பிலிபிட், உத்தர பிரதேச மாநிலம், பிலிபிட் லோக்சபா தொகுதியில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர், வருண், 38 ஆயிரம் ரூபாய் தொலைபேசி கட்டணம் நிலுவையில் வைத்திருப்பதாக, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சார்பில், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
லோக்சபா தேர்தலில், இங்குள்ள பிலிபிட் தொகுதியில் வருணும், சுல்தான்பூர் தொகுதியில், அவரது தாயும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சருமான, மேனகாவும், பா.ஜ., சார்பில் போட்டியிடுகின்றனர்.

நிராகரிப்பு
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுவுடன் அரசு துறைகளின் தடையில்லா சான்றும் இணைக்க வேண்டும் என்றும், தடையில்லா சான்று இல்லாமல் வரும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் என் றும், தேர்தல் ஆணையம் அறிவித்துஉள்ளது.இந்நிலை யில், தேர்தல் ஆணையத்திடம், அரசுத் துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் அளித்த புகாரில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த, 2009 - 2014ல், பிலிபிட் தொகுதி, எம்.பி., வருண், அவரது அலுவலக பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட, பி.எஸ்.என்.எல்., தொலைபேசி மற்றும் இணையதள பயன்பாட்டுக்கு, 38 ஆயிரத்து, 616 ரூபாய் கட்டணம் செலுத்தவில்லை.
சான்று
இது குறித்து பலமுறை கடிதம் அனுப்பியும், கட்டணம் செலுத்தவில்லை.
எனவே, தற்போது, பிலிபிட் தொகுதியில் போட்டியிடும் வருணின் வேட்பு மனுவுடன், பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தின் தடையில்லா சான்று இல்லாவிட்டால், வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.