பதிவு செய்த நாள் :
ஊழல் செய்வதற்காகவே ஆட்சிக்கு
வரத் துடிக்கிறது காங்கிரஸ்: மோடி

ஆமதாபாத்: ''ஊழல் செய்வதற்காகவே, மத்தியில் ஆட்சிக்கு வர, காங்கிரஸ் துடிக்கிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

ஊழல்,ஆட்சி,துடிக்கிறது,காங்கிரஸ்,மோடி


குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஜுனாகத் பகுதியில், நேற்று நடந்த, பா.ஜ., தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில்,

பிரதமர் மோடி பேசியதாவது: மத்தியில், தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்ற பின், கடந்த ஐந்து ஆண்டுகளில், ஊழல்வாதிகளை சிறை வாசல் வரை அனுப்பி உள்ளோம். இன்னும் ஐந்து ஆண்டுகள் எங்களுக்கு கொடுத்தால், அவர்களை, சிறைக்கு உள்ளே அனுப்புவோம்.

பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஊழல் செய்த பலரது முகத்திரை கிழியும் என, காங்கிரசுக்கு தெரியும். அதனால் தான், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என, அந்த கட்சியினர் நினைக்கின்றனர். கடந்த சில நாட்களாக, காங்கிரஸ் பிரமுகர்களின் வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தி, பல கோடி ரூபாயை, பறிமுதல் செய்துள்ளனர். இந்தப் பணம் அனைத்தும், ஏழைகளிடம் கொள்ளை அடிக்கப்பட்டவை.

Advertisement

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கவே, ஆட்சிக்கு வர, காங்கிரஸ் துடிக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக, வான்வழித் தாக்குதல் நடத்தினால், அது, எதிர்க்கட்சியினரைப் பாதிக்கிறது. பயங்கரவாதத்தை அழிக்க, முயற்சி செய்கிறேன். எதிர்க்கட்சிகள், என்னை ஆட்சியில் இருந்து அகற்ற நினைக்கின்றன.இவ்வாறு, மோடி பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-ஏப்-201919:59:21 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்தலைக்கு மேல் கத்தி. ஆதரித்தால் அமோக செல்வம், அமைச்சர் பதவி. எல்லா மாநிலங்களிலும், மத்தியிலும் ஆளும் கட்சிகள் அரங்கேற்றும் அசிங்க காட்சிகள். பாஜக, அதிமுக மெகா கூட்டணி, ஒரு லெட்டர்பேடு, ஜாதி சங்கம் விடலை. ஒவ்வொரு ஓட்டும் தேவையாம்.. பொறியில் அகப்பட்டு தண்ணீரில் மூழ்கிய பெருச்சாளிகள் போல தத்தளிக்கிறார்கள்..அதன் கீச்சு அலறல் தான் எல்லாம்.

Rate this:
kudiyanathfans - ayodhya,இந்தியா
11-ஏப்-201918:39:16 IST Report Abuse

kudiyanathfansஇதோ பாருடா மோடி துரை என்னமா கூவுறாரு . இவரு அப்படியே ரொம்ப உத்தமர் பாரு.

Rate this:
murugu - paris,பிரான்ஸ்
11-ஏப்-201914:33:33 IST Report Abuse

muruguதினதந்தி அதிமுகவுடன் தினகரனை இணைக்க முயற்சி எடுத்ததாக பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். சென்னையில், இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், இணைப்பு குறித்து ஏற்கனவே தம்பிதுரையிடம் பேசியதாக தெரிவித்தார். தேர்தலுக்கு பிறகு அதிமுகவுடன், தினகரன் இணைந்தால், ஒருவர் முதல்வராகவும், இருவர் துணை முதல்வராகவும் இருக்கலாம் என்பது தமது தனிப்பட்ட கருத்து என்று ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X