அரசியல் செய்தி

தமிழ்நாடு

தில்லை காளியை வணங்கி பிரசாரம்

Added : ஏப் 09, 2019
Advertisement
 தில்லை காளியை வணங்கி  பிரசாரம்

சிதம்பரம்:சிதம்பரத்தில் தில்லை காளியை வணங்கி, அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக, நகர பகுதிகளில் பிரசாரத்தை, பாண்டியன் எம்.எல்.ஏ., துவக்கினார்.சிதம்பரம், லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரசேகருக்கு, கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் தலைமையில் , எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் ஓட்டு சேகரித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று சிதம்பரம் நகர பகுதிகளில் பிரசாரம் துவங்கியது. தில்லை காளியம்மன் கோவிலில் பூஜை செய்து, பாண்டியன் எம்.எல்.ஏ., பிரசாரத்தை துவக்கி வைத்தார். சிதம்பரம் அ.தி.மு.க., நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில் 1, 2, 3, 4 ஆகிய வார்டுகளில் நேற்று வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யப்பட்டது.
அ.தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், முன்னாள் எம்.பி., இளங்கோவன், தலைமைக்கழக பேச்சாளர் தில்லை கோபி, த.மா.கா., மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் தில்லை மக்கீன், சம்பத்குமார், ராதா, வைத்தி மற்றும் பா.ஜ., நகர நிர்வாகி கனகசபை, தே.மு.தி.க., விஜயகுமார், கணேசன் மற்றும் பா.ம.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X