அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
லோக்சபா தேர்தலை விடுங்க;
இடைத்தேர்தலை கவனிங்க!
அ.தி.மு.க., - மா.செ.,க்களுக்கு தலைமை உத்தரவு

சென்னை: கருத்து கணிப்புகள் எதிராக உள்ளதால், 'இடைத்தேர்தல் நடக்கவுள்ள சட்டசபை தொகுதிகளுக்கு உடனடியாக செல்லுங்கள்' என, அ.தி.மு.க., மாவட்டச் செயலர்களுக்கு, கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

லோக்சபா,தேர்தல்,விடுங்க,இடைத்தேர்தல்,கவனிங்க


லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும், ஏழு நாட்களே உள்ள நிலையில், பல கருத்து கணிப்புகளின் முடிவுகள், அ.தி.மு.க., கூட்டணிக்கு எதிராகவே உள்ளன. மேலும், உளவுத்துறை அதிகாரிகளும், 'இடைத்தேர்தல் நடக்கவுள்ள, 18 சட்டசபை தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' என, அ.தி.மு.க., தலைமைக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனால், ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள, மாவட்டச் செயலர்களை, இடைத்தேர்தல் நடக்கும் சட்டசபை தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தும்படி, அ.தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது.



இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: கூட்டணியில், பா.ம.க., - தே.மு.தி.க., - பா.ஜ., இடம் பெற்றுள்ளதால், ஓட்டு சதவீத கணக்குப்படி, 30க்கும் மேற்பட்ட லோக்சபா தொகுதிகள், 10 சட்டசபை தொகுதிகளில், எளிதாக வெற்றி பெற்று விடலாம் என நினைத்தோம். ஆனால், கள நிலவரமும், கருத்துக் கணிப்புகளும் அதற்கு மாறாக உள்ளன. தினகரன் கட்சி பிரிக்கும் ஓட்டுகளால், அ.தி.மு.க.,வின் வெற்றி பாதிக்கப்படும் என தெரிகிறது.

இதனால், லோக்சபா தேர்தலை, மற்ற நிர்வாகிகள் பார்த்து கொள்ள செய்துவிட்டு, இடைத்தேர்தல் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, மாவட்டச் செயலர்களை, கட்சித் தலைமை முடுக்கி விட்டுள்ளது. கூட்டணி கட்சி நிர்வாகிகளை அனுசரித்து, பலமாக கவனிக்கவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்தியில், பா.ஜ., தான் மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது. ஆனால், தமிழகத்தில், அ.தி.மு.க., கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படும் என்ற தகவலால், ஆட்சியை காப்பாற்றி கொள்ள, வாக்காளர்களுக்கு 'தாராளம்' காட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

முதல்வரிடம் பிரேமலதா புகார்?

தர்மபுரி மாவட்டத்தில், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில், இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றிக்காக, கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட, சேலம் மாவட்டம், ஆத்துார், ஏற்காடு, கெங்கவல்லியைச் சேர்ந்த, அ.தி.மு.க.,வினர் படையெடுத்துள்ளனர். இதனால், இந்த தொகுதிகளில், தே.மு.தி.க., வேட்பாளர் சுதீஷ் பிரசாரத்தில், மந்த நிலை காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று சேலத்தில் முகாமிட்டு இருந்த முதல்வர், பழனிசாமியை தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா, சுதீஷ் ஆகியோர், சந்தித்தனர். அப்போது, அ.தி.மு.க.,வினர், இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிக்கு படையெடுத்துள்ளதை, தே.மு.தி.க., தரப்பு புகாராக தெரிவித்துள்ளது. அதைக் கேட்ட முதல்வர், பழனிசாமி தேர்தல் பணியை தொய்வின்றி மேற்கொள்வதோடு, வெற்றிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக, உறுதி அளித்துள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
12-ஏப்-201919:11:20 IST Report Abuse

oceவர இருக்கும் தமிழக வாக்களிப்பு தொடங்கும் நேரம் சரியில்லை. புதிய ஆட்சி எதுவும் தமிழகத்தில் வர வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவில்லை.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
12-ஏப்-201919:02:17 IST Report Abuse

oceஏப்.18 வியாழக்கிமை காலை வாக்கு பதிவு துவங்க இருக்கிறது. இதில் எவருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை. மறு தேர்தலுக்கு வாய்ப்பும் வரலாம்.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
11-ஏப்-201917:17:20 IST Report Abuse

oceஸ்டாலின் உள்ளே வர் பழனிச்சாமி ராஜினாமா செய்து ஓடி விடவேண்டுமா.

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X