அரசியல் செய்தி

தமிழ்நாடு

விரைவில் பிரசாரத்திற்கு வந்து பேசுவேன்: வாய்திறந்தார் விஜயகாந்த்

Updated : ஏப் 09, 2019 | Added : ஏப் 09, 2019 | கருத்துகள் (37)
Share
Advertisement
சென்னை,:''பிரதமர் மோடி நல்லவர்; அவர் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவர்கள் அறிவுரைப்படி, பிரசாரத்திற்கு செல்லாமல், தனது விருகம்பாக்கம் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். விஜயகாந்திற்கு பேச்சு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தேர்தல் பிரசாரம்
விரைவில் பிரசாரத்திற்கு வந்து பேசுவேன்: வாய்திறந்தார் விஜயகாந்த்

சென்னை,:''பிரதமர் மோடி நல்லவர்; அவர் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவர்கள் அறிவுரைப்படி, பிரசாரத்திற்கு செல்லாமல், தனது விருகம்பாக்கம் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். விஜயகாந்திற்கு பேச்சு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளதாக விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் கூறி வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில், கட்சி 'டிவி'க்கு நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் நேற்று அளித்த மினி பேட்டி: நான் நன்றாக இருக்கிறேன். உடல்நிலை நன்றாக இருக்கிறது.கூடிய விரைவில் பிரசாரத்திற்கு வருவேன். அங்கே வந்து பேசுவேன். மருத்துவர்கள் அறிவுரைப்படிதான் பிரசாரத்திற்கு வர முடியும். அ.தி.மு.க., கூட்டணி தான் ஜெயிக்கும். தி.மு.க., கூட்டணி தோற்கும். ஏனென்றால், தி.மு.க., தில்லுமுல்லு கட்சி. இது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கும் போர். தர்மம்தான் ஜெயிக்கும். மோடி நல்லவர். மீண்டும் அவர் ஆட்சிக்கு வரவேண்டும். அதற்கு, தே.மு.தி.க.,வினர் உழைக்கவேண்டும்.நாம் 40 தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். நீண்ட நாட்களுக்கு பிறகு, விஜயகாந்த் பேசி இருப்பதைக் கண்டு, தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஏப்-201921:15:54 IST Report Abuse
ஆப்பு நீங்க வந்து கை அசைச்சாலே போறும். ஓட்டுக்களை அள்ளிடலாம். தமிழ் மக்கள் எப்பவும் மதிப்பு குடுப்பார்கள்.
Rate this:
Sanakkiyan - Erode,இந்தியா
09-ஏப்-201923:38:40 IST Report Abuse
Sanakkiyanஎத ... ???...
Rate this:
Cancel
Sanakkiyan - Erode,இந்தியா
09-ஏப்-201920:01:37 IST Report Abuse
Sanakkiyan பாவம் நல்ல மனுஷன்..வீட்டுடுங்கடா...எவ்வளவோ சம்பாரிச்சாரு...கடைசி காலத்துல நிம்மதியா கழிக்கட்டும்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
09-ஏப்-201917:37:17 IST Report Abuse
Endrum Indian ஏப்ரல் 18 அதிகாலை வந்து பேசுவேன் என்பது போல இருக்கின்றது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X