அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
துரைமுருகன் மகன் மீது வழக்கு
எந்நேரமும் கைதாக வாய்ப்பு?

வேலுார்: காட்பாடியில் சிக்கிய, 11.50 கோடி ரூபாய், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைத்திருந்ததாக தகவல் வெளியான நிலையில், வேலுார், தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த் உட்பட மூன்று பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

துரைமுருகன்,கதிர் ஆனந்த்,வழக்கு,எந்நேரமும் கைது?


வேலுார் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளராக, துரைமுருகனின் மகன், கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். காட்பாடியில் உள்ள இவரது வீடு மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து, நீதிமன்ற அனுமதியுடன் வழக்குப்பதிவு செய்து, அறிக்கை அனுப்ப, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். இதையடுத்து, வேலுார் லோக்சபா தொகுதி, தேர்தல் செலவின அலுவலர் சிலுப்பன், காட்பாடி போலீசில், 8ம் தேதி புகார் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது: மார்ச், 29ல், வேலுார் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் கதிர்ஆனந்த் வீட்டில் நடத்திய சோதனையில்,

19 லட்சத்து, 57 ஆயிரத்து, 10 ரூபாய் சிக்கியது. இது, கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கலின் போது கூறிய கையிருப்பு தொகையை விட, 10 லட்சத்து, 57 ஆயிரத்து, 10 ரூபாய் கூடுதலாக இருந்தது. அடுத்து, ஏப்., 1ல் வருமான வரித்துறையினர், காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில், தாமோதரன் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு பகுதியில் நடத்திய சோதனையில், 11 கோடியே, 48 லட்சத்து, 51 ஆயிரத்து, 800 ரூபாய் சிக்கியது. இதை, பூஞ்சோலை சீனிவாசன் என்பவர், வாக்காளர்களுக்கு வழங்க, வைத்திருந்ததாக தெரிவித்தார்.

எனவே, வேட்பு மனு தாக்கலின் போது, வழங்கிய உறுதிமொழி பத்திரத்தில், தவறான தகவல் கொடுத்தது மற்றும் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் வைத்திருந்தது குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, காட்பாடி, டி.எஸ்.பி., சேகர், இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர், புகாரின் மீது, எந்தெந்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்வது என, காட்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜெயசுதாகரிடம் ஆலோசனை நடத்தினர்.

அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய, மாஜிஸ்திரேட் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, கதிர்ஆனந்த், சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது,

Advertisement

பிரமாண பத்திரத்தில், தவறான தகவல் அளித்தல், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி செய்தல் ஆகிய பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்ட விபரம் குறித்த அறிக்கை, வேலுார் லோக்சபா தொகுதி தேர்தல் அதிகாரி, தமிழக தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைத்தார்.வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால், கதிர்ஆனந்த் உட்பட, மூவரும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

சந்திக்க தயார்:

குடியாத்தம் அடுத்த மோர்த்தானா அணை பகுதியில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கதிர் ஆனந்த், நிருபர்களிடம் கூறுகையில், 'வழக்கு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. வழக்கு குறித்து முழுமையாக அறிந்த பின்பே, அது பற்றி கூற முடியும். என் மீது எத்தனை வழக்கு போட்டாலும், அவற்றை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளேன்.' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
17-ஏப்-201909:50:21 IST Report Abuse

oceதுரை முருகனையும் சேர்த்து உள்ளே தள்ளுங்க.

Rate this:
Manian - Chennai,இந்தியா
13-ஏப்-201912:05:38 IST Report Abuse

Manianநேத்து நயைநா சொன்னதது என் மனசை தொட்டுடுச்சு. தமைப்பி கதிரு , நம்ம திராவிட மரபிலே முன்னாலே " ஆற்றுப்படை கண்ட அதியமான், கூறுவான் படாய் துடைத்த குறும்பன் சோழன்னு பெயர் வாசிக்குடானுக. நீ இப்போ ஜெயிலுக்கு போனாலும் அடுத்த ஏலக்ஷன் அஞ்சு வருசம் கழிச்சு வரும்போது, "காவல் சிறை கண்ட கதிர்ன்னு" ஒரு அடைமொழி கொடுத்து எப்பயும் உன்னிய ஜெயிக்க வாசிச்சு போடுவேன். தளபதி மொதலாறு, ராகுல் பார்ப்பரிதாமாரை வந்தா, எந்த சட்டமும் உன்னிய தொட முடியாதுன்னரு. எவ்ளோ தீர்க்கதரிசி. அப்போ வேலைவாசிக்கு துன்ஹட்டப்படி டியூஷன் பயங்க கையிலே உன் புத்திசாலிதனனுக்கு அன்பளிப்புன்னு ஆளுக்கு ஒரு இருபதாயிரம், இஆப்டி புள்ளேயே பெத்தேன்னு அம்மாவுக்கு ஒரு தங்க சங்கிலி, அப்பாவுக்கு வாச்சு, ஜரிகை வேஷ்ட்டி-சடடை கொடுத்திடலாம். எலெக்ஷணகாரன் என்ன செய்ய முடியும். ?

Rate this:
R.CHELLAPPA - Vadodara,இந்தியா
11-ஏப்-201921:38:12 IST Report Abuse

R.CHELLAPPAஅன்று நேர்மையான திரு. காமராஜரை தோர்கடித்தது சீனுவாசன். நாளை திமுகாவை தோற்க காரணமாக இருக்க போவது சீனிவாசன்.

Rate this:
மேலும் 49 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X