக ஓட்டு சேகரித்தார்.நிகழ்ச்சிக்கு தொரப்பாடி பேரூராட்சி நகர செயலாளர் கனகராஜ் வரவேற்றார்.அமைச்சர் சம்பத் தலைமை தாங்கினார்.
இதில் சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, பா.ம.க., மாநில துணை செயலாளர் தாமரைக்கண்ணன், வைத்தியலிங்கம், மாவட்ட செயலர் ஆறுமுகம், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கந்தன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார். தொரப்பாடி பா.ம.க.,நகர செயலர் ஐயனார், பா.ஜ., நகர தலைவர் ராமலிங்கம், தே.மு.தி.க., நகர செயலர் முருகன், முன்னாள் கவுன்சிலர்கள் வனராஜ், மரகதம், சதாசிவம், சரஸ்வதி, முன்னாள் நகர செயலர் பிரபு, அவைதலைவர் சுந்தரம், கூட்டுறவு சங்க தலைவர் முருகன், வழக்கறிஞர் ஆனந்தன், நகர துணை செயலர் சவுந்தர்ராஜன்,பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட பிரதிநிதிகள் கலைகுமரன்,ரங்கப்பன், வார்டு செயலாளர்கள் வெங்கடேசன், சரவணன், ஐயப்பன், சதாசிவம், வேல்முருகன், முருகையன், ஆறுமுகம், தினகர் சாம்சன், இளைஞர் பாசறை சிவா,பிரபு, கரன் கிருஷ்ணன்,சுரேஷ்,மணிகண்டன், ஐயனார், மாவட்ட மாணவரணி ரமேஷ்குமார், விவசாய பிரிவு ரவி, நாராயணமூர்த்தி, தொழிற்சங்கம் மோகன், முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன், வாணியம்பாளையம் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X