எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
யார்?
4 தொகுதி இடைத்தேர்தல்
தி.மு.க., வேட்பாளர்கள்...

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலுார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை, ஓரிரு நாளில், தி.மு.க., தலைமை அறிவிக்க உள்ளது.

D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்


திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலுார் ஆகிய, நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், அடுத்த மாதம், 19ம் தேதி நடக்கிறது. இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

திருப்பரங்குன்றம் தொகுதியில், ஏற்கனவே நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க., மருத்துவ அணியின், மாநில துணைத் தலைவர்,

டாக்டர் சரவணன், 70 ஆயிரம் ஓட்டுகள் பெற்றிருந்தார். மறைந்த, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., - ஏ.கே.போஸுக்கு, இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கோரும் படிவத்தில், ஜெயலலிதா கைரேகை சந்தேகத்துக்குரியது என, உயர் நீதிமன்றத்தில், டாக்டர் சரவணன் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், அவர் வெற்றி பெற்றுள்ளார். எனவே, அவருக்கு, மீண்டும் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம்.

அரவக்குறிச்சியில், தி.மு.க., வேட்பாளர், கே.சி.பழனிசாமியை எதிர்த்து, அ.தி.மு.க., வேட்பாளர், செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பின், தினகரனின் ஆதரவாளராக செயல்பட்டதால், அவரது, எம்.எல்.ஏ., பதவி பறிக்கப்பட்டது. அ.ம.மு.க., மாவட்ட செயலராக பணியாற்றிய, செந்தில் பாலாஜி, தற்போது, தி.மு.க.,வில் இணைந்து விட்டார். எனவே, அவர் மீண்டும் போட்டியிட, தி.மு.க., வாய்ப்பு வழங்கவுள்ளதாக, சமீபத்திய பிரசாரத்தில், கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

Advertisement

சூலுார் தொகுதியில், கடந்த பொதுத் தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் போட்டியிட்டது. காங்கிரஸ் வேட்பாளர், மனோகரன், மறைந்த, எம்.எல்.ஏ., கனகராஜிடம், 36 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். காங்கிரசின், 41 வேட்பாளர்களில், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர், மனோகரன். எனவே, இந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு, அத்தொகுதியை ஒதுக்க வாய்ப்பு இல்லை. தி.மு.க., பிரமுகர்கள், ராஜேந்திரன், மன்னவன், தளபதி முருகேசன் ஆகிய, மூவரில் ஒருவருக்கு, 'சீட்' கிடைக்க வாய்ப்புள்ளது.

அதேபோல, ஒட்டப்பிடாரம் தொகுதியில், கடந்த பொதுத் தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த, புதிய தமிழகம் கட்சி தலைவர், டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில், தென்காசி லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். எனவே, தி.மு.க., வேட்பாளராக, ஒட்டப்பிடாரம் ஒன்றிய, தி.மு.க., செயலர், சண்முகய்யாவை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
நான்கு தொகுதி வேட்பாளர்கள் தேர்வு குறித்து, தி.மு.க., தலைவர், ஸ்டாலின், நேற்று திருநெல்வேலியில், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்; ஓரிரு நாளில், வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
10-ஏப்-201912:35:41 IST Report Abuse

Natarajan Ramanathanஎப்படியும் ஹிந்து விரோத தீயமுகவுக்கு தோல்விதான். எனவே எவனை போட்டால் என்ன? எல்லாம் ஒன்றுதான்.

Rate this:
10-ஏப்-201912:11:33 IST Report Abuse

ஆப்புரஜினி லெவலுக்கு அமேசான், தாமிரபரணி இணைப்புதான் சரி. உலகத்தின் வறுமை ஒழியும்..வேலை வாய்ப்பு பெருகும். கூத்தாடிகள் வாக்கே வேதவாக்கு...தமிழகத்தில்.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10-ஏப்-201908:15:58 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்பிஜேபி க்கு கவலை இல்லை..

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X