புதுச்சேரி:மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் அனைத்து பொறியியல் துறை இணைந்து ஐ.இ.இ.இ. 'ஐ.சி.ஸ்கேன் 2019' சிஸ்டம்ஸ், கம்ப்யூடேஷன், ஆட்டோமேஷன் மற்றும் நெட்வொர்க்கிங் என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.
துவக்க விழாவிற்கு கல்வி குழுமத் தலைவர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலர் நாராயணசாமி தலைமை தாங்கினர். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார். ஐ.இ.இ.இ., சென்னை பிரிவு தலைவர் மனோகரன், தென்கொரிய ஹன்னம் பல்கலைக் கழக கவுரவ பேராசிரியராக பணிபுரிந்த க்யுங் டே கிம், ஐ.இ.இ.இ., சென்னை பிரிவு நிர்வாக குழு உறுப்பினர் குமரப்பன் சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியில், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் உள்ள வேறுபாடு குறித்தும், எதிர்கால தொலைத் தொடர்பு தொழில்நுட்பமான 5ஜி மற்றும் ஐ.இ.இ.இ., தகவல் தொகுப்பேட்டில் உள்ள கல்விசார் ஆராய்ச்சியில் பல்வேறு உதவி, ஊக்கத்தொகை திட்டங்கள் மற்றும் கல்வி ஆராய்ச்சி நிதி திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. கருத்தரங்கின் செயல்பாடுகள் குறித்து, கல்லுாரி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறை தலைவர் வள்ளி எடுத்துரைத்தார்.கருத்தரங்கில் சர்வதேச அளவில் அமெரிக்கா, சீனா, தாய்லாந்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் மற்றும் இந்தியாவிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 590 ஆய்வுக் கட்டுரைகளில், 250 நிபுணர்களின் இரட்டை தரமதிப்பாய்வு மூலம் 200 ஆய்வு கட்டுரைகள் விளக்கத்திற்கு எடுக்கப்பட்டது.நிகழ்ச்சியில், சர்வதேச அளவில் பல்வேறு கல்லுாரிகளில் இருந்து வந்த ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மின்னணு மற்றும் தகவல்தொடர்பு துறை தலைவர் அருண்மொழி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE