பொது செய்தி

இந்தியா

எதிரியின் பலம் அறிந்து செயல்பட வேண்டும்

Added : ஏப் 10, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 எதிரியின் பலம் அறிந்து செயல்பட வேண்டும்

சுவாமி தத்வபோதாநந்த சரஸ்வதி சொற்பொழிவு
புதுச்சேரி:புதுச்சேரி ஆர்ஷ வித்யா பவன் சார்பில் நடந்து வரும் ராம நவமி விழாவின், ஐந்தாம் நாளான நேற்று ' சகோதரர்களின் மனோபாங்கு' என்ற தலைப்பில் சுவாமி தத்வபோதாநந்த சரஸ்வதி சொற்பொழிவாற்றினார்.
புதுச்சேரி ஆர்ஷ வித்யா பவன், விஸ்வ இந்து பரிஷத், தர்ம ரக் ஷண சமிதி சார்பில், புதுச்சேரி அண்ணா நகர் எட்டாவது குறுக்குத் தெருவில் உள்ள, சர்வ சித்தி வலம்புரி விநாயகர் கோவிலில், நடைபெற்று வரும் ராமநவமி விழாவில் ஐந்தாம் நாளான நேற்று ' சகோதரர்களின் மனோபாங்கு' என்ற தலைப்பில் சுவாமி தத்வபோதாநந்த சரஸ்வதி பேசியதாவது:ராமாயணத்தில் நான்கு வகையான சகோதரர்களை வால்மீகி பதிவிடுகிறார். ராமருடன் பிறந்த நால்வர், ராவணணுடன் பிறந்த மூவர், வாலியுடன் பிறந்த சுக்ரீவன், மாயாவியுடன் பிறந்த துந்துபி. ஒவ்வொரு சகோதரர்களும், தங்களின் குணங்களுக்கு ஏற்ப இரக்க குணம், சகோதர பாசம், கடும் சொல் கூறுதல், சினந்து கொள்ளுதல் ஆகிய அனைத்து பண்புகளையும் வால்மீகி பதிவிடுகிறார்.மயன் என்கிற தேவதச்சனின் மைந்தர்கள் மாயாவி, துந்துபி. இவர்களில் இளையவன் துந்துபி கொடூரமான செயல்களை புரிபவனாகவும், போர் குணம் கொண்டவனாகவும் இருந்தான். துந்துபி தவம் புரிந்து, பிரம்மாவிடம் ஆயிரம் யானைகளின் பலத்தை வரமாக பெற்றான். இதனால், துந்துபி தனக்கு இணை யாரும் இல்லை என்கிற கர்வத்தை கொண்டிருந்தான்.ஒரு சமயம் சமுத்திரராஜனிடம் சண்டைக்கு சென்றான் துந்துபி. அப்போது, சமுத்திரராஜன் அறிவுரையின் படி, பருவதங்களுக்கு அரசனான ஹீமவானிடம், துந்துபி சண்டைக்கு சென்றான். துந்துபி,ஏளனமாக பேசியதால், ஹீமவான் சண்டையிட மறுத்து, பம்பை ஆற்றின் கரையில் கிஷ்கிந்தை அரசன் வாலி தான் உனக்கு சமமானவன் அங்கு சென்று, அவரிடம் போர் புரிவாய் என்று கூறினார்.துந்துபி போர் குணத்துடன் கிஷ்கிந்தைக்கு இரவில் சென்று, வாலிக்கு அறைகூவல் விடுத்தான். ஓய்வு எடுத்து கொண்டிருந்த வாலி, துந்துபியின் அட்டகாசத்தை தாங்க முடியாமல் போருக்கு புறப்பட்டான். இந்த போரில், வாலி, துந்துபியை அடித்து உதைத்து அவனது உடலை தட்டாமாலையை சுழற்றுவது போல் சுழற்றி ரிஷிமுக பருவதத்தின் மீது வீசி எறிந்தான். ரிஷமுக பருவத மலையில் தவ வாழ்க்கை மேற்கொண்டிருந்த ரிஷி முனிவர்கள், ரத்தமும், சதையுமாக கிடந்த துந்துபியின் உடலை பார்த்து, இம்மலையின் மீது இந்த உடலை துாக்கி எரிந்தவன், இம்மலையின் பக்கம் வந்தால், தலை வெடித்து இறந்து போவான் என சாபமிட்டனர்.துந்துபியின் மரணம், வலியோரிடம் தவறாக நடக்க கூடாது, எப்போதும் போர் குணம் கொண்டிருக்க கூடாது, எதிரியின் பலம் அறிந்து செயல்பட வேண்டும் என்ற படிப்பினையை நமக்கு கொடுத்துள்ளது.இவ்வாறு சுவாமி தத்வபோதாநந்த சரஸ்வதி சொற்பொழிவாற்றினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kudiyanathfans - ayodhya,இந்தியா
11-ஏப்-201919:10:19 IST Report Abuse
kudiyanathfans சாமி பெரிய தத்துவம் சொல்லியிருக்கு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X