அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வுக்கு எதிராக திருப்பூரில் எதிர்ப்பு

Added : ஏப் 09, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர் : சபரிமலை அய்யப்பன் கோவிலின் புனிதத்தை கெடுக்க முயற்சித்த, கம்யூ., கட்சி இடம் பெற்றுள்ள, தி.மு.க., கூட்டணிக்கு, திருப்பூரில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.'சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. கோர்ட் உத்தரவை செயல்படுத்த, கேரளாவை ஆளும், மார்க்சிஸ்ட் தலைமையிலான அரசு சிறப்பு கவனம்
 தி.மு.க.,வுக்கு எதிராக திருப்பூரில் எதிர்ப்பு

திருப்பூர் : சபரிமலை அய்யப்பன் கோவிலின் புனிதத்தை கெடுக்க முயற்சித்த, கம்யூ., கட்சி இடம் பெற்றுள்ள, தி.மு.க., கூட்டணிக்கு, திருப்பூரில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.'சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. கோர்ட் உத்தரவை செயல்படுத்த, கேரளாவை ஆளும், மார்க்சிஸ்ட் தலைமையிலான அரசு சிறப்பு கவனம் செலுத்தியது.ஹிந்து மதத்துக்கு சம்பந்தமே இல்லாத பெண்களை சபரிமலைக்கு அனுப்பி, போலீஸ் பாதுகாப்பும் அளித்தது.
தமிழகம் உட்பட பல மாநிலங்களில், இதற்கு, பக்தர்கள் மத்தியில், கடும் எதிர்ப்பு கிளம்பியது. லோக்சபா தேர்தல் பிரசாரம் துவங்கியதும், தமிழகத்தின் பல பகுதிகளிலும், அய்யப்ப பக்தர்கள், 'தி.முக., - கம்யூ., கட்சியினர், ஓட்டு கேட்க வரவேண்டாம்' என, போஸ்டர் அடித்து ஒட்டினர். அய்யப்பன் படத்துடன், 'அய்யப்பனை அவமதித்தவர்களுக்கு வாக்களிக்க மாட்டோம். தி.மு.க., கூட்டணி மற்றும் கம்யூ., கட்சியினர் யாரும், ஓட்டு கேட்டு வரவேண்டாம்' என, தங்கள் வீட்டு கதவு மற்றும் சுவர்களில் போஸ்டர் ஒட்டினர்.
இதனால், திருப்பூரில், இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயன், வீடு வீடாக சென்று, பிரசாரம் செய்வதை தவிர்த்து, வாகன பிரசார பயணமாக சென்று கொண்டு இருக்கிறார். வார்டுக்குள் கூட்டமாக வரும், கம்யூ., கட்சியினர், 'போஸ்டர்' ஒட்டிய வீடுகளுக்கு செல்ல முடியவில்லை. இது குறித்து, 56வது வார்டு அய்யப்ப சேவா சங்க நிர்வாகி, செந்தில்குமார் கூறியதாவது:ஹிந்து மதத்துக்கு எதிராக, கேரளாவில், கம்யூ., கட்சி செயல்பட்டதை, யாரும் மறக்க மாட்டோம். இந்த லோக்சபா தேர்தலில், அஹிம்சா முறையில், எதிர்ப்பை காட்டி வருகிறோம்.
எப்படியிருந்தாலும், ஹிந்துக்கள், கம்யூ., கட்சிக்கு ஓட்டுப் போட மாட்டார்கள்; எனவே, ஓட்டுக் கேட்டு வந்தால் வீண் பிரச்னை ஏற்படும் என்பதால், 'எங்கள் வீட்டு பக்கம் ஓட்டு கேட்டு வர வேண்டாம்' என, போஸ்டர் ஒட்டினோம்.இவ்வாறு அவர் கூறினார்.திருப்பூர் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், ஆனந்தன், தி.மு.க., கூட்டணியில், இந்திய கம்யூ., வேட்பாளர், சுப்பராயன் உட்பட, 12 பேர் போட்டியிடுகின்றனர்.கோவையிலும் எதிர்ப்புகோவை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, பல்லடம் சட்டசபை தொகுதியிலும், 'தி.மு.க., கம்யூ., கூட்டணி கட்சியினர், ஓட்டு கேட்டு வரவேண்டாம்' என, வீடுகளில், நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது.
தி.மு.க., - கம்யூ., கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்களால், கம்யூ., கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர். கோவை தொகுதியில், பா.ஜ., சார்பில் ராதாகிருஷ்ணன், மற்றும் மா.கம்யூ., சார்பில், நடராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathis_kk - Singapore,சிங்கப்பூர்
10-ஏப்-201908:37:25 IST Report Abuse
sathis_kk என்னதான் எண்ணெயை தடவி விழுந்து புரண்டாலும் ஒட்டுறதுதான் ஓட்டும்.... என்னதான் பில்டப் கொடுத்து தூக்கி விட்டாலும் அதிமுக பாஜக மண்ணை கவ்வுவது உறுதி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X