அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
திருமால் போற்றி வெளியிட்டவர் கருணாநிதி
ஸ்டாலின் ஒப்புதல்

திருநெல்வேலி: ''தி.மு.க., இந்து விரோத கட்சி அல்ல; விநாயகர் போற்றி, முருகன் போற்றி, திருமால் போற்றி, சிவன் போற்றி புத்தகங்களை வெளியிட்டவர் கருணாநிதி,'' என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

திருமால் போற்றி,கருணாநிதி,ஸ்டாலின்,ஒப்புதல்


திருநெல்வேலி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஞானதிரவியத்தை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: காங்., தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு பா.ஜ., பின்னுக்கு தள்ளப்பட்டுவருகிறது. ராகுல் பிரதமராக வருவார் என நாங்கள் அறிவித்ததால்

எங்கள் மீது பா.ஜ., வினர் ஆத்திரப்பட்டனர். எங்கள் மீது எந்த குற்றச்சாட்டையும் கூற முடியவில்லை. தி.மு.க,, இந்து விரோத கட்சி என கண்டுபிடித்து பிரசாரம் செய்கின்றனர். அப்படி என்றால் தி.மு.க., வில் இருப்பவர்கள் எல்லாம் யார்?

அறநிலையத்துறையில் பல பணிகளை மேற்கொண்டுள்ளோம். ஆலயங்களுக்கு சொந்தமான நிலங்களை அதிக அளவில் மீட்டுள்ளோம். இந்து மதத்திற்கு மட்டுமல்ல, எந்த மதத்திற்கும் தி.மு.க.,எதிரியல்ல. எந்த மதத்தையும் ஒதுக்கவில்லை. நிதிவசதியில்லாத கோயில்களுக்கு இலவச மின்சாரம், இலவச திருமண திட்டங்களை கொண்டு வந்தோம்.

கோயில்களுக்கு அதிக எண்ணிக்கையில் குடமுழுக்கு தி.மு.க. ஆட்சியில்தான் நடத்தப்பட்டுள்ளது. விநாயகர் போற்றி, முருகன் போற்றி,

Advertisement

திருமால் போற்றி, சிவன் போற்றி ஆகிய புத்தகங்களை வெளியிட்டவர் கருணாநிதி.

ஜெ., மரணத்தில் மர்மம் இருப்பதாக பன்னீர்செல்வம்தான் தெரிவித்தார். அவரை ஆஜராகும்படி ஆறுமுகச்சாமி விசாரணை கமிஷனில் இருந்து ஆறு முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் ஆஜராகவில்லை. இவை குறித்து தி.மு.க.,ஆட்சிக்கு வந்ததும் விசாரணை மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார். பின், அவர் சந்தையில் நடந்து சென்று வியாபாரிகளிடம் ஓட்டு கேட்டார்.


Advertisement

வாசகர் கருத்து (103)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராமதாசன் - chennai,இந்தியா
14-ஏப்-201906:22:31 IST Report Abuse

ராமதாசன் சும்மா அடிச்சு உடு ..கட்டு மரம் எப்போதும் அண்ணா சொன்னார், ஈவெரா சொன்னார் என்று இறந்து போனவர்கள் பெயர்களை கூறுவார் .. இப்போ அவர் பிள்ளை அவரை மாதிரியே கட்டு மரம் இது செய்தார் .. அது செய்தார் என்கிறார். கட்டு மரம் வந்தா சொல்ல போறார் இல்லை என்று

Rate this:
karutthu - nainital,இந்தியா
12-ஏப்-201912:35:14 IST Report Abuse

karutthuதிருநெல்வேலி: ''தி.மு.க., இந்து விரோத கட்சி அல்ல விநாயகர் போற்றி, முருகன் போற்றி, திருமால் போற்றி, சிவன் போற்றி புத்தகங்களை வெளியிட்டவர் கருணாநிதி,'' என தி.மு.க., தலைவர் ஸ்டாலின்பேசினார். எங்களது கேள்வி என்னவென்றால் இவ்வளவு புத்தகங்களை வெளியிட்டது உங்களது தலைவர் என்று கூறும் நீங்கள் (ஸ்டாலின்) பிறகு ஏன் கீ வீரமணிக்கு இவ்வளவு வக்காலத்து வாங்குகிறீர்கள் ?வீரமணியுடன் எங்களுக்கு ஓட்டும் இல்லை உறவும் இல்லை என்று கூறினால் இந்துக்கள் ஒட்டு அனைத்தும் உங்களுக்கு தான்

Rate this:
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
11-ஏப்-201913:57:10 IST Report Abuse

Swaminathan Chandramouliஆமாம் சுடலை உண்மையை தான் சொல்லுகிறார். கட்டுமரம் தான் பெரிய புராணம் , கந்தர் சஷ்டி கவசம் முதலான போற்றி புராணங்களை இயற்றியவர்

Rate this:
மேலும் 100 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X