பதிவு செய்த நாள் :
அமேதியில் ராகுல் மனு தாக்கல்
குடும்பத்துடன் ஊர்வலம்

அமேதி: அமேதி லோக்சபா தொகுதியில் போட்டியிட, காங்., தலைவர் ராகுல், நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன், அவரது தாயும், காங்., மூத்த தலைவருமான சோனியா, சகோதரியும், கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா ஆகியோரும் உடனிருந்தனர்.

அமேதி,ராகுல்,மனு தாக்கல்,குடும்பத்துடன்,ஊர்வலம்


உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, அமேதி தொகுதியின்,

எம்.பி., யாக, 2004ம் ஆண்டில் இருந்து, காங்., தலைவர் ராகுல் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது நடக்கும் லோக்சபா தேர்தலில், உ.பி.,யின் அமேதியில் ராகுல், மீண்டும் போட்டியிடுகிறார். அவரது தாய் சோனியா, ரேபரேலியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக, அமேதிக்கு, ராகுல் நேற்று வந்தார். அவருடன், சோனியா, பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வாத்ரா, பிரியங்காவின் இரண்டு குழந்தைகளும் வந்திருந்தனர்.
கவுரிகஞ்ச் பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்வதற்காக, 3 கி.மீ., துாரம், வேனில் ஊர்வலமாக, ராகுல் சென்றார். அவரது குடும்பத்தினரும், உடன் வந்தனர். பின், கலெக்டர் அலுவலகத்தில், ராகுல் மனு தாக்கல் செய்தார். அப்போது, சோனியா, பிரியங்கா, வாத்ரா ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement

மனு தாக்கல் செய்த பின், ராகுல் கூறியதாவது: ரபேல் விவகாரம், ஊழல், பண மதிப்பிழப்பு ஆகியவை குறித்து, என்னுடன் நேரடி விவாதம் நடத்த தயாரா என, பிரதமர் மோடிக்கு, மீண்டும் சவால் விடுகிறேன். 'ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடக்கவில்லை என, உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது' என, பிரதமர் உள்ளிட்ட, பா.ஜ., தலைவர்கள் பலரும் கூறினர்.
ஆனால், விசாரணை நடத்த, உச்ச நீதிமன்றம் இப்போது உத்தரவிட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதை உறுதி செய்து உள்ளது. ஊழல் நடக்கவில்லை என்றால், என்னுடன் விவாதம் நடத்த, பிரதமர் ஏன் தயங்க வேண்டும்? என் கண்களை பார்த்து பேச, மோடிக்கு தைரியம் கிடையாது. இவ்வாறு, ராகுல் கூறினார். ரேபரேலி தொகுதியில், சோனியா, இன்று மனு தாக்கல் செய்கிறார் என்பது, குறிப்பிடத்தக்கது.

எங்களின் புனித பூமி:

எங்கள் குடும்பத்தின் புனித பூமியாகவே, அமேதியை கருதுகிறோம். அமேதி தொகுதியுடன் எங்களுக்கு இதயப் பூர்வமான உறவு உள்ளது. ஏனெனில், இது, என் தந்தை, சித்தப்பா ஆகியோரும் வெற்றி பெற்ற தொகுதி.

-பிரியங்கா, பொதுச் செயலர், காங்கிரஸ்


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
11-ஏப்-201922:15:32 IST Report Abuse

adalarasanஇன்றைக்குத்தான் இந்த குடும்ப ஆட்சியிலிருந்து\ஆதிக்கடலிருந்து , இந்தியா, தமிழ்நாடு, தப்பிக்குமோ?

Rate this:
sankaseshan - mumbai,இந்தியா
11-ஏப்-201922:02:28 IST Report Abuse

sankaseshanஇதுவே இறுதி ஊர்வலம்

Rate this:
kudiyanathfans - ayodhya,இந்தியா
11-ஏப்-201918:51:02 IST Report Abuse

kudiyanathfansதனியாக ஊர்வலம்

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X