அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., அறிக்கைக்கு ரஜினி ஆதரவு: அ.தி.மு.க., வரவேற்பு

Added : ஏப் 10, 2019 | கருத்துகள் (22)
Advertisement
 பா.ஜ., அறிக்கைக்கு ரஜினி ஆதரவு: அ.தி.மு.க., வரவேற்பு

சென்னை : ''நடிகர் ரஜினி, நல்ல விஷயத்திற்கு ஆதரவு தந்துள்ளார். அதை ஏற்று, தமிழக மக்கள், எங்கள் பக்கம் இருப்பர்,'' என, மீன் வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார். அவரது பேட்டி:சென்னை - சேலம் எட்டு வழி சாலை வழக்கில், தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்பு நகல் கிடைத்த பின், அரசு உரிய முடிவு எடுக்கும். விவசாயிகள் நலனை காக்கும் வகையில், அந்த முடிவு இருக்கும். தி.மு.க., தலைவர், ஸ்டாலின், ஒவ்வொரு மேடையிலும், தனிநபர் விமர்சனத்தை முன்வைக்கிறார்; அதற்கு பதிலடி கொடுக்க வேண்டியது கட்டாயமாகிறது.
தி.மு.க., பல்வேறு விஷ விதைகளை, தமிழகத்தில் துாவியுள்ளது; தற்போது, தனி நபர் விமர்சனம் என்ற, விஷ விதையை துாவி வருகிறது. தனி நபர் தாக்குதலில், எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆரோக்கியமான அரசியலில் தான், எங்களுக்கு நம்பிக்கை. ஸ்டாலினும், அவரை சார்ந்தவர்களும், நெருப்பில் கையை வைத்து, சுட்டுக் கொள்ள வேண்டாம்.
வேறு வழியில்லாவிட்டால், அதே பாணியில், பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும்.நதிகள் இணைப்பு என்பது, ஜெயலலிதாவின் கனவு. வாஜ்பாய் அரசுக்கு ஆதரவு அளித்தபோதே, இதை வலியுறுத்தினோம். இதை, பா.ஜ., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதை, நடிகர் ரஜினி வரவேற்றுள்ளார். தேச நலன் அடிப்படையில், அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்; நல்ல விஷயத்திற்கு ஆதரவு தருகிறார். அதை ஏற்று, தமிழக மக்கள், எங்கள் பக்கம் இருப்பர் என்ற, நம்பிக்கை உள்ளது.
காங்கிரஸ் அரசு, நதிகள் இணைப்பு திட்டத்தை கிடப்பில் போட்டது. 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த காங்கிரஸ், அந்த திட்டத்தை செயல்படுத்தி இருந்தால், இன்று பணிகள் முடிந்திருக்கும். தமிழக சட்டசபை இடைத்தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அ.தி.மு.க., ஆட்சி, 2021 வரை தொடரும்.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kudiyanathfans - ayodhya,இந்தியா
11-ஏப்-201919:06:35 IST Report Abuse
kudiyanathfans
Rate this:
Share this comment
Cancel
kudiyanathfans - ayodhya,இந்தியா
11-ஏப்-201919:05:43 IST Report Abuse
kudiyanathfans பெரிய சீர்திருத்தி
Rate this:
Share this comment
Cancel
kudiyanathfans - ayodhya,இந்தியா
11-ஏப்-201919:05:23 IST Report Abuse
kudiyanathfans எந்த டைரக்டர் எழுதி கொடுத்துச்ச்சூ அப்படியே அழகா சொல்லுது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X