காசை எடுத்து நீட்டு... கழுத பாடும் பாட்டு! ஆளுங்கட்சி ரூ.500; எதிர்க்கட்சி ரூ.300| Dinamalar

'காசை எடுத்து நீட்டு... கழுத பாடும் பாட்டு! ஆளுங்கட்சி ரூ.500; எதிர்க்கட்சி ரூ.300

Updated : ஏப் 09, 2019 | Added : ஏப் 09, 2019
 'காசை எடுத்து நீட்டு... கழுத பாடும் பாட்டு!  ஆளுங்கட்சி ரூ.500; எதிர்க்கட்சி ரூ.300

'ஷாப்பிங்' சென்றிருந்த சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் வீடு திரும்பினர். வெயில் மண்டையை பிளந்ததால், பேக்கரி ஒன்றில் வண்டியை நிறுத்தி, லெமன் ஜூஸ் ஆர்டர் கொடுத்தனர்.அப்போதும், தெருத்தெருவாக தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த கட்சியினரை பார்த்து, ''என்னக்கா, தேர்தல் களம் படுசூடாகியிருச்சு போலிருக்கே...'' என, பேச்சை ஆரம்பித்தாள் மித்ரா.''பார்லிமென்ட் தேர்தல் மட்டுமல்ல; இடைத்தேர்தலும் நடக்குறதுனால, ஆட்சிக்கு சிக்கல்னு பேச்சு ஓடிட்டு இருக்கு. அதனால, தேர்தல் ஜூரம் அதிகமா இருக்கு. நம்மூருக்கு ஸ்டாலின் வந்துட்டு போயிருக்காரு.

கம்யூ., தரப்புல பிருந்தா காரத், சுதாகர் ரெட்டி வந்தாங்க. பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட, ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., பிரசாரம் செஞ்சாங்க. இன்னைக்கு பிரதமர் மோடி வர்றாரு. வாசன் வரப்போறதாவும் பேசிக்கிறாங்க. அதனால, கட்சிக்காரங்க தெனமும் பரபரப்பாவே இருக்காங்க...'' என்றாள் சித்ரா.மித்ரா ஜூஸ் பருகியபடி, ''ஸ்டாலின் மேல ஏகப்பட்ட கேஸ் போடுறாங்களாமே...'' என்று கேட்டாள்.அதற்கு சித்ரா, ''அதுவா, கொடிசியா மைதானத்துல நடந்த கூட்டத்துல, ஸ்டாலின் பேசும்போது, 'திராணி இருந்தா, என் மீது வழக்கு போடுங்க'ன்னு, சவால் விட்டாரு. கடுப்பான ஆளுங்கட்சி தரப்பு, ஒவ்வொரு ஊர்லயும், ஆதாரமில்லாம பேசுனதை குறிப்பெடுத்து, வழக்கு போட்டுக்கிட்டு இருக்கு. இனியும் அவதுாறா பேசுனா, நாங்களும் பேச ஆரம்பிப்போம்; காது ஜவ்வு கிழிஞ்சிரும்னு இ.பி.எஸ்., பதிலடி கொடுத்ததால, தி.மு.க., தரப்பு யோசிக்க துவங்கியிருக்கு...'' என்றாள்.'

'பிரசாரத்துக்கு முக்கிய நிர்வாகிகள் மட்டுமே வர்றாங்களாம்; தொண்டர்களை காணலையாமே...''''ஆமா, மா.கம்யூ., மாநில நிர்வாகி ராமகிருஷ்ணன் இங்கேயே முகாமிட்டு, தேர்தல் பணிகளை துரிதப்படுத்திக்கிட்டு இருக்காரு. தி.மு.க., தரப்புல, பொங்கலுார் பழனிசாமி, எம்.எம்.ஏ., கார்த்திக் மட்டும் வர்றாங்க. பெருந்திரளா தொண்டர்கள் வர்றதில்லை. கூட்டணிக்கு தலைமை வகிக்கிற கட்சிக்காரங்களே, 'சப்போர்ட்' பண்ணாம இருக்கறதுனால, 'காம்ரேடுகள்' வருத்தத்துல இருக்காங்க...''''இருந்தாலும், தேர்தல் அறிக்கை வெளியிட்டு அசத்துனாங்களாமே...''''பா.ஜ., தேசிய செயலர் அமித்ஷா, கோயமுத்துாருக்கு வந்தப்ப, கோவை தொகுதிக்குன்னு பிரத்யேகமா தேர்தல் அறிக்கை வெளியிட்டாரு. அதே மாதிரி, மா.கம்யூ., தரப்பிலும் தனியா அச்சிட்டிருக்காங்க. இ.கம்யூ., நடத்துன

பொதுக்கூட்டத்துல, தேசிய செயலர் சுதாகர் ரெட்டி முன்னிலையில் வெளியிடுறதுக்கு திட்டமிட்டு இருந்தாங்க. தெரு பிரசாரத்துல இருந்ததால, வேட்பாளரும் வரலை; அறிக்கையும் வெளியிடலை''''அப்புறம்...''''நேத்து காலைல, வேன் பிரசாரத்துக்கு இடைப்பட்ட நேரத்துல, தேர்தல் அறிக்கையை வெளியிட்டாங்க. வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்காங்க...''''ஆனாலும், போட்டி கடுமையா இருக்கும்னு பேசிக்கிறாங்களே...''''அ.தி.மு.க., ஓட்டு வங்கியில், அ.ம.மு.க., ஓட்டு தனியா பிரியுது. நடுநிலையாளர்கள் ஓட்டுகளை, கமல் கட்சி பிரிச்சிடும். புதுசா, இரண்டு லட்சம் ஓட்டு சேர்ந்திருக்கு. அந்த ஓட்டு யாருக்கு போகும்னு தெரியலை. பா. ஜ.,வுல இருக்கற கோஷ்டி பிரச்னையால, உள்குத்து வேலை நெறைய்யா நடக்குது.

இதனால, களம் கடுமையா இருக்குன்னு சொல்றாங்க. இந்த கட்சியிலும், மாநில செயலாளர் வானதி முகாமிட்டு, தேர்தல் பணிகளை கவனிச்சிட்டு இருக்காங்க''''அதெல்லாம் சரி... பி.ஜே.பி.,யில, இன்னும் பூத் கமிட்டியே அமைக்கலையாமே...''''அதுவா, நாங்களே பார்த்துக்கிறோம்னு, அ.தி.மு.க.,காரங்க சொல்லிட்டாங்களாம். சொந்தக்கட்சி வேட்பாளர் போட்டியிடுற மாதிரி, ரத்தத்தின் ரத்தங்கள் இறங்கி வேலை செய்றாங்களாம். எந்த விதத்திலும், தொகுதி கைவிட்டு போயிடக்கூடாதுங்கிறதுல, கவனமா இருக்காங்களாம்...''''சுந்தராபுரத்துல நடந்த பிரசாரத்துக்கும், ஏகப்பட்ட கூட்டத்தை திரட்டுனாங்களாமே'' என, கொக்கி போட்டாள் மித்ரா.''ஆமா... கூட்டம் இருந்துச்சு; இப்ப, பிரசார கூட்டமா இருந்தாலும், கரன்சி இல்லாம தலைகள திரட்ட முடியலையாம். ஆளுங்கட்சி கூட்டத்துக்கு வந்தவங்களுக்கு தலைக்கு, ரூ.500ன்னு பேசிக்கிட்டாங்க. ஏரியாவுக்கு அஞ்சு வேன் அனுப்பியிருந்தாங்களாம். அந்தந்த பகுதி கிளை நிர்வாகிகள், கூட்டத்தை திரட்டிட்டு வந்தாங்க; ஆனா, குனியமுத்துார்ல கூட்டம் குறைவுதான். தி.மு.க., நடத்துன கூட்டத்துக்கு, தலைக்கு, ரூ.300 கொடுத்தாங்களாம்'' என, சித்ரா பதிலளித்துக்கொண்டிருக்கும்போதே, சுயேட்சை வேட்பாளரின் பிரசார வாகனத்திலிருந்த ஒலிபெருக்கியில்..

.'சிரிப்பு வருது சிரிப்பு வருதுசிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருதுசின்ன மனுஷன் பெரிய மனுஷன்செயலை பார்க்க சிரிப்பு வருதுமேடையேறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சுகிழே இறங்கிப் போகும்போது சொன்னதெல்லாம் போச்சுகாசை எடுத்து நீட்டு கழுத பாடும் பாட்டுஆசை வார்த்த காட்டு உனக்குங்கூட ஓட்டு ஹஹஹா!'- என்ற, சந்திரபாபுவின் பாடலுடன் கடந்து சென்றது.அதன்பின் தொடர்ந்த சித்ரா...''கார்ப்பரேஷன்ல என்ன நடக்குது; எதுவுமே சொல்லலையே...'' என்றாள்.'

'புதுசா வந்திருக்கிற கமிஷனர், இளம் வயசுக்காரர்; நல்லா 'ஒர்க்' பண்ணுவாருன்னு நெனைச்சாங்க. ஆனா, நேர்மாறா இருக்காரு. பொதுமக்கள் சந்திக்கவே முடியறதில்லை; மணிக்கணக்குல காக்க வைக்கிறாரு. மதிய நேரமாயிட்டா, எவ்ளோ பேரு காத்திருந்தாலும் கண்டுக்கறதில்ல. மதிய உணவுக்கு கெளம்பிடுறாரு. இவருக்காக, பிரபலமான ஓட்டல்ல இருந்து, தெனமும் பிரியாணி வருது'' என்றாள் மித்ரா.''அதிகாரிகளுமே புலம்பிக்கிட்டு இருக்காங்களாமே...''''ஆமா... நானும் கேள்விப்பட்டேன். 'பைலில்' கையெழுத்து வாங்கப் போனா, அவுங்களும் மணிக்கணக்குல காத்திருக்க வேண்டியிருக்காம்; ஊழியர்கள் ரொம்பவே 'அப்செட்' ஆகிடுறாங்க...'' என, மித்ரா சொன்னபோது, அப்பகுதிக்கு, தேர்தல் பிரசாரத்துக்கு கமல் வந்திருந்தார். அவரது பேச்சை கேட்க, இருவரும், ரோட்டோரம் ஒதுங்கி நின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X